under review

பெருஞ்சாத்தனார்

From Tamil Wiki
Revision as of 11:59, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

பெருஞ்சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பெருஞ்சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தனார் என்னும் பெயர் உடையவர். புலவரின் சிறப்பு கருதி பெருஞ்சாத்தனார் என அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

பெருஞ்சாத்தனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 263-வது பாடலாக அமைந்துள்ளது. கற்பு நெறியில் திருமணம் செய்யாது மறைவாக களவுமணத்தைத் தொடரும் தலைவனிடம் தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தை உணர்த்தும்படி தோழி கூற்றாக குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மேகங்கள் சூழ்ந்து மழை பொழியும் மலைநாட்டை சேர்ந்தவன் தலைவன்.
  • பேய் ஓட்டுவதற்காக ஆற்று நடுவில் மணல்மேட்டில் ஆட்டுக்குட்டியை பலியிட்டு அதன் இரத்தத்தை தினைமாவுடன் கலந்து படையலாக இடுவர். பலவகையான இசைக்கருவிகள் முழங்கப்பட்டவுடன் வேலனில் வெறியாட்டெழுந்து தலைவியின் காதல் நோய்க்கு மருந்தாகாத பலவகையான தெய்வங்கள் ஒடிவந்து அவளை துன்புறுத்தும்.

பாடல் நடை

குறுந்தொகை - 263

குறிஞ்சி திணை துறை: முறையாக திருமணத்திற்கு பெண் கேட்டு வராத தலைவனை நோக்கி தோழி தலைவியிடத்து உரைத்தது.

 மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்
தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்
நோதக் கன்றே தோழி மால்வரை
மழைவிளை யாடு நாடனைப்
பிழையே மாகிய நாமிதற் படவே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:07:39 IST