ஷைலஜா ரவீந்திரன்

From Tamil Wiki
Revision as of 07:56, 14 December 2023 by Jeyamohan (talk | contribs)
ஷைலஜா
ஷைலஜா ரவீந்திரன்

ஷைலஜா ரவீந்திரன் (1 ஜூன் 1963 ) மலையாள எழுத்தாளர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழிலிருந்து மலையாளத்திற்கு திருக்குறள் உள்ளிட்ட செவ்வியல்நூல்களையும் பிற இலக்கியப்படைப்புகளையும் மொழியாக்கம் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

ஷைலஜா ரவீந்திரன் 1 ஜூன் 1963ல் மொழிபெயர்ப்பாளர் கே.ஜி.சந்திரசேகரன் நாயர் - சரோஜினியம்மா இணையருக்கு குமரிமாவட்டம், குலசேகரம் அருகே திருநந்திக்கரை எறத்துவீட்டில் பிறந்தார். திருநந்திக்கரை அரசுப்பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்து, நாகர்கோயில் ஐயப்பா பெண்கள் கல்லூரியில் பட்டப்படிப்பையும் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி கல்லூரியில் ஆசிரியப்படிப்பையும் முடித்தார்.

தனிவாழ்க்கை

ஷைலஜா ரவீந்திரன் திருவனந்தபுரத்தில் வசிக்கிறார். கணவர் கே.ரவீந்திரன். மகன் டாக்டர். சரத்

இலக்கியப்பணிகள்

ஷைலஜா ரவீந்திரன் வாழ்க்கைவரலாறு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். தன் தாய்மாமனும் விண்வெளி ஆய்வாளருமான ஜி.மாதவன் நாயர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். நீல பத்மநாபன், பொன்னீலன், எஸ். ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், தமிழ்மகன் ஆகியோரின் படைப்புகளை மொழியாக்கம் செய்துள்ளார். கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம், மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்குநீதி ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

விருதுகள்

  • ராஷ்ட்ரீய ஹிந்தி சாகித்ய சம்மேளன் விருது
  • உள்ளூர் பரமேஸ்வர ஐயர் விருது
  • தமிழக அரசின் திருக்குறள் விருது
  • பாரத் பவன் ஸ்பெஷல் ஜூரி விருது
  • நல்லி திசை எட்டும் விருது

இலக்கிய இடம்

ஷைலஜா ரவீந்திரன் தமிழகத்துப் படைப்புகளை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்பவர்களில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார்

நூல்கள்

வாழ்க்கை வரலாறு

அம்பிளி மாமன்

ஒரு நொம்பரம்

உசாத்துணை