first review completed

யாழ்ப்பாணக் கல்லூரி

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
யாழ்ப்பாணக் கல்லூரி

யாழ்ப்பாணக் கல்லூரி (1972) (Jaffna College) இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டை என்ற ஊரில் அமைந்துள்ள கல்விநிறுவனம் அமெரிக்க கிறிஸ்தவ மறைப்பணியாளர்களால் 1823-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வட்டுக்கோட்டை குருமடம் (பட்டிக்கோட்டா செமினரி) 1867-ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கப்பட்டு 1872-ல் யாழ்ப்பாணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

வரலாறு

1816-ஆம் ஆண்டில் அமெரிக்க இலங்கை மிஷன் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கிளைகளில் ஒன்று வட்டுக்கோட்டையிலும் நிறுவப்பட்டது. அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஆரம்பித்து நடத்தியது. இவ்வகையில் முதன் முதலாக தெல்லிப்பளையில் 'பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்’ (தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) ஆரம்பிக்கப்பட்டது. வட்டுக்கோட்டையில் 1823-ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை குருமடம் (Batticotta Seminary) நிறுவப்பட்டது. இதன் அதிபராக டேனியல் பூர் இருந்தார். இம்மதப்பள்ளி அங்கு சேர்க்கப்படும் மாணவர்களை கிறித்துவத்துக்கு மதம் மாற்றுவதையே முக்கிய நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான மாணவர்கள் தமது இந்து சமய நம்பிக்கையையே கடைப்பிடித்து வந்தனர். இதனை அடுத்து 1855-ஆம் ஆண்டில் இம்மதப்பள்ளி மூடப்பட்டது.

பட்டிக்கோட்டா செமினரியின் பழைய மாணவர்களும், உள்ளூர் கிறித்தவர்களும் இப்பள்ளியை மீளத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விட்டதை அடுத்து ஜூலை 3,1872-அன்று இக்கல்லூரி யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் மீளவும் பழைய கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.இ.பி.ஹேஸ்டிங்ஸ் அதன் முதல் முதல்வராக ஆனார். யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் இன்று பெரிய நிறுவனமாகச் செயல்படுகிறது.

பழைய மாணவர்கள்

  • அலன் ஆபிரகாம் - வானியலாளர்
  • க. பாலசிங்கம் - இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
  • வைத்திலிங்கம் துரைசுவாமி - இலங்கை அரசாங்க சபை சபாநாயகர்.
  • ஹண்டி பேரின்பநாயகம் - கல்விமான், அரசியல்வாதி
  • கா. இந்திரபாலா - பேராசிரியர்
  • எஸ். ஆர். கனகநாயகம் - செனட்டர்
  • பி. நாகலிங்கம் - செனட்டர்
  • எஸ். ஏ. ரகீம் - மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்
  • சுப்பிரமணியம் சிவநாயகம் - பத்திரிகையாளர்
  • க. துரைரத்தினம் - பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினர்
  • சா. ஜே. வே. செல்வநாயகம் - அரசியல்வாதி, வழக்கறிஞர்
  • ஆணல்ட் சதாசிவம்பிள்ளை - தமிழறிஞர், தமிழாசிரியர்
  • சீலன் கதிர்காமர் - வரலாற்றாளர்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.