under review

திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 04:47, 27 October 2023 by Tamizhkalai (talk | contribs)

திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை (1915-மே 29, 1968) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருவிழந்தூரில் பசுபதிப் பிள்ளை - தயாளம்மாள் ஆகியோரின் மகனாக 1915-ஆம் ஆண்டு ராமதாஸ் பிள்ளை பிறந்தார்.

ராமதாஸ் பிள்ளை திருவாழப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் தவில் கலையைக் கற்றார்.

தனிவாழ்க்கை

ராமதாஸ் பிள்ளைக்கு ஜீவரத்தினம்மாள் என்ற மூத்த சகோதரி ஒருவர் இருந்தார்.

கருப்பூர் நடேச நாதஸ்வரக்காரரின் மகள் சுந்தராம்பாள் என்பவரைத் ராமதாஸ் பிள்ளை திருமணம் செய்தார். இவர்களுக்கு சாந்தா (கணவர்: தவில் கலைஞர் வேதாரண்யம் பாலசுப்பிரமணியம்), பிருந்தா (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருச்சேறை தீனதயாளன்), சசி (இளவயதில் மரணம்) என்ற மூன்று மகள்களும், பாலு (தவில் கலைஞர்) என்ற மகனும் இருந்தனர்.

இசைப்பணி

ராமதாஸ் பிள்ளையின் வாசிப்பில் காலப்பிரமாணம் சுத்தமாக இருக்கும்.

மாணவர்கள்

திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • விஸ்வநாதன் (கேரளா)
  • தாமோதரன்
  • திருவிழந்தூர் சுப்பிரமணிய பிள்ளை
  • திருவாழப்புத்தூர் சுப்பராய பிள்ளை
உடன் வாசித்த கலைஞர்கள்

திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

திருவிழந்தூர் ராமதாஸ் பிள்ளை மே 29, 1968 அன்று காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page