அ.சீனிவாசராகவன்

From Tamil Wiki
Revision as of 14:32, 24 March 2022 by Jeyamohan (talk | contribs)
அ.சீனிவாசராகவன்
அ.சீனிவாச ராகவன்
அ.சீனிவாச ராகவன்

அ.சீனிவாசராகவன் (1905- ) அசீரா, அ.ஸ்ரீநிவாச ராகவன். தமிழ் எழுத்தாளர், மரபுக்கவிஞர். கம்பராமாயண ஆய்வாளர். மேடைப்பேச்சாளர்.கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

சீனிவாசராகவன் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகேயுள்ள கண்டியூரில் அண்ணாதுரை ஐயங்காருக்கும் -ரங்கநாயகி அம்மாளுக்கும் 23 அட்க்டோபர் 1905 ல் பிறந்தார்.அவருக்கு ஒரு சகோதரர், சகோதரிகள் இருவர். அண்ணாத்துரை ஐயங்கார் மாவட்ட ஆட்சியரின் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். நாகப்பட்டினத்தில் அவர் பணிமாறுதல் பெற்றதனால் குடும்பம் அங்கே சென்று குடியேறியது. அ.சீனிவாசராகவன் பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்தில் முடித்தபின் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வேதியியலில் பட்டம் பெற்றார். அங்கே பணியாற்றிய பேராசிரியர் லீ அ.சீனிவாசராகவனிடம் ஆங்கிலம் முதுகலை படிக்கும்படிச் சொன்னார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

அ.சீனிவாசராகவன் படிப்பை முடித்தபின் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியிலும் அதன் பிறகு நெல்லை இந்துக் கல்லூரியிலும் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றினார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆங்கிலத் துறைத்தலைவராகப் பணியாற்றினார். 1951 ல் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் கல்லூரி தொடங்கப்பட்டபோது அதன் தாளாளர் வீரபாகுப் பிள்ளை அழைப்பின் பேரில் முதல்வராக பொறுப்பேற்று 1969 வரை பத்தொன்பது ஆண்டுக்காலம் பணியாற்றினார்.

ஆசிரியர் பணி

அ.சீனிவாசராகவனின் முதன்மைப் பங்களிப்பாக அவருடைய ஆசியர் பணியே குறிப்பிடப்படுகிறது. மிகச்சிறந்த ஆங்கில ஆசிரியராகத் திகழ்ந்த அவர் ஆங்கில இலக்கியத்தின் சுவையை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். நீதிபதி மகராஜன், மீ.ப.சோமு சுந்தா, தொ.மு.சி.ரகுநாதன் போன்ற பலர் அவருடைய மாணவர்களாகத் திகழ்ந்தவர்கள். அவருடைய மாணவர்கள் எழுதிய நினைவுக்குறிப்புகளில் அவர் சிறந்த ஆசிரியராக வெளிப்படுகிறார் (ஆசிரியர்) நெல்லை இந்துக்கல்லூரியில் அவருடன் பேராசிரியர் ஆ. முத்துசிவன் போன்றவர்கள் பணியாற்றினர். அ.சீனிவாசராகவன் ஏழை மாணவர்களை தன் இல்லத்திலேயே தங்கவைத்து கல்விபயிலச் செய்தார்.

இதழியல்

தன் மனைவிக்கு உடல்நலமில்லாமல் போனபோது அ.சீனிவாசராகவன் சென்னையில் சிலகாலம் வசித்தார். அப்போது விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றினார். சென்னையில் இருந்தபோது 1947 முதல் 1949 வரை சிந்தனை என்னும் இதழை வெளியிட்டார். அதில் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆகிய அறிஞர்களுடன் ந. பிச்சமூர்த்தி, கரிச்சான்குஞ்சு போன்ற இலக்கியவாதிகளும் எழுதினார்கள்.

பாரதி கவிதைகள் நாட்டுடைமை

அ.சீனிவாசராகவன் சி.சுப்ரமணிய பாரதியார் குடும்பத்துக்கு அணுக்கமானவர். பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓர் இயக்கத்தை தொடங்கி 1949ல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரிடம் மனு அளித்தார். பாரதி பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கியவாழ்க்கை

அ.சீனி


தீக்கதிர் குறிப்பு