under review

கொள்ளம் பக்கனார்

From Tamil Wiki

கொள்ளம் பக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கொள்ளம் பக்கனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பக்கனார் என்னும் பெயர் உடையவர். கொள்ளம் என்னும் ஊரினை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

கொள்ளம் பக்கனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 147-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் அவளது அன்னைக்கு தெரியவர, தலைவி இல்லச்சிறையிலிருப்பதை தலைவனுக்கு உணர்த்த தோழி கூற்றாக குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • தேன் கூடுகள் நிறைந்த மலைச்சாரலில் பயிரிடப்பட்டிருக்கும் தினை வயலில் விளைந்துள்ள தானியங்களை செவ்வாய் உடைய கிளிகள் கவர்ந்து செல்லாது காவல் காப்பர்.
  • அருவிகள் பெருகி வழிந்தோடும் மலைநாட்டை சேர்ந்தவன் தலைவன்.
  • காதல் கொண்ட இளமகளிர் மூங்கில் பட்டை பிளந்து செய்யப்பட்ட தட்டுகளில் மலர்களை பறித்து கொண்டு வந்து சுனைகளில் நீராடி மகிழ்ந்து பூக்களை அணிவர்.

பாடல் நடை

நற்றிணை - 147

குறிஞ்சி திணை துறை: சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

யாங்கா குவமோ அணிநுதற் குறுமகள்
தேம்படு சாரல் சிறுதினைப் பெருங்குரல்
செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற்று
எவ்வாய்ச் சென்றனை அவணெனக் கூறி
அன்னை ஆனாள் கழற முன்நின்று
அருவி ஆர்க்கும் பெருவரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து
சுனைபாய்ந் தாடிற்றும் இலனென நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அதுகேட்டுத்
தலையிறைஞ் சினளே அன்னை
செலவொழிந் தனையால் அளியைநீ புனத்தே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.