being created

ஆழ்வார்கள்

From Tamil Wiki
Revision as of 19:40, 3 November 2022 by Jeyamohan (talk | contribs)
ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றித் தமிழ்ப் பாசுரங்கள் இயற்றிய வைணவ அடியார்கள்.தமிழில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அல்லது ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர்.

சொற்பொருள்

ஆழ்வார் என்னும் சொல்லுக்கு இறைவனின் கல்யாணகுணங்களில் ஆழ்ந்து கிடப்பவர் என்று பொருள் என ம.பெ.ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் ‘அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த வாழ்வார்கள்’என்று ஆழ்வார்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

அருளிச்செயல்

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. முன்பு இது அருளிச்செயல் என அழைக்கப்பட்டது ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்களின் பட்டியலை மணவாள மாமுனிகள் அவருடைய உபதேச ரத்னமாலை என்னும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை

அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் – துய்யபட்ட

நாதன் அன்பர் தாள் தூளி நற்பாணன் நற்கலியன்

ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு.

பட்டியல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர். முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள.

மதுரகவி ஆழ்வார் இறைவனைப் பாடாமல் தன்னுடைய குருவான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடினார்.

தமிழில் பக்தி இலக்கிய மரபில் ஆழ்வார்களின் பங்கு இன்றியமையாதது. தமிழ்ச் சுவையும் பக்தி பாவமும் தவழும் அற்புதமான பாசுரங்களை எழுதி நாடெங்கும் வைணவ நெறி பரவக் காரணமானவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் பாசுரங்கள் வேதங்களுக்கு நிகராகப் போற்றப்படுபவை. பெருமாள் கோயில்கொண்டுள்ள அனைத்துத் தலங்களிலும் தவறாமல் இசைக்கப்படும் பெருமைகொண்டவை ஆழ்வார்களின் பாசுரங்கள்.

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.