under review

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி

From Tamil Wiki
யூனியன் கல்லூரி, பழையசர்ச்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816-ம் ஆண்டில் அமெரிக்க மிஷனறியான டேனியல் பூர் (Daniel poor) நிறுவினார்.

பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818-ல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது.

1940-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகின்றது.

உசாத்துணை


✅Finalised Page