under review

எஸ்.எல்.வி. மூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Image Added, Interlink Created: External Link Created; Final Check)
No edit summary
Line 61: Line 61:
* உலகக் குழந்தைக் கதைகள்
* உலகக் குழந்தைக் கதைகள்


== ஆங்கில நூல்கள் ==
===== ஆங்கில நூல்கள் =====
 
* James Watt
* James Watt
* BPO
* BPO

Revision as of 15:48, 1 January 2023

எஸ்.எல்.வி. மூர்த்தி
எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்தி
எஸ்.எல்.வி. மூர்த்தி நூல்களில் சில...

எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18, 1945) ஓர் எழுத்தாளர். ‘மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்' என்னும் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலாண்மை, தொழில் வளர்ச்சி, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, வரலாறு, ஆன்மிகம் தொடர்பாக பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆகஸ்ட் 18, 1945-ல், நாகர்கோவிலில் பிறந்தார். உயர் கல்வியை முடித்த இவர், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எஸ்.எல்.வி. மூர்த்தி, பெங்களூருவில் உள்ள இந்தோ-அமெரிக்க நிறுவனமான கிரைன்ட்வெல் நார்ட்டன் நிறுவனத்தின் தொழிற்சாலையின் விற்பனை மேலாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின் சென்னையில், ’மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்’ (Moorthy Marketing Associates) என்னும் மேலாண்மை ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார். அந்நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிகள், மேனேஜ்மென்ட் ஆலோசனை, பயிற்சிப்பணிகள் என்று செயல்பட்டு வருகிறார். நிர்வாகவியல் மற்றும் விற்பனைத்துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். மணமானவர். மகனும், மகளும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

எஸ்.எல்.வி. மூர்த்தி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆங்கில இதழ்களுக்கு மேலாண்மை மற்றும் தொழில் உத்திகள் பற்றி எழுதினார். இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் இவரது கட்டுரைகள் வெளியாகின. பின்னர் தமிழிலும் அதற்கான தேவை இருப்பதைத் தொடர்ந்து தமிழ் இதழ்களுக்கும் எழுதினார். ‘நாணயம் விகடன்’, ‘இந்து தமிழ் திசை’, ‘தினமணி’ போன்ற இதழ்களில் இவர் எழுதிய மேனேஜ்மெண்ட் தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. பின்னர் அவை நூல்களாகவும் வெளியாகின.  ‘பிசினஸ் ஏஷியா’, ‘எகனாமிக் டைம்ஸ்’, ‘தினகரன்’, ‘குங்குமம்’  போன்ற இதழ்களில் எழுதி வருகிறார்.

எஸ்.எல்.வி. மூர்த்தி மேலாண்மை, தொழில் வளர்ச்சி, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, வரலாறு, ஆன்மிகம் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றை நியூ ஹொரைசன் மீடியா, ராமகிருஷ்ண மடம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதி நிலையம், விகடன் பிரசுரம், இந்து தமிழ் திசை போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன.

'நான் எம்.பி.ஏ. ஆவேன்’, ‘மார்க்கெட்டிங் யுத்தங்கள்’, ‘இண்டர்வியூ டிப்ஸ்’, ‘வாங்க பழகலாம்’, ‘தொழில் முனைவோர் கையேடு’ போன்ற இவரது நூல்கள் வாசக வரவேற்பைப் பெற்றவை. சிறார்களுக்காக புதுமையான முறையில், உலக நாடுகள் சிலவற்றைத் தேர்தெடுத்து அந்த நாட்டை மையப்படுத்திப் பல குழந்தைக் கதைகளை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது நூல்கள் பல பதிப்புகள் கண்டுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

விருதுகள்

எஸ்.எல்.வி. மூர்த்தி, எழுதிய ‘தொழில் முனைவோர் கையேடு’ என்னும் நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2008ம் ஆண்டிற்கான சிறந்த மேலாண்மையியல் துறை நூலாகத்   தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி எஸ்.எல்.வி. மூர்த்திக்குப் பரிசு வழங்கிக் கௌரவித்தார்.

மதிப்பீடு

எஸ்.எல்.வி. மூர்த்தி, சுய அனுபவங்களுடன் கட்டுரைகளின் தேவைக்கேற்ப, முறையான ஆவணங்களையும் இணைத்துப் பல மேலாண்மைக் கட்டுரைகளை, நூல்களை எழுதி வருகிறார். தொழில்நுட்ப விவரங்களை, வாசிக்கும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான மொழியில் தருவதைத் தனது தனித்துவமாகக் கொண்டுள்ளார். பொருளாதாரம், சந்தைப் படுத்துதல், மேலாண்மை, வணிகப்படுத்துதல் போன்ற துறை சார்ந்த நூல்களின் முன்னோடி எழுத்தாளராக மதிப்பிடப்படுகிறார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • நான் எம்.பி.ஏ. ஆவேன்
  • எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்
  • நம்மை நாமே அறியலாமா?
  • டியர் மிஸ்டர் பிஸினஸ் மேன்
  • ஹலோ, உங்களைத் தான் தேடுகிறார்கள்
  • தொழில் முன்னோடிகள்
  • தொழில் முனைவோர் கையேடு
  • பண்டைய நாகரிகங்கள்
  • மாயன் நாகரிகம்
  • மார்க்கெட்டிங் யுத்தங்கள்
  • இண்டர்வியூ டிப்ஸ்
  • வால்மார்ட்
  • வாங்க பழகலாம்
  • ஆன்லைன் ராஜா
  • விளம்பர உலகம்
  • பொசிஷனிங்
  • பூக்களைப் பறிக்காதீங்க!
  • அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர்
  • அமேசான் ஒரு வெற்றிக் கதை
  • ஐ.ஐ.எம். நிர்வாகவியல் கல்லூரி
  • இரண்டாவது ஆப்பிள்
  • ஜப்பான்
  • ஆண்ட்ரூ க்ரோவ்
  • இரும்புப் பெண்மணி கிளியோபாட்ரா
  • ஜூலியஸ் சீஸர்
  • மாவீரன் அலெக்சாண்டர்
  • நெப்போலியன்
  • செங்கிஸ்கான்
  • பேரரசர் அசோகர்
  • லீ க்வான் யூ
  • சுப்ரமணியன் சந்திரசேகர்
  • உலகக் குழந்தைக் கதைகள்
ஆங்கில நூல்கள்
  • James Watt
  • BPO

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.