இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1974
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1974
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | ஒரு ஜட்ஜ் ரிடையராகிறார் | பத்ரிநாத் | குமுதம் |
பிப்ரவரி | தனுமை | வண்ணதாசன் | தீபம் |
மார்ச் | வைராக்கியம் | சிவசங்கரி | தினமணி கதிர் |
ஏப்ரல் | ஒரு வித்தியாமான பெண் | கண்ணபிரான் | கணையாழி |
மே | கரையும் உருவங்கள் | வண்ணநிலவன் | தீபம் |
ஜூன் | சிறிய வயதில் பெரிய அனுபவம் | கோவி. மணிசேகரன் | கல்கி |
ஜூலை | முதல் பிறை | சு. மோகனசந்திரன் | செம்மலர் |
ஆகஸ்ட் | நீலவானத்தில் வெள்ளை நாரைகள் | வெ. ஜானகி | கல்கி |
செப்டம்பர் | சிவப்புச் சட்டை | தூன் | கல்கி |
அக்டோபர் | உயிர்கள் | எழிலமுதன் | கணையாழி |
நவம்பர் | சக்கரம் நிற்பதில்லை | ஜெயகாந்தன் | தினமணி கதிர் |
டிசம்பர் | கருணை மனு | லிங்கன் | தாமரை |
1974 -ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1974-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, வண்ணதாசன் எழுதிய ‘தனுமை’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சுஜாதா இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை வி.எம். முத்துராமலிங்கம் தேர்ந்தெடுத்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Jan-2023, 05:45:42 IST