under review

கொச்சகக் கலிப்பா

From Tamil Wiki
Revision as of 23:23, 1 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கலிப்பாவின் உறுப்புக்களில் சில அமைந்தும், சில முறை மாறியும், மிகுந்தும், குறைந்தும் வரும் கலிச் செய்யுள்கள், கொச்சகக் கலிப்பா எனப்படும். ஒத்தாழிசைக் கலிப்பா, வெண் கலிப்பாவிற்கு மாறான கலிப்பாக்களை கொச்சகக் கலிப்பா என்பர். கொச்சை என்றால் சிறப்பில்லாதது என்பது பொருள்.

கொச்சகக் கலிப்பா இலக்கணம்

தரவே தரவிணை தாழிசை தாமுஞ் சிலபலவாய்

மரபே யியன்று மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்

அரவே ரகலல்கு லம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்

குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர்க் கொச்சகமே

- என்கிறது, யாப்பருங்கலக் காரிகை.

தரவு முதலான சில உறுப்புகள் வரும்.

உறுப்புகள் முறை மாறியும், மிகுந்தும், குறைந்தும் வரும்.

கலிப்பாவில் வராத தேமா, புளிமா, கருவிளங்கனி, கூவிளங்கனிச் சீர்கள் இடம் பெறும்.

ஒரு தரவு வந்தும், இரண்டு தரவு வந்தும், தாழிசைகள் சில வந்தும், தாழிசைகள் பல வந்தும், தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளும் தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும், ஆசிரியத்தினோடும், மயங்கியும் வரும் பாக்கள் அனைத்தும் கொச்சகக் கலிப்பா எனப்படும்.

கொச்சகக் கலிப்பா வகைகள்

கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை,

தரவுக் கொச்சகக் கலிப்பா

தரவிணைக் கொச்சகக் கலிப்பா

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.