being created

பாரத சக்தி மகா காவியம்

From Tamil Wiki
Revision as of 23:52, 15 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாரத சக்தி மகா காவியம் - சுத்தானந்த பாரதியார்

பாரத சக்தி மகா காவியம் (1948) சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியம். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தகுந்த காப்பிய நூல்களுள் ஒன்று. ‘சமயோக வேதம்’ என்றும் இந்நூல் அழைக்கப்படுகிறது. அனைத்தும் மதங்களுக்கும் சமமான பல கருத்துக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு தமிழக அரசின் இராஜராஜன் விருது கிடைத்தது.

பாரத சக்தி மகா காவியம் - சக்தி இதழ், 1939

பிரசுரம், வெளியீடு

அரவிந்தர் ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மௌன யோகத்தில் இருந்த சுத்தானந்த பாரதியார், யோகி அரவிந்தர் எழுதிய ‘சாவித்ரி’ காப்பியம் பற்றி அறிந்தார். அதன் தாக்கத்தால் தமிழில் தானும் ஒரு காப்பியம் இயற்ற வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்படி அவர் இயற்றியதுதான் 'பாரத சக்தி மகா காவியம்'. இக்காப்பியம், வை. கோவிந்தன் பதிப்பாளராக இருந்த ‘சக்தி’ இதழில், 1939- முதல் வெளிவந்தது. 1948-ல் நூலாக அச்சிடப்பட்டது. அதன் பின் பல மறுபதிப்புகள் வெளிவந்தன.

நூல் அமைப்பு

பாரத சக்தி மகா காவியம் ஐந்து காண்டங்களை உடையது. அவை

  1. சித்தி காண்டம்
  2. கௌரி காண்டம்
  3. சாதன காண்டம்
  4. தானவ காண்டம்
  5. சுத்த சக்தி காண்டம்

ஒவ்வொரு காண்டமும், பல்வேறு படலங்களைக் கொண்டுள்ளது. பாரத சக்தி மகா காவியத்தில் மொத்தம் 146 படலங்கள் இடம்பெற்றுள்ளன.

சித்தி காண்டம்

சித்தி காண்டம் 25 படலங்களைக் கொண்டது. அவை,

  1. மங்கல வாழ்த்துப் படலம்
  2. சிருட்டிப் படலம்
  3. அருட் குலப் படலம்
  4. பாரத புண்ணிய பூமிப் படலம்
  5. சித்தி நகரப் படலம்
  6. சத்தியன் அரசியற் படலம்
  7. தியானக் காட்சிப் படலம்
  8. முனியுரைப் படலம்
  9. சுத்த ஜனனப் படலம்
  10. சுத்த நாமப் படலம்
  11. குழந்தைப் படலம்
  12. குருகுலப் படலம்
  13. பொறாமைப் படலம்
  14. புறப்பாட்டுப் படலம்
  15. யாத்திரைப் படலம்
  16. வீர சிவாஜிப் படலம்
  17. பஞ்சவடிப் படலம்
  18. இராமாயணப் படலம்
  19. ஒற்றுக்கேள்விப் படலம்
  20. இராம தாஸ் படலம்
  21. கலி சினந்த படலம்
  22. பஞ்சவடிப் போர் வென்ற படலம்
  23. அபயமளித்த படலம்
  24. அரசவைப் படலம்
  25. வரவேற்புப் படலம்
கௌரி காண்டம்

கௌரி காண்டம், 37 படலங்களைக் கொண்டது.

  1. ஆலோசனைப் படலம்
  2. சுத்த ஜயந்திப் படலம்
  3. கௌரி குலப் படலம்
  4. சம்மதப் படலம்
  5. கௌரி காதற் படலம்
  6. இராமகிருஷ்ணப் படலம்
  7. விவேகானந்தப் படலம்
  8. ஊர் மகிழ் படலம்
  9. இல்லறவொழுக்கப் படலம்
  10. திருமணப் படலம்
  11. வாழ்க்கைப் படலம்
  12. சிந்தனைப் படலம்
  13. மாயா மானசப் படலம்
  14. பட்டாபிஷேகப் படலம்
  15. சுத்த வாசகப் படலம்
  16. நன்றி யுரைத்த படலம்
  17. கண்ணன் படலம்
  18. மகாபாரதப் படலம்
  19. பகவத் கீதைப் படலம்
  20. பீஷ்ம விரதப் படலம்
  21. பொய்வேடப் படலம்
  22. கார்த்திகைப் படலம்
  23. போலித் துறவிகள் படலம்
  24. புரட்சிப் படலம்
  25. போர்ச்சபைப் படலம்
  26. பகதூர் படலம்
  27. சத்தியன் உறுதிப் படலம்
  28. குருகோவிந்தப் படலம்
  29. படை யெழுந்த படலம்
  30. மாயன் வதைப் படலம்
  31. பிரதாபசிங்கப் படலம்
  32. போரணிந்த படலம்
  33. கலி கலங்கிய படலம்
  34. உறுதிப் படலம்
  35. இறுதிப் படலம்
  36. வெற்றிப் படலம்
  37. கௌரி விலாசப் படலம்
சாதன காண்டம்

சாதன காண்டம், 32 படலங்களைக் கொண்டுள்ளது.

  1. கருணைப் படலம்
  2. சாசனப் படலம்
  3. துறவுப் படலம்
  4. காமபுரிப் படலம்
  5. மழைபொழிந்த படலம்
  6. புத்த ஜோதிப் படலம்
  7. புத்த தருமப் படலம்
  8. மகாவீரப் படலம்
  9. ஜைன தருமப் படலம்
  10. கிறிஸ்து ஜோதிப் படலம்
  11. பைபிள் படலம்
  12. நபிநாயகப் படலம்
  13. அல்குரான் படலம்
  14. குரு நானகப் படலம்
  15. கிரந்த ஸாகெபுப் படலம்
  16. ஜரதுஷ்டிரப் படலம்
  17. புயலிடிப் படலம்
  18. வேதபுரிப் படலம்
  19. வேத சாரப் படலம்
  20. சங்கரகீதப் படலம்
  21. சிவகிரிப் படலம்
  22. ஞானோபதேசப் படலம்
  23. ஆத்மநாதப் படலம்
  24. சாந்தன் வந்த படலம்
  25. அருண ஜோதிப் படலம்
  26. ஞானமாலைப் படலம்
  27. அருட் சோதிப் படலம்
  28. புது யோகிப் படலம்
  29. இமாலயப் படலம்
  30. சமயோக சமாஜப் படலம்
  31. சாதனப் படலம்
  32. பரமாத்ம குருப் படலம்
தானவ காண்டம்

தானவ காண்டம், 31 படலங்களைக் கொண்டுள்ளது.

  1. போகர் வரவுப் படலம்
  2. சாமளப் படலம்
  3. கடற் படலம்
  4. சீகரப் படலம்
  5. தானவர் தோன்றிய படலம்
  6. மாவலி எழுந்த படலம்
  7. நிசாசரப் படலம்
  8. மாவலி இசைந்த படலம்
  9. அந்தரங்கப் படலம்
  10. அசுராலோசனைப் படலம்
  11. போகசாலைப் படலம்
  12. சக்தி விருப்பப் படலம்
  13. வெள்ளி நீதிப் படலம்
  14. கலை வழிப் படலம்
  15. யாழிசைப் படலம்
  16. கலைக்கோயிற் படலம்
  17. குரல்கேட்ட படலம்
  18. சங்கப் படலம்
  19. ஆத்திரப் படலம்
  20. தெய்வ வாதப் படலம்
  21. கவலை தீர்த்த படலம்
  22. மகாமுனிப் படலம்
  23. குண்டலகேசிப் படலம்
  24. பத்தினிப் படலம்
  25. தண்டனைப் படலம்
  26. கிளர்ச்சிப் படலம்
  27. சக்தி யெழுந்த படலம்
  28. உண்ணாவிரதப் படலம்
  29. இடி முழக்கப் படலம்
  30. சங்கத்திற்கு நலமுரைத்த படலம்
  31. சீகரன் மகிழ்ந்த படலம்
சுத்த சக்தி காண்டம்

சுத்த சக்தி காண்டம், 21 படலங்களைக் கொண்டது.

  1. புதுநாட் படலம்
  2. போற்றிப் படலம்
  3. கலி மீண்ட படலம்
  4. தூமகேதுப் படலம்
  5. போராடிய படலம்
  6. சக்தி விஜயப் படலம்
  7. யோக சித்தி எழுந்த படலம்
  8. யோக சித்திப் படலம்
  9. அகண்ட சாதனப் படலம்
  10. மஹாத்ம விஜயப் படலம்
  11. திருத்தொண்டர் படலம்
  12. விழித்தெழுந்த படலம்
  13. தூமகேது திகைத்த படலம்
  14. மோகி யிறுதிப் படலம்
  15. கலி பணிந்த படலம்
  16. புது மலர்ச்சிப் படலம்
  17. அணுப்போர் படலம்
  18. சத்தியன் வென்ற படலம்
  19. சுத்த மங்களப் படலம்
  20. சுத்த விஜயப் படலம்
  21. சுத்த வாணிப் படலம்

கதைக் குறிப்பு

பாடல் சிறப்பு

மதிப்பீடு

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.