ஒரூஉத்தனார்
ஒரூஉத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
ஒரூஉத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
ஒரூஉத்தனார் பாடிய பாடல் புறநானூறு 275 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. போர்களத்தில் எதிர் படையினருடன் தனித்து நின்று போரிட்டு கொண்டிருக்கும் தனது தோழனுக்கு உதவுவதற்காக பகை வீரர்களை கொன்று குவித்து கொண்டு முன்னேறும் வீரன் ஒருவனின் பெருமையை கூறுவதாக தும்பைத் திணையில் எருமை மறம் துறையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வளைந்த கண்ணி மாலையும் வளைவுமிக்க நல் ஆடைகளும் அரசன் விரும்பியதை சொல்லும் திறன் ஆகிய மூன்று தகுதிகளும் போரில் அஞ்சாது எதிரிபடையினரை கொன்று குவித்து செல்லும் வீரர்களுக்கே உரியவை என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.
- போரிட்டு செல்லும் வீரன் தனது கூரிய எதிரிபடையினரை கிழித்து செல்கிறான்.
- உவமைகள்: தனித்து போரிடும் தனது தோழனுக்கு உதவும் பொருட்டு செல்லும் வீரனின் தோழன் மீதான அன்பானது, இளம் கன்றின் மீது தாய் பசு கொண்ட அன்பிற்கு நிகராகும்.
- போர்வீரன் கொன்று குவித்த வீரர்களின் உடலில் இருந்து சரிந்து விழுந்த குடல்கள் யானையை பிணைக்கும் சங்கிலியை போல வீரனின் காலை சுற்றி கொண்டிருந்தன.
பாடல் நடை
புறநானூறு - 275
- திணை: தும்பை
- துறை:எருமை மறம்
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன்
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி,
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது,
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப,
கன்று அமர் கறவை மான,
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- புறநானூறு - 275:puram400
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.