under review

உளுந்தூர்பேட்டை சண்முகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Sanmugam.png|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம்]]
[[File:Shanmugam AIR Recording.jpg|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம் (வானொலி நிகழ்வில்)]]
[[File:Shanmugam AIR Recording.jpg|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம் (வானொலி நிகழ்வில்)]]
[[File:With C.N.Annadurai.jpg|thumb|சண்முகம், அண்ணாத்துரை மற்றும் சீர்காழி கோவிந்தராஜனுடன்]]
[[File:With C.N.Annadurai.jpg|thumb|சண்முகம், அண்ணாத்துரை மற்றும் சீர்காழி கோவிந்தராஜனுடன்]]
[[File:Receiving kalaimamani award.jpg|thumb|கலைமாமணி விருது]]
[[File:Receiving kalaimamani award.jpg|thumb|கலைமாமணி விருது]]
[[File:Shanmugam with mgr.jpg|thumb|அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன்]]
[[File:Shanmugam with mgr.jpg|thumb|அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன்]]
[[File:Ulundurpet Shanmugam 3.jpg|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம்]]
உளுந்தூர்பேட்டை சண்முகம் (செப்டம்பர் 16, 1932-ஆகஸ்ட் 24, 2003) தமிழ்க் கவிஞர். எழுத்தாளர். பேராசிரியர். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையிலும், தமிழ்ப் பண்பாட்டு மையத்திலும் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். ஆயிரக்கணக்கான தமிழிசை, பக்தியிசைப் பாடல்களை எழுதினார்.  திரைப்பாடல் ஆசிரியராகவும் செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 13: Line 15:
மனைவி, அம்சவள்ளி. மகன், சங்கர், இசையமைப்பாளர். ’சாதகப்பறவைகள்' என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் சரவணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக உள்ளார். மகள்: பிரித்திகா.
மனைவி, அம்சவள்ளி. மகன், சங்கர், இசையமைப்பாளர். ’சாதகப்பறவைகள்' என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் சரவணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக உள்ளார். மகள்: பிரித்திகா.
== இசை வாழ்க்கை ==
== இசை வாழ்க்கை ==
முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றிருந்த சண்முகம் முதன்மையாக இசைப் பாடல்கள் எழுதினார். . விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பெருமாள் போன்ற தெய்வங்களின் மீதும் மாதா, இயேசு மீதும் பல பாடல்களைப் புனைந்தார். ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை, [[அரவிந்தர்]], [[சந்திரசேகரேந்திர சரஸ்வதி]], ஷீரடி சாயிபாபா, சத்ய சாயிபாபா, [[யோகி ராம்சுரத்குமார்]] உள்ளிட்டோர் மீது பல பக்திப் பாடல்களை எழுதினார். இவர் எழுதிய பாடல்களை [[சீர்காழி கோவிந்தராஜன்]], [[டி.எம். சௌந்தரராஜன்]], பாம்பே சகோதரிகள் சரோஜா-லலிதா, கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர்.

புதுக்கவிதை, செய்யுள், மரபிசைப் பாடல்கள் என பல நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார். ‘இசைமாலை’, ’எங்கே சென்றாய்’, ‘பொங்குபுனல்’, ‘வளரும் பயிர்’, ‘இன்பத் தீ’, ‘சாரல்’, ‘பாதமலர்கள்'  போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

Line 34: Line 36:
உளுந்தூர்பேட்டை சண்முகம், நாட்டிய நாடகங்கள் பலவற்றுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘அன்னையடா அன்னை’ என்னும் நாட்டிய நாடகம் பலராலும் வரவேற்கப்பட்ட ஒன்று.  தமிழில் பல நாட்டிய நாடகங்கள் வளர்வதற்கு உளுந்தூர்பேட்டை சண்முகம் உறுதுணையாக இருந்தார்.

[[File:With Music man nowshad.jpg|thumb|இசையமைப்பாளர் நௌஷத் உடன்]]
[[File:With Music man nowshad.jpg|thumb|இசையமைப்பாளர் நௌஷத் உடன்]]
====== பக்திப் பாடல்கள் ======
====== பக்திப் பாடல்கள் ======
* விநாயகனே வினை தீர்ப்பவனே...
* விநாயகனே வினை தீர்ப்பவனே...
* நீ அல்லால் தெய்வம் இல்லை...
* நீ அல்லால் தெய்வம் இல்லை...
Line 42: Line 42:
* பகவான் சரணம் பகவதி சரணம்...
* பகவான் சரணம் பகவதி சரணம்...
* சின்னஞ்சிறு பெண் போலே...
* சின்னஞ்சிறு பெண் போலே...
- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய புகழ்மிக்க பக்திப் பாடல்கள்.
- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய புகழ்மிக்க பக்திப் பாடல்கள்.
[[File:Shanmugam With Wife Amsawalli.jpg|thumb|மனைவி அம்சவள்ளியுடன்]]
[[File:Shanmugam With Wife Amsawalli.jpg|thumb|மனைவி அம்சவள்ளியுடன்]]
[[File:Sanskrit Sloga Books in Tamil.jpg|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த நூல்கள்]]
[[File:Sanskrit Sloga Books in Tamil.jpg|thumb|உளுந்தூர்பேட்டை சண்முகம் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த நூல்கள்]]
====== திரைப் பாடல்கள் ======
====== திரைப் பாடல்கள் ======
உளுந்தூர்பேட்டை சண்முகம், அகத்தியர் ராஜராஜ சோழன் திருமலை தென்குமரி எனப் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்  
உளுந்தூர்பேட்டை சண்முகம், அகத்தியர் ராஜராஜ சோழன் திருமலை தென்குமரி எனப் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்  
* தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்...
* தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்...
* வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...
* வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...
Line 57: Line 54:
* திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...
* திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...
* சந்தனம் மணக்கும்...
* சந்தனம் மணக்கும்...
- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் புகழ்பெற்ற திரையிசைப் பாடல்கள்.
- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் புகழ்பெற்ற திரையிசைப் பாடல்கள்.
== விருதுகள் ==
== விருதுகள் ==

Revision as of 18:17, 15 December 2022

உளுந்தூர்பேட்டை சண்முகம்
உளுந்தூர்பேட்டை சண்முகம் (வானொலி நிகழ்வில்)
சண்முகம், அண்ணாத்துரை மற்றும் சீர்காழி கோவிந்தராஜனுடன்
கலைமாமணி விருது
அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன்
உளுந்தூர்பேட்டை சண்முகம்

உளுந்தூர்பேட்டை சண்முகம் (செப்டம்பர் 16, 1932-ஆகஸ்ட் 24, 2003) தமிழ்க் கவிஞர். எழுத்தாளர். பேராசிரியர். தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறையிலும், தமிழ்ப் பண்பாட்டு மையத்திலும் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். ஆயிரக்கணக்கான தமிழிசை, பக்தியிசைப் பாடல்களை எழுதினார்.  திரைப்பாடல் ஆசிரியராகவும் செயல்பட்டார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

உளுந்தூர்பேட்டை சண்முகம், கள்ளக்குறிச்சியில் உள்ள உளுந்தூர்பேட்டையில், செப்டம்பர் 16, 1932 அன்று பிறந்தார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை உளுந்தூர்பேட்டையில் படித்தார். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் மேற்கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘நற்றிணை’ பற்றி ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலையில், ’தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

உளுந்தூர்பேட்டை சண்முகம், 1960 முதல் 1972 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தார். 1972-1974 வரை, சென்னை சேலையூர், எஸ்.ஐ.வி.ஈ.டி. கல்லூரியில் (South Indian Vaniar Educational Trust College) தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றினார்.

1975ல் தமிழக அரசால் மொழிப்பெயர்ப்புத்துறையின் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1978 வரை அத்துறையில் பணியாற்றினார். பின் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார்.

மனைவி, அம்சவள்ளி. மகன், சங்கர், இசையமைப்பாளர். ’சாதகப்பறவைகள்' என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் சரவணன், திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக உள்ளார். மகள்: பிரித்திகா.

இசை வாழ்க்கை

முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றிருந்த சண்முகம் முதன்மையாக இசைப் பாடல்கள் எழுதினார். . விநாயகர், முருகன், சிவன், அம்பாள், பெருமாள் போன்ற தெய்வங்களின் மீதும் மாதா, இயேசு மீதும் பல பாடல்களைப் புனைந்தார். ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை, அரவிந்தர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஷீரடி சாயிபாபா, சத்ய சாயிபாபா, யோகி ராம்சுரத்குமார் உள்ளிட்டோர் மீது பல பக்திப் பாடல்களை எழுதினார். இவர் எழுதிய பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சௌந்தரராஜன், பாம்பே சகோதரிகள் சரோஜா-லலிதா, கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன், மலேசியா வாசுதேவன், உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர்.

புதுக்கவிதை, செய்யுள், மரபிசைப் பாடல்கள் என பல நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றியுள்ளார். ‘இசைமாலை’, ’எங்கே சென்றாய்’, ‘பொங்குபுனல்’, ‘வளரும் பயிர்’, ‘இன்பத் தீ’, ‘சாரல்’, ‘பாதமலர்கள்'  போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

உளுந்தூர்பேட்டை சண்முகம், தமிழில் கவிதைகள், பக்திப் பாடல்கள், மொழிபெயர்ப்புப் பாடல்கள் என நான்காயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவை ஒலிப்பேழைகளாகவும், குறுந்தகடுகளாகவும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன. விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜகோவிந்தம், ஆதித்ய ஹ்ருதயம், சௌந்தர்யலஹரி, ஹனுமான் சாலீஸா, மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்கா துதி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் போன்ற பல வடமொழிப் பாடல்களை இவர் தமிழில் பெயர்த்துள்ளார்.

உளுந்தூர்பேட்டை சண்முகம், மொழியாக்கம் செய்து, பாம்பே சகோதரிகள் பாடிய தமிழ் வேங்கடேச சுப்ரபாதம், தமிழ் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் போன்ற ஒலிப்பேழைகள், குறுந்தகடுகள் லட்சக்கணக்கில் விற்பனை ஆகின. உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் பெரும்பாலான பாடல்களை இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.

கிருபானந்த வாரியார், மு.கருணாநிதி, சீர்காழி கோவிந்தராஜன் உடன் உளுந்தூர்பேட்டை சண்முகம்
உளுந்தூர்பேட்டை சண்முகம் நூல்கள்
உளுந்தூர்பேட்டை சண்முகம் பக்திப் பாடல் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

உளுந்தூர்பேட்டை சண்முகம் பச்சையப்பன் கல்லூரியில் டாக்டர் மு.வரதராசனின் மாணவராக இருந்தார். இசை, இலக்கியம் சார்ந்து சில கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். சிறுகதைகள் சிலவற்றைப் படைத்தார். பக்தி மற்றும் இலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பல கவியரங்கங்களிலும், பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவர் எழுதியுள்ள படைப்புகள் தொகுக்கப்பட்டு 32 நூல்களாக ‘நெய்தல் பதிப்பகம்’ மூலம் வெளியாகியுள்ளன.

குழந்தை இலக்கியப் பங்களிப்புகள்

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் உளுந்தூர்பேட்டை சண்முகம் முக்கிய பங்காற்றினார். இவரது ‘வளரும் பயிர்’ நர்சரி ரைம்ஸ் பாடல்களை திருமதி. லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார். ‘கண்மணி பூங்கா’ என்னும் நர்சரி ரைம்ஸ் பாடல்களை திருமதி. சந்தியா ராஜகோபால் பாடியுள்ளார்.

வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்புகள்

வானொலியின் மெல்லிசை, தமிழிசை, பக்திப் பாமாலை போன்ற பல இசை நிகழ்ச்சிகளில் உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னைத் தொலைக்காட்சியில் உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய பல பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர்.

நாட்டிய நாடகப் பாடல்கள்

உளுந்தூர்பேட்டை சண்முகம், நாட்டிய நாடகங்கள் பலவற்றுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘அன்னையடா அன்னை’ என்னும் நாட்டிய நாடகம் பலராலும் வரவேற்கப்பட்ட ஒன்று.  தமிழில் பல நாட்டிய நாடகங்கள் வளர்வதற்கு உளுந்தூர்பேட்டை சண்முகம் உறுதுணையாக இருந்தார்.

இசையமைப்பாளர் நௌஷத் உடன்
பக்திப் பாடல்கள்
  • விநாயகனே வினை தீர்ப்பவனே...
  • நீ அல்லால் தெய்வம் இல்லை...
  • பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...
  • பகவான் சரணம் பகவதி சரணம்...
  • சின்னஞ்சிறு பெண் போலே...

- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய புகழ்மிக்க பக்திப் பாடல்கள்.

மனைவி அம்சவள்ளியுடன்
உளுந்தூர்பேட்டை சண்முகம் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த நூல்கள்
திரைப் பாடல்கள்

உளுந்தூர்பேட்டை சண்முகம், அகத்தியர் ராஜராஜ சோழன் திருமலை தென்குமரி எனப் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்

  • தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்...
  • வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...
  • உலகம் சமநிலை பெற வேண்டும்...
  • ஆண்டவன் தரிசனமே...
  • மதுரை அரசாளும் மீனாட்சி....,
  • திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...
  • சந்தனம் மணக்கும்...

- போன்றவை உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் புகழ்பெற்ற திரையிசைப் பாடல்கள்.

விருதுகள்

  • அருட் செல்வர் (உலக சமுதாய மையம், சென்னை - The world Community Centre வழங்கிய பட்டம்)
  • பக்த சிகாமணி (ஆன்மீக ஆய்வு மையம், சென்னை - Spiritual Study Circle - வழங்கிய பட்டம்)
  • தெய்வீகக் கவிஞர் (ஸ்ரீ லட்சுமி நாராயணா நிறுவனக் குழு வழங்கிய பட்டம்)
  • இசைக்கவி அரசு (திருப்பனந்தாள் பாவலர் மன்றம் வழங்கிய பட்டம்)
  • பெருங்கவிஞர் (திருவல்லிக்கேணி முருகனடியார் சங்கம்)
  • தமிழக அரசின் கலைமாமணி விருது

மறைவு

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், உளுந்தூர்பேட்டை சண்முகம்,  ஆகஸ்ட் 24, 2003 அன்று காலமானார்.

நாட்டுடைமை

ஜனவரி 20, 2020 அன்று தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

இலக்கிய இடம்

உளுந்தூர்பேட்டை சண்முகம், முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றவர். அவர் பெற்ற இலக்கிய அறிவு எளிமையான மொழியில், சந்த நயத்துடன் பல பாடல்களை இயற்றத் துணைபுரிந்தது. தமிழிசை ஆர்வம் உடைய இசைமணி சீர்காழி கோவிந்தராஜன், டி. ஆர். பாப்பா, குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்டோருடன் இணைந்து காலத்தில் நிலைபேறுடைய பல பாடல்களைப் படைத்தார். தமிழிசையும், பக்தி இசையும் வளர்வதற்கு மிக முக்கியக் காரணமானவராக உளுந்தூர்பேட்டை சண்முகம் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

தமிழிசை நூல்கள்
  • விநாயகனே! வினை தீர்ப்பவனே!
  • அன்பே சிவம்
  • திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
  • ஸ்ரீ ராம்! ஜெயராம்!!
  • கண்ணா! கார்மேகவண்ணா!!
  • நவகோள் நாயகர்
  • நவராத்திரி நாயகியர்
  • ஸ்ரீ சக்ர நாயகி
  • என் தாயே! ஈஸ்வரியே!
  • ஓம் சக்தியே! பராசக்தியே!
  • மாரி மகமாயி! காளி கருநீலி!
  • அம்மன் பாமாலைகள்
  • செல்வமே - திருமகளே
  • ஜெய ஜெய சங்கர!
  • ஷீரடி செல்வம்
  • ஞாலம் போற்றிய ஞானியர்
  • மாசிலா ஏசு!
  • மாதாவே! மரியே!
  • காதல்! காதல்!
  • நீ அல்லால் தெய்வம் இல்லை - முருகா (பாகம்-1)
  • முருகா! முத்துக்குமரா! (பாகம்-2)
  • சாமி திந்தக்கத்தோம்! தோம்!! ஐயப்பன் பாடல்கள் (பாகம் - 1 & 2 )
  • அருள் ஒளி (ஸ்ரீ யோகிராம் சுரத்குமார் பாடல்கள்)
  • எண்ணிப் பார்க்கிறேன்
  • புகழோடு தோன்றுக! (சான்றோர் பாடல்கள்)
  • என் இரு விழிகள் (மொழியும் - நாடும்)
  • தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-1)
  • தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-2)
  • தமிழ் மொழிபெயர்ப்புகள் - (பாகம்-3)
  • செக்கர்வானம் (தேசபக்திப் பாடல்களின் தொகுப்பு)
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்
  • ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம்
  • கனகதாரா ஸ்தோத்ரம்
  • விஷ்ணு சகஸ்ரநாமம்
  • பஜ கோவிந்தம்
  • ஆதித்ய ஹ்ருதயம்
  • லட்சுமி நரசிம்ம கரவலம்பம்
  • ஸ்ரீ மஹா கணபதி சகஸ்ரநாமம்
  • ஸ்ரீ சாஸ்தா சகஸ்ரநாமம்
  • திரிசதி
  • ஸ்ரீ ஸ்துதி
  • சிவ ஸ்தோத்திரங்கள்
  • ஸ்ரீ துர்கா ஸ்தோத்திரங்கள்
  • ஸ்ரீ ஸ்கந்த லஹரி
  • சௌந்தர்ய லஹரி
  • ஸ்ரீ ஹனுமன் சாலீஸா
  • தேவி மஹாத்மியம்
  • ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம்
  • ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்
  • மகாலட்சுமி ஸ்தோத்திரம்
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்தோத்திரங்கள்

மற்றும் பல ...

உசாத்துணை

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.