விக்னேஷ் ஹரிஹரன்
விக்னேஷ் ஹரிஹரன் (பிறப்பு: மே 22, 1999) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாளர். விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் சிறுகதைகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
விக்னேஷ் ஹரிஹரன் சென்னையில் ராஜகோபால், சீதா இணையருக்கு மூத்த மகனாக மே 22, 1999-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தங்கை. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் பள்ளியில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா சட்டக்கல்லூரியில் B.A. LL.B. (Hons.) பட்டம் பெற்றார். அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். சென்னையிலுள்ள School of Excellence in Law-இல் LLM பயின்று வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
விக்னேஷ் ஹரிஹரனின் முதல் மொழிபெயர்ப்பு சு.வேணுகோபாலின் Resurrection' (தமிழில் 'புத்துயிர்ப்பு')என்ற கதை 2022-இல் மொழி விருதுப்பட்டியலில் இடம்பெற்றது. தமிழில் ரசனை, விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்ந்து தமிழிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சிறுகதைகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறார்.
நீலி, வல்லினம், கனலி, வாசகசாலை, ஆவநாழி, சொல்வனம், காலச்சுவடு, தமிழ்ஹிந்து ஆகியவற்றில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. இலக்கிய கூட்டங்களில் உரை நிகழ்த்துகிறார். பாரதியார், தி. ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
படைப்பு இடம்பெற்ற நூல்கள்
- The Mozhi Anthology of Short Stories (South Side Books) (su. Venugopal's 'Resurrection')
உரைகள்
- வாழ்க்கைப் பாதை செறுகாடு | நிர்மால்யா ஒரு நாள் கருத்தரங்கம் | விக்னேஷ் ஹரிஹரன்
- அம்மன் நெசவு | எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் | விக்னேஷ் ஹரிஹரன் உரை
- சுரேஷ்குமார இந்திரஜித் புனைவுலகம் | சிறுகதைகள் அமர்வு | விக்னேஷ் ஹரிஹரன்
- அகரமுதல்வன் - 'போதமும் காணாத போதம்' | விக்னேஷ் ஹரிஹரன்
- அருண் நரசிம்மன் எழுதிய "எட்டணாவில் உலகஞானம்" நூல் வெளியீட்டு விழா
- இசையின் “களிநெல்லிக்கனி” நூல் குறித்த உரையாடல் | பாவண்ணன், ஸ்டாலின் ராஜாங்கம், விக்னேஷ் ஹரிஹரன்
- காலமும் ஐந்து கதைகளும் உரை - திருமிகு.விக்னேஷ் ஹரிஹரன் - Anna Centenary Library, Chennai
இணைப்புகள்
- விக்னேஷ் ஹரிஹரன் - நீலி மின்னிதழில் எழுதிய கட்டுரைகள்
- விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – விக்னேஷ் ஹரிஹரன்
- விலா எலும்புகளின் பிரகடனம் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்
- கர்நாடகத்தின் யக்ஷகானம்- சிவராம் காரந்த் - குருகு
- நமக்குத் தேவை நவீன நாடகங்கள் - சொல்வனம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.