under review

தசாங்கப்பத்து

From Tamil Wiki
Revision as of 06:20, 7 May 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: ==அடிக்குறிப்புகள்== <references />)

தசாங்கப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தசாங்கம் என்ற சொல் பத்து உறுப்புகள் (தசம் -பத்து, அங்கம் -உறுப்பு) எனப் பொருள்படும். மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, யானைப்படை, குதிரைப்படை, கொடி, முரசு, செங்கோல் எனும் பத்தும் அரசுக்கு உரிய உறுப்புக்களையும் பத்து நேரிசை வெண்பாக்களால் பாடுவது தசாங்கப்பத்து[1].

தசாங்கப்பத்து பத்து அங்கங்களின் வர்ணனையாக அமைவதால் பிரபந்தத் திரட்டு இதனைத் தசாங்க வன்னிப்பு(வர்ணனை) எனக் குறிப்பிடுகிறது.

மாணிக்கவாசகரின் திருத்தசாங்கம் தசாங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட முதல் சிற்றிலக்கியம். சொரூபானந்தர் மீது தத்துவராயர் 15-ம் நூற்றாண்டில் பாடிய தத்துவ போதம் என்னும் தசாங்கம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய 'தசாங்க வகுப்பு', நவீன இலக்கியத்தில் பாரதியின் 'பாரத தேவியின் திருத்தசாங்கம்' ஆகியவையும் தச்சங்கப்பத்து என்னும் வகைமையில் இயற்றப்பட்ட சில சிற்றிலக்கியங்கள்.

அரசர் அல்லது தேவர்க்குரிய பத்து சின்னங்களை(உறுப்புகள்) நூறு பாடல்களில் பாடுவது சின்னப்பூ.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 40


✅Finalised Page