first review completed

கிரிவலம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 30: Line 30:
- என [[அருணாசல புராணம்]] குறிப்பிடுகிறது.
- என [[அருணாசல புராணம்]] குறிப்பிடுகிறது.


“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்று, பூமியையே பிரதிட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும். அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும். அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் தொலையும்” - என்றெல்லாம் [[அருணாசல புராணம்]] திருவண்ணாமலையை கிரிவலம் வருதலைப் புகழ்ந்துரைக்கிறது.
“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்று, பூமியையே பிரதிட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும். அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும். அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் செய்த பாவம் தொலையும்” - என்றெல்லாம் [[அருணாசல புராணம்]] திருவண்ணாமலையை கிரிவலம் வருதலைப் புகழ்ந்துரைக்கிறது.
[[File:Thiruvannamalai Day Time.jpg|thumb|திருவண்ணாமலையில் சூரிய உதயம் (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)]]
[[File:Thiruvannamalai Day Time.jpg|thumb|திருவண்ணாமலையில் சூரிய உதயம் (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)]]
==பௌர்ணமி கிரிவலம்==
==பௌர்ணமி கிரிவலம்==
Line 37: Line 37:
[[File:Thiruvannamalai Long View.jpg|thumb|திருவண்ணாமலை (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)]]
[[File:Thiruvannamalai Long View.jpg|thumb|திருவண்ணாமலை (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)]]
==கிரிவல முறைகள்==
==கிரிவல முறைகள்==
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிப் பின் கிரிவலம் மேற்கொள்கின்றனர். நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாகவே செல்ல வேண்டும்.
இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிப் பின் தொடங்குகின்றனர். நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாகவே செல்ல வேண்டும்.


மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் தொடங்கி, அண்ணாமலையை வலம் வந்து பின் அதே கிழக்குக் கோபுரத்தில் நிறைவு செய்ய வேண்டும். பின் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். அப்போதுதான் மலைவலம் நிறைவுற்றதாகப் பொருள். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களின் [[அஷ்ட லிங்க வழிபாடு|அஷ்ட லிங்கங்களை]] வழிபட வேண்டும். கிரிவல வழியில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ராமசுரத்குமார் ஆசிரமம் ஆகியன அமைந்துள்ளன. அவற்றையும் வழிபட்டுச் செல்லுதல் பக்தர்களின் வழக்கம்.
மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் தொடங்கி, அண்ணாமலையை வலம் வந்து பின் அதே கிழக்குக் கோபுரத்தில் நிறைவு செய்ய வேண்டும். பின் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களின் [[அஷ்ட லிங்க வழிபாடு|அஷ்ட லிங்கங்களை]] வழிபட வேண்டும்.  
 
கிரிவல வழியில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ராமசுரத்குமார் ஆசிரமம் ஆகியன அமைந்துள்ளன. அவற்றையும் வழிபட்டுச் செல்லுதல் பக்தர்களின் வழக்கம்.
[[File:Adi Annamalai.jpg|thumb|ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம், அடி அண்ணாமலை]]
[[File:Adi Annamalai.jpg|thumb|ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம், அடி அண்ணாமலை]]
==ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம்==
==ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம்==
மலைக்குச் செல்லும் வழியில் ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம். பிரம்மா தவம் செய்து இழந்த தனது சக்தியை மீளவும் பெற்றுக் கொண்ட தலம் இது. பிரம்மன் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் இங்கு உள்ளது. இங்குள்ள ஈசன் ஆதி அருணாசலேஸ்வரர் என்று அருணகிரிநாதரால் போற்றப்படுகிறார். இங்குள்ள முருகனைத் துதித்து [[அருணகிரிநாதர்]], ‘ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’ என்று [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.
மலைக்குச் செல்லும் வழியில் ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று நம்பப்படுகிறது. பிரம்மன் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் இங்கு உள்ளது என தொன்மம் சொல்கிறது. இங்குள்ள ஈசன் ஆதி அருணாசலேஸ்வரர் என்று அருணகிரிநாதரால் போற்றப்படுகிறார். இங்குள்ள முருகனைத் துதித்து [[அருணகிரிநாதர்]], ‘ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’ என்று [[திருப்புகழ்]] பாடியுள்ளார்.இங்கு தான் [[மாணிக்கவாசகர்]] [[திருவெம்பாவை]] பாடினார் என்று கூறப்படுகிறது. [[ரமண மகரிஷி]], [[சேஷாத்ரி சுவாமிகள்]] ஆகியோர் இங்கு தவம் புரிந்துள்ளனர். மாணிக்கவாசகருக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது . அருணகிரிநாதரின் சிலா ரூபமும் இங்குள்ளது. இத்தலம் ’ அடி அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.[[File:Thiruvannamalai Temple Inside.jpg|thumb|அண்ணாமலையார் ஆலயம், திருவண்ணாமலை]]
 
இங்கு தான் [[மாணிக்கவாசகர்]] [[திருவெம்பாவை]] பாடினார். [[ரமண மகரிஷி]], சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோர் இங்கு தவம் புரிந்துள்ளனர். மாணிக்கவாசகருக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது . அருணகிரிநாதரின் சிலா ரூபமும் இங்குள்ளது. இத்தலம் ’ அடி அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.[[File:Thiruvannamalai Temple Inside.jpg|thumb|அண்ணாமலையார் ஆலயம், திருவண்ணாமலை]]
[[File:Annamalaiyar-Unnamalai Amman.jpg|thumb|அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்]]
[[File:Annamalaiyar-Unnamalai Amman.jpg|thumb|அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்]]
==கிரிவல நாட்களும் பலன்களும்==
==கிரிவல நாட்களும் பலன்களும்==

Revision as of 17:57, 10 December 2022

திருவண்ணாமலை

புனித மலைகளை (கிரி = மலை) வலம் வருதல் என்பது தமிழ்நாட்டில் தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. மலை வலம் வருதல் மகத்தான புண்ணியத்தைத் தரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருக்கழுகுன்றம், குன்றக்குடி, பர்வதமலை போன்ற மலைகளை புனிதநாட்களில் பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். தமிழ்நாட்டின் முக்கிய மலை வலத் தலமாக ‘திருவண்ணாமலை’ உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் (படம் நன்றி: https://tamil.asianetnews.com/)

மலை வலத்தின் சிறப்புகள்

தமிழ்நாட்டின் முக்கிய ஆலயங்கள் பலவும், மலை மீதோ மலைகளை ஒட்டியோ அமைந்துள்ளன. திருவண்ணாமலை, சதுரகிரி, பழனி, திருப்பரங்குன்றம், திருக்கழுகுன்றம், குன்றக்குடி, பர்வதமலை, பழமுதிர்ச்சோலை, தேனிமலை, கஞ்சமலை,  திருக்குற்றாலம் எனப் பல தலங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

மலை வலம் வருவது புண்ணியத்தைத் தருவதுடன்  மலை மீதிருக்கும் மூலிகைகளில் கலந்து வரும் காற்றைச் சுவாசிப்பதால் உடல்நலனும் மேம்படுகிறது என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம் (படம் நன்றி : தினமலர்)

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில், மலையே லிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.

இம்மலையின் சிறப்பை,

“தர்சனாத் அப்ரஸதசி
ஜனனாத் கமலாலயே
காச்யாந்கி மரணான் முக்தி
ஸ்மரணாத் அருணாசலே:”

என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.” என்பது இதன் பொருள்.

திருவண்ணாமலையை வலம் வருதல் புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. அண்ணாமலை கிரிவலம் பற்றி,

சோணகிரி வலம்வருதல் பிறவி எனும்
பெருங்கடற்குத் தோணி ஆகும் - ஏழ்நரகக்
குழி புகுதாது அரிய முத்தி
வழிக்குஏற ஏணி ஆகும்

- என அருணாசல புராணம் குறிப்பிடுகிறது.

“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமன்று, பூமியையே பிரதிட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும். வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும். அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும். அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் செய்த பாவம் தொலையும்” - என்றெல்லாம் அருணாசல புராணம் திருவண்ணாமலையை கிரிவலம் வருதலைப் புகழ்ந்துரைக்கிறது.

திருவண்ணாமலையில் சூரிய உதயம் (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)

பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில், பௌர்ணமி அன்று, அன்னை பார்வதி தேதி கிரிவலம் வந்து சிவபெருமானின் காட்சி கிடைக்கப்பெற்றார். ஈசனது இடப்பாகமும் பெற்றார். அதனால் பௌர்ணமி அன்று மலை வலம் வருதல் புனிதமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுகிறது. அந்த நாளில் ‘கார்த்திகை தீப வழிபாடு’ நடைபெறுகிறது.

நிலவொளியில் திருவண்ணாமலை (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)
திருவண்ணாமலை (படம் நன்றி: https://www.sriramanamaharshi.org/)

கிரிவல முறைகள்

இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிப் பின் தொடங்குகின்றனர். நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாகவே செல்ல வேண்டும்.

மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் தொடங்கி, அண்ணாமலையை வலம் வந்து பின் அதே கிழக்குக் கோபுரத்தில் நிறைவு செய்ய வேண்டும். பின் அருணாசலேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களின் அஷ்ட லிங்கங்களை வழிபட வேண்டும்.

கிரிவல வழியில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், ரமணாஸ்ரமம், யோகி ராமசுரத்குமார் ஆசிரமம் ஆகியன அமைந்துள்ளன. அவற்றையும் வழிபட்டுச் செல்லுதல் பக்தர்களின் வழக்கம்.

ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம், அடி அண்ணாமலை

ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம்

மலைக்குச் செல்லும் வழியில் ஆதி அருணாசலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பிரம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று நம்பப்படுகிறது. பிரம்மன் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் இங்கு உள்ளது என தொன்மம் சொல்கிறது. இங்குள்ள ஈசன் ஆதி அருணாசலேஸ்வரர் என்று அருணகிரிநாதரால் போற்றப்படுகிறார். இங்குள்ள முருகனைத் துதித்து அருணகிரிநாதர், ‘ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’ என்று திருப்புகழ் பாடியுள்ளார்.இங்கு தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார் என்று கூறப்படுகிறது. ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோர் இங்கு தவம் புரிந்துள்ளனர். மாணிக்கவாசகருக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது . அருணகிரிநாதரின் சிலா ரூபமும் இங்குள்ளது. இத்தலம் ’ அடி அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

அண்ணாமலையார் ஆலயம், திருவண்ணாமலை
அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்

கிரிவல நாட்களும் பலன்களும்

திருவண்ணாமலையை பக்தர்கள் வருடத்தின் 365 நாட்களும் மலை வலம் வருகின்றனர். பிறந்த நாளன்று, திருமண நாளன்று, மூத்தோர்களின் நினைவு நாளன்று அண்ணாமலையை வலம் வருவதை பக்தர்கள் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

  • ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.
  • திங்கட்கிழமை மலை வலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.
  • செவ்வாய்க்கிழமை கிரி சுற்றுவதால் கடன், வறுமை நீங்கும்.
  • புதன்கிழமை மலை சுற்றுவதன் மூலம் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.
  • வியாழக்கிழமை மலை வலம் வந்தால் ஞானம் கிட்டும்
  • வெள்ளிக்கிழமை மலை சுற்றினால் வைகுந்தம் அடையலாம்.
  • சனிக்கிழமை கிரி வலம் வருவதால் பிறவிப்பிணி அகலும்.

- என்பது மக்கள் நம்பிக்கையாக உள்ளது.

திதிகளில் கிரிவலம்
  • அமாவாசை அன்று மலை சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். விஷப்பிணிகள் நீங்கும்.
  • பௌர்ணமி கிரிவலம் நோயற்ற வாழ்வும் அருள் சிறப்பு, செல்வ வளம், முக்திப்பேறு கிட்டும்.
  • பிரதோஷம் அன்று கிரிவலம் வருவது ஒருவன் செய்த சகல பாவங்களையும் நீக்கும். சிவ அபராதம் ஒழியும்.
  • சிவராத்திரி அன்று மலை வலம் வந்தால் பிறவிப்பிணி தொலையும்.
  • ஏகாதசி அன்று மலை வலம் வந்தால் சகல பீடைகளும் நீங்கும்.
  • துவாதசி திதியன்று மலை வலம் வந்து அன்னதானம் செய்தால்,அவன் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தையும் மீண்டும் பிறவா நிலையையும் அடைகிறான்
  • அஷ்டமி அன்று மலை வலம் வந்தால் தீவினைகள் அகலும் .
  • மாதப் பிறப்புகளின் போது மலை வலம் வந்தால் பாவங்கள் மறையும்.
  • மாசி மகத்தின் போது மலைவலம் வந்தால் அவர் தேவர்களுக்கும் நிகரான பதவியை அடைவார்.
  • தக்ஷிணாய புண்ணிய காலங்களில் மலை வலம் வருபவரின் சிறப்பை அந்த தேவர்களாலும் அளவிட்டுக் கூற இயலாது.
  • உத்தராயண புண்ணிய காலத்தில் மலைவலம் வந்தால் அவன் உயர்ந்த பதவியை அடைவான்.
  • செவ்வாய், புதன் கிழமைகளிலும், சப்தமி, பௌர்ணமி திதிகளிலும், ரோஹிணி, பூரம், அனுஷம், சதயம் நட்சத்திர நாட்களிலும் இங்கு கிரிவலம் வருதலால் மகத்தான பலன்களைப் பெறலாம்

- என்றெல்லாம் புராண நூல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் கிரிவலம்

பௌர்ணமி திதியும், செவ்வாய்க் கிழமையும் இணைந்த நாட்களில் கிரிவலம் வருதல் யோகமான பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் வருதல் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை துர்க்கைக்கு உகந்த நாள். அன்னை இங்கு தவம் மேற்கொண்டு, துர்க்கையாய் திரு அவதாரம் செய்து மகிஷனை அழித்தாள். எனவே அவளுக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் மலைவலம் வருவது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பஞ்சபூதங்களில் அக்னிக்குரிய தலம் அருணாசலம். அக்னிக்குரிய கிரகம் செவ்வாய். அக்னிக்குரிய தினம் செவ்வாய்க் கிழமை. அண்ணாமலையார் கோயிலில் சிவபெருமானுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடக்கின்றது. எனவே செவ்வாய்க்கிழமை அன்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் கிரிவலம் வந்து வழிபடுதலால் பிறவிப் பிணி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ராசிகளில் கிரிவலம்

குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள், குறிப்பிட்ட நாட்களில் கிரிவலம் வந்து வழிபடுவது உயர்வைத் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ராசி கிரிவலம் வரும் கிழமை
மேஷம் செவ்வாய் கிழமை
ரிஷபம் வெள்ளிக்கிழமை
மிதுனம் புதன் கிழமை
கடகம் திங்கள் கிழமை
சிம்மம் ஞாயிற்றுக் கிழமை
கன்னி புதன்கிழமை
துலாம் வெள்ளிக்கிழமை
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை
தனுசு வியாழக் கிழமை
மகரம் சனிக் கிழமை
கும்பம் சனிக் கிழமை
மீனம் வியாழக் கிழமை

கிரிவலம் பற்றி மகான்கள்

குரு நமசிவாயர், தனது அண்ணாமலை வெண்பாவில். அண்ணாமலை குறித்து,

துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்கும் மலை
அன்பர் தமை வா என்று அழைக்கும் மலை

என்றும்

நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றும் மலை அண்ணாமலை

என்றும் பாடியுள்ளார்.

அப்பர் பெருமானும்

கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
பாணி நட்டங்கள்ஆடும் பரமனார்
ஆணிப்பொன்னின், அண்ணாமலை கைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே

என்று சிறப்பித்துள்ளார்.

அண்ணாமலை தொழுவார் வினை
வழுவா வண்ணம் அறுமே!’

-என்கிறது தேவாரம்.

சேஷாத்ரி சுவாமிகளும்  மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். பகவான் ரமணரும் மலைவலம் வருதலை வலியுறுத்தியுள்ளார். அவரே பலமுறை வலம்  வந்துள்ளார். இம்மலை பற்றி அவர், “இந்த மலை வெளியே பார்ப்பதற்கு அசைவற்றதாய் இருக்கிறது. ஆனால் உள்ளே பற்பல யோகியர்களும், சித்தர்களும், தேவர்களும் சதா சர்வ காலமும் அருணாசலரை வணங்கித் தொழுதுகொண்டிருக்கின்றனர். மலைக்கு உள்ளே பற்பல குகைகளும், அருவிகளும் உள்ளன. அருணாசலேஸ்வரரே அருணாசல யோகியாய்  இம்மலையின் வடப்புறத்தே ஒரு ஆலமரத்தின் கீழ் எழுந்தருளி தியானம் செய்து கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாக நம்பிக்கை உள்ளது. மலை வலம் வருவதால் தங்கள் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்க்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.