under review

திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை

From Tamil Wiki
Revision as of 21:11, 16 June 2023 by Logamadevi (talk | contribs)

திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை (1887 - ஆகஸ்ட் 29, 1963) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாரூர் மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் தவில் கலைஞர் ராமஸ்வாமி பிள்ளை - கமலாம்பாள் இணையருக்கு 1887-ஆம் ஆண்டு ஒரே மகனாகப் பிறந்தார் ருத்ராபதி பிள்ளை.

ருத்ராபதி பிள்ளை தந்தை ராமஸ்வாமி பிள்ளையிடம் தவில் கற்றார்.

தனிவாழ்க்கை

மிருதங்கக் கலைஞர் திருப்புகலூர் ஸ்வாமிநாத பிள்ளையின் மகள் தனபாக்கியம் அம்மாள் என்பவரை ருத்ராபதி பிள்ளை மணந்தார். இவர்களுக்கு கமலாம்பாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் குழிக்கரை காளிதாஸ் பிள்ளை), நாகரத்தினம் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருமாகாளம் சோமாஸ்கந்த பிள்ளை), ஜானகி (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருமலைராயன் பட்டணம் சுந்தரராஜ பிள்ளை) என்னும் மூன்று மகள்களும், சிவராமன் (தவில் கலைஞர்) என்ற மகனும் இருந்தனர்.

இசைப்பணி

ருத்ராபதி பிள்ளை வாழ்நாள் முழுவதும் விரல்களில் கூடு அணியாமலேயே தவில் வாசித்தவர். இயற்கையான கைநாதம் கொண்ட ருத்ராபதி பிள்ளையின் வாசிப்பில் பெரும் ஒலியை வெறும் விரல்களாலேயே எழுப்பும் திறம் கொண்டிருந்தார். ருத்ராபதி பிள்ளை பல ஆதீனங்களிலும் சமஸ்தானங்களிலும் பரிசுகள் பல பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் ருத்ராபதி பிள்ளைக்கு 1962-ஆம் ஆண்டு 'கலாசிகாமணி’ விருது வழங்கியது.

உடன் வாசித்த கலைஞர்கள்

திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மாணவர்கள்

திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளையின் முக்கியமான சில மாணவர்கள்:

  • கூறைநாடு பழனிவேல் பிள்ளை
  • திருவீழிமிழலை செல்லையா பிள்ளை

மறைவு

திருச்செங்காட்டங்குடி ருத்ராபதி பிள்ளை ஆகஸ்ட் 29, 1963 அன்று திருச்செங்காட்டங்குடியில் காலமானார்.

உசாத்துணைeditedit source

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page