அ.கா. பெருமாள்
அ.கா. பெருமாள் தமிழின் முன்னணி நாட்டாரியல், இலக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். நெடுங்கால களப்பணி அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டின் வாய்மொழி வரலாறு, கல்வெட்டு, சிற்பவியல், கோவில்கலை, ஏடு, நாட்டார் கதைகள், கலைகள் ஆகியவற்றை சேகரித்து பதிப்பதில் முக்கியப் பங்காற்றிய ஆய்வாளர். குமரி மாவட்டத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
தனிவாழ்க்கை
அ.கா. பெருமாள் 1947-இல் குமரி மாவட்டத்தில் பறக்கை என்ற ஊரில் அழகம்பெருமாள், பகவதி அம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். முழுப்பெயர் அ. காக்கும் பெருமாள் (1947, பறக்கை, குமரி மாவட்டம்). இவரது தந்தையான அழகம்பெருமாள் மலையாள ஆசிரியராகவும், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார். தாயார் பகவதி அம்மாள்.
தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற பின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். பிற்காலத்தில் "Inside the Drama-House: Rama Stories and Shadow Puppets in South India" போன்ற புத்தகங்களை எழுதிய ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் இவருடன் படித்தவர்.
ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராக (ஓய்வு) பணியாற்றினார்.
குடும்பம்
அ.கா. பெருமாளின் மனைவி பெயர் தேவகுமாரி. மகள் ரம்யா.
ஆய்வு பணி
வெங்கட் சாமிநாதன் தந்த ஊக்கத்தில் நாட்டாரியல் ஆய்வுகளில் முனைந்தார். அருள்பணி ஜெயபதி, சுந்தர ராமசாமி இருவரின் தாக்கமும் உண்டு. வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை இவர்தான் நீண்டகாலம் வெளியிட்டு வந்தார்.
இவர் எண்பதிற்கும் மேலான நூல்களை எழுதியுள்ளார். இதில் இலக்கிய வரலாறு, தமிழ் அறிஞர்கள், நாட்டார் வழக்காற்றியல், குமரி மாவட்ட வரலாறு, கல்வெட்டியல், சிற்பவியல், கோவில்கலை என்பவை பொதுவான தலைப்புகளாகும். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையின் படைப்புகளுக்கு ஆய்வுப்பதிப்புகள் பதிப்பித்தார். கவிமணியின் கட்டுரைகளைத் தேடி எடுத்து அச்சில் கொண்டு வந்தார்.
தோல்பாவைக்கூத்து கலை குறித்து விரிவான ஆய்வுகள் செய்து நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதில் “தோல்பாவைக்கூத்து” விரிவான அறிமுக நூலாகும். இவரது “ராமாயண தோல்பாவைக்கூத்து” கூத்துக்குரிய வாய்மொழி ராமாயணப்பிரதியின் பதிவு செய்யப்பட்ட வடிவம், விரிவான ஆய்வுக் குறிப்புகள் கொண்டது. குமரிமாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளைப் பற்றிய ஆய்வு, பொன்னிறத்தாள் அம்மன் கதை, பூலங்கொண்டாள் அம்மன் கதை, தம்பிமார் கதை உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கதைகளை அச்சுக்குக் கொண்டு வந்துள்ளார்.
பிராந்திய நுண்வரலாறு என்ற நோக்குடன் ஆய்வு செய்த முன்னோடி ஆய்வாளர் இவர். தென்குமரியின் கதை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் , பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயில், தென்குமரிக்கோயில்கள், சிவாலய ஓட்டம் ஆகிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இவை கோயிலைச் சுற்றிய நிலமானிய முறையைப் பற்றியும் விரிவாக ஆராயும் நூல்களாகும்.
குமரிமாவட்ட வரலாற்றுக்கு முக்கியமான ஆவணங்களான முதலியார் ஓலைச்சுவடிகளை (அழகியபாண்டிபுரம் முதலியார் வீட்டில் கிடைத்த இச்சுவடிகள் பத்து நூற்றாண்டுக் கால நிர்வாக நடவடிக்கைகள் பற்றியவை), இவற்றுக்கு ஆய்வுக்குறிப்புடன் நூல் வடிவம் கொடுத்துள்ளார்.
“எழுதப்பட்ட வரலாறு என்பது ஒருவகை மைய வரலாறு. மக்கள் வரலாறு என்பது எழுதப் படாமல் அவர்களின் வாய்மொழியாகவே புழங்குவது. அந்த மாற்று வரலாற்றை நாட்டாரியல் ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்து பதிவுசெய்பவர் என்று அ.கா.பெருமாள் அவர்களைக் குறிப்பிடலாம்” என பேராசிரியர் அ.கா.பெருமாள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
பாட நூல்கள்
- அ.கா.பெருமாளின் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி எம்.ஏ. பாடத்திட்டத்தில் 1997 முதல் பாடமாக உள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பி.ஏ., பி.எஸ்.ஸி. தமிழ் முதல் தாளுக்கு ‘ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூல் பாடமாக 1996 முதல் 1999 வரை இருந்தது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ‘பி.லிட்.’ வகுப்பிற்கு தமிழக வரலாறும் பண்பாடும், தற்கால இலக்கியம் குறித்த பாடங்கள் எழுதியுள்ளார்.
- கேரளப் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் இரண்டிலும் பி.ஏ. தமிழ் பாடத்திட்டத்தில் அ.கா.பெருமாள் எழுதிய ‘ஆய்வுக்கட்டுரை’ என்ற நூல் 1996 முதல் 1999 வரை பாடமாக இருந்துள்ளது.
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் நாட்டுப்புறவியல் துறையில் “நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி” நூல் 2001 முதல் பாடமாக உள்ளது.
- திருச்சி பெரியார் அரசு தன்னாட்சி கல்லூரியில் (திருச்சி) ‘ஆய்வுக்கட்டுரைகள்’ நூல் பாடமாக 2003 முதல் 2006 வரை இருந்துள்ளது.
- “பொன்னிறத்தாள் கதை” நூல் புதுதில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பாடத்திட்டத்தில் பாடமாக 2002 முதல் 2005 வரை இருந்துள்ளது.
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கிய வரலாறு பி.ஏ. தமிழிற்குப் பாடமாக 2003 முதல் உள்ளது.
- குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய வரலாற்று பாடமாக 2007 முதல் உள்ளது.
பிற பணிகள்
- ஆலோசகர், கன்னியாகுமரி மாவட்டக் கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்.
- ஆலோசகர், தமிழக்க கணிகர் தோல்பாவைக்கூத்துக் கலைஞர் சங்கம், நாகர்கோவில்.
- செயலர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
- ஆயுள் உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.
நூல் பட்டியல்
வ.எண். | நூலின் பெயர் | பதிப்பகம் | ஆண்டு |
---|---|---|---|
1. | நாட்டார் கதைகள் பகுதி 1 | கோமளா ஸ்டோர்,
நாகர்கோவில் சோபிதம், நாகர்கோவில். |
1978
1986 |
2. | புதிய தமிழில் பழைய கவிதை | மீனாட்சி புத்தக நிலையம்,
மதுரை. |
1979 |
3. | கன்னியாகுமரி அன்னை மாயம்மா | கன்னியா பிரசுராலயம்,
நாகர்கோவில். |
1979 |
4. | தமிழ் இலக்கியங்களின் காலம் பற்றி | க்ரியா,
சென்னை. |
1983 |
5. | கவிமணியின் இன்னொரு பக்கம் | பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை. |
1990 |
6. | தொல்பழம் சமயக்கூறுகள் | பயோனீர் புக் சர்வீஸஸ்,
சென்னை. |
1990 |
7. | ஆய்வுக்கட்டுரைகள் | பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1993
1997 2003 2005 2007 |
8. | கன்னியாகுமரி மாவட்ட வரலாறு | சுபா பதிப்பகம்,
நாகர்கோவில். |
1995 |
9. | நாட்டாரியல் ஆய்வு வழிகாட்டி | ரோகிணி பிரிண்டர்ஸ் (பி)லிட் நாகர்கோவில். | 1995 |
10. | பொதுக்கட்டுரைகள் | பத்மாபுக்ஸ்டால்,
நாகர்கோவில். |
1997
2000 2001 |
11. | பெயரில் என்ன இருக்கிறது | பத்மா புக்ஸ் ஏஜென்சி,
பப்ளிஷர்ஸ், நாகர்கோவில். |
1997 |
12. | கோவில் சார்ந்த நாட்டார் கலைகள் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1997 |
13. | பொன்னிறத்தாள்கதை (ப.ஆ) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
1997 |
14. | தோல்பாவைக் கூத்து | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1998 |
15. | வில்லுப்பாட்டுப் புராணக்கதைகள் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1998 |
16. | முல்லைப்பாட்டு (உரையும் விளக்கமும்) | உமா பதிப்பகம்,
சென்னை. |
1998 |
17. | குமரி மாவட்டக் கிராமியக் கலைகளும், கலைஞரும் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
1999 |
18. | தம்பிமார் கதை (ப.ஆ) (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) | ஆசியவியல் நிறுவனம்,
சென்னை. |
1999 |
19. | நூல்வடிவில் வராத கவிமணியின் படைப்புகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
1999 |
20. | நாஞ்சில்நாட்டு முதலியார் ஓலைச்சுவடிகள் காட்டும் சமூகம் | மக்கள் வெளியீடு,
சென்னை. |
1999 |
21.அ. | தமிழ் இலக்கிய வரலாறு | நிர்மால்யம்,
நாகர்கோவில். |
2000
2001 2002 2003 2004 |
21.ஆ. | தமிழ் இலக்கிய வரலாறு | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். (முழுவதும் திருத்தப்பட்ட பதிவு) |
2005
2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 |
22. | இராம கீர்த்தனம் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2000 |
23. | நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் | தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம்,
சென்னை. |
2001 |
24. | கவிமணியின் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் (மொ.ப) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
25. | நாட்டுப்புற மகாபாரதக் கதைகள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
26. | குமரி நாட்டுப்புறவியல் (ப.ஆ) | தன்னனானே பாங்களுர். | ஜுன், டிச.2001 |
27. | சுசீந்திரம் கோவில் | வருண் பதிப்பகம்,
நாகர்கோவில். |
2001 |
28. | கம்பரின் தனிப்பாடல்கள் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2001 |
29. | இயக்கியம்மன் கதையும் வழிபாடும் (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2002 |
30. | தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம்,
சென்னை. |
2002 |
31. | கவிமணியின் கவிதைகள் முழுதும் அடங்கிய ஆய்வுப்பதிப்பு (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2002 |
32. | ஸ்ரீ நாராயணகுரு வாழ்வும் வாக்கும் | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2003 |
33. | பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில் | ரோகிணி ஏஜென்சிஸ்,
நாகர்கோவில். |
2003 |
34. | இராமாயணத் தோல்பாவைக் கூத்து | தன்னனானே பதிப்பகம்,
சென்னை. |
2003 |
35. | தெய்வங்கள் முளைக்கும் நிலம் | தமிழினி,
சென்னை. |
2003 |
36. | குருகுல மக்கள் கதை (ப.ஆ) | ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை. |
2003 |
37. | தென்குமரியின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை |
2003 |
38. | நல்லதங்காள் (ப.ஆ) | தன்னனானே பதிப்பகம்,
சென்னை |
2004 |
39. | நாஞ்சில் வட்டார வழக்கு சொல்லகராதி | தமிழினி,
சென்னை. |
2004 |
40. | ஒரு குடும்பத்தின் கதை | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
41. | வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
42. | கவிமணியின் கட்டுரைகள் | தமிழினி,
சென்னை. |
2004 |
43. | கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் | தமிழினி,
சென்னை. |
2004 |
44. | சனங்களின் சாமி கதைகள் | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2004 |
45. | சித்தூர் தளவாய் மாடன் கதை (ப.ஆ) | காவ்யா, சென்னை | 2004 |
46. | கானலம் பெருந்துறை (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2005 |
47. | அலைகளினூடே (ப.ஆ) | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2005 |
48. | முதலியார் ஆவணங்கள் (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2005 |
49. | காகங்களின் கதை | காலச்சுவடு அறக்கட்டளை,
நாகர்கோவில். |
2005 |
50. | சுண்ணாம்பு கேட்ட இசக்கி | யுனைடெட் ரைட்டர்ஸ்,
சென்னை. |
2005 |
51. | ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் | தமிழினி,
சென்னை. |
2006 |
52. | தாணுமாலையன் ஆலயம் | தமிழினி,
சென்னை. |
2008 |
53. | வாழ்வை நகர்த்தும் கலைஞன் | முத்து பதிப்பகம்,
சென்னை. |
2008 |
54. | நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2008
2010 2016 |
55. | குடிபோதை - புனைவுகள் தெளிவுகள், (ப.ஆ) | தமிழினி,
சென்னை. |
2008 |
56. | படிக்கக் கேட்ட பழங்கதைகள் | மருதம் வெளியீடு,
நெய்வேலி. |
2008 |
57. | அகிலத்திரட்டு அம்மானை (ப.ஆ) | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2009 |
58. | சடங்கில் கரைந்த கலைகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2009,
2010 |
59. | இராமன் எத்தனை இராமனடி | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2010 |
60. | சிவாலய ஓட்டம் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2011 |
61. | காலந்தோறும் தொன்மங்கள் | தமிழினி,
சென்னை. |
2011 |
62. | உணவுப் பண்பாடு | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
2012 |
63. | தென்குமரியின் சரித்திரம் | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். |
2012,
2013 |
64. | அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2012 |
65. | தென்குமரிக் கோவில்கள் | சுதர்சன் புக்ஸ்,
நாகர்கோவில். |
2014 |
66. | தமிழர் கலையும் பண்பாடும் | பாவை பதிப்பகம்,
சென்னை. |
2014 |
67. | Kavimani Desivinayagam Pillai Historical Research Articles (Edi) | Raghav Publication,
Nagercoil. |
2015 |
68. | Desivinayagam Pillai Kandalar Salar (Edi) | Raghav Publication,
Nagercoil. |
2015 |
69. | வயல் காட்டு இசக்கி | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2015 |
70. | தென்னிந்திய தோல்பாவைக்கூத்து | காவ்யா,
சென்னை, |
2015 |
71. | திருக்கோயில்கள் வழிகாட்டி கன்னியாகுமரி மாவட்டம் | தமிழக அரசு. | 2015 |
72. | மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொருபக்கம் | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை. |
2016 |
73. | முதலையர் ஓலைகள் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில். |
2016 |
74. | இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை | காவ்யா
சென்னை |
2017 |
75. | சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம் | காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் |
2018 |
76. | பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் | என்.பி.எச்,
சென்னை |
2018 |
77. | கவிமணி வராற்றாய்வாளர் | என்.பி.எச், சென்னை | 2018 |
78. | வையாபுரிப்பிள்ளையின் கால ஆராய்ச்சி | காவ்யா, சென்னை | 2018 |
79. | தமிழறிஞர்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2018 |
80. | தமிழர் பண்பாடு (பிற். சோழர் காலம் வரை) | என்.சி.பி.எச்., சென்னை | 2018 |
81. | கவிமணியின் கட்டுரைகள் | காவ்யா, சென்னை | 2019 |
82. | பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2020 |
83. | பூதமடம் நம்பூதிரி | காலச்சுவடு, நாகர்கோவில் | 2020 |
84. | அடிமை ஆவணங்கள் | காலச்சுவடு, நாகர்கோவில் | 2021 |
85. | கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள் | சுதர்சன் புக்ஸ் & கிராப் பிட்ஸ், நாகர்கோவில் | 2021 |
86. | தமிழக வரலாறும் பண்பாடும் | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2021 |
87. | தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள் | நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை | 2021 |
விருதுகள்
- தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - "தென்னிந்தியாவில் தோல் பாவைக் கூத்து" என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
- தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை விருது - தமிழில் 2003-இல் வெளிவந்த சிறந்த நூலுக்காகத் ‘தென்குமரியின் கதை’ என்ற நூலுக்குப் பாராட்டிதழ் அளித்தது (31.03.2004)
- Great contribution Award - People Parliament for unity and development, Kanyakumari (19 ஆகஸ்ட் 2017)
வெளி இணைப்புகள்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.