under review

சங்கு (இலக்கிய காலாண்டிதழ்)

From Tamil Wiki
Revision as of 09:29, 8 March 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
சங்கு இலக்கிய காலாண்டிதழ் (ஆசிரியர்: வளவ துரையன்)

சங்கு தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் இலக்கிய காலாண்டுச் சிற்றிதழ்.  தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் இருந்து   எழுத்தாளர் வளவ. துரையனால் 1968ல் தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை கடந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.  

 பதிப்பு வரலாறு

வளவ. துரையன் மாணவப் பருவத்திலேயே தமிழிலக்கிய கையெழுத்து பத்திரிகைகள் மீது கொண்ட ஆர்வத்தினால் கதைக்கொத்து என்ற பெயரில் ஒரு இதழை தொடங்கினார்.  உயர்நிலைப்பள்ளி சென்றபின் அது தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை.  பள்ளியிறுதிப்படிப்பை முடித்தபின்னர் வளவனூர் அர. இராசாராமன் மூலம் திருக்குறட்கழகத்தினரோடு தொடர்பு ஏற்பட்டு 1968ல் “சங்கு” என்ற பெயரில் இதழை கையெழுத்துப்பிரதியாக தொடங்கினார். பின்னர் கிருஷ்ணாபுரத்தில் வளவ. துரையன் ஆசிரியராக இருந்தபோது உடன் பணியாற்றிய கணித ஆசிரிய நண்பர்  சிவலிங்கத்தின் ஓவியத்திறனாலும் இலக்கிய ஆர்வத்தாலும்  வண்ணச்சித்திரங்களுடன் கூடிய கையெழுத்துப் பிரதியாக தயாரித்து வந்தார்.  இவ்வாறு தனது பயணத்தை தொடங்கிய சங்கு இதழ் உருட்டச்சு, ஒளியச்சு என தொண்ணூற்றியொன்பது இதழ்கள் கடந்து நூறாவது இதழிலிருந்து 40 பக்கங்கள் கொண்ட  அச்சிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

இலக்கியப் பங்களிப்பு

நாஞ்சில்நாடன், பாவண்ணன், தேவதேவன், நீல.பத்மநாபன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், பொன்னீலன், அன்பாதவன், சி. மகேந்திரன், பழமலய், எஸ்ஸார்சி, முருகேச பாண்டியன், எஸ். சங்கரநாராயணன், இறையடியான், சுப்ரபாரதி மணியன், கீரனூர் ஜாகீர்ராஜா, மு. முருகேஷ், அ. ராஜ்ஜா  என தமிழின் பல முக்கிய இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளும் நேர்காணல்களும் சங்கு இதழில் வெளிவந்துள்ளன.

கவிதைப் போட்டி

ஒவ்வொரு காலாண்டிலும் சங்கு இதழின் முகப்புப் படக்காட்சிக்கான கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.  

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.