ஜெயஶ்ரீ: Difference between revisions
(Created page with "thumb ஜெயஶ்ரீ (பிறப்பு: ஏப்ரல் 26, 1968) இலக்கிய வாசகர், ஆசிரியை, தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பாளர், திருத்துநர். == பிறப்பு, கல்வி == ஜெயஶ்ரீ ஏப்ரல் 26, 1968 அன்று சரோஜா...") |
(; Added info on Finalised date) |
||
| Line 24: | Line 24: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|13-Jul-2026, 04:12:04 IST}} | |||
Latest revision as of 03:44, 14 July 2026
ஜெயஶ்ரீ (பிறப்பு: ஏப்ரல் 26, 1968) இலக்கிய வாசகர், ஆசிரியை, தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பாளர், திருத்துநர்.
பிறப்பு, கல்வி
ஜெயஶ்ரீ ஏப்ரல் 26, 1968 அன்று சரோஜா, ஶ்ரீனிவாசன் இணையருக்கு மூத்த மகளாக நாக்பூரில் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரு தம்பிகள்.
பள்ளிக்கல்வியை ஊட்டி சாந்தி விஜயா பெண்கள் பள்ளியிலும், பெத்லஹேம் உயர்நிலைப்பள்ளியிலும் முடித்தார். ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். அடக்கவிலைக் கணக்கீட்டில் இடைநிலைப் பட்டம் ICWAI (Inter) பெற்றார். கோவை NIIT நிறுவனத்தில் கணிணி மேலாண்மையில் பட்டயம் பெற்றார். தென்னிந்திய ஹிந்தி பிரச்சார சபையில் ஹிந்தி கற்று பிரவீண் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
சிறு வயதிலிருந்து வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தன் பாட்டி சீதாலக்ஷ்மி அம்மாள் கூறிய கதைகள், பாடிய தமிழ் தோத்திர, நாட்டுப்புறப் பாடல்களாலும், தமிழ் கற்பித்த ஆசிரியைகளாலும் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டார். ஆங்கில ஆசிரியர்களால் ஆங்கில செவ்விலக்கியங்களின் அறிமுகம் கிடைத்தது.
தனி வாழ்க்கை
ஜெயஶ்ரீ கோவை ஹெச்.சி.எல்(HCL), ஊட்டி ஆப்டெக்(Aptech) நிறுவனங்களில் கணினி பயிற்சியாளராகவும், மென்பொருள் நிரலராகவும் பணியாற்றினார். டில்லிக்கருகிலுள்ள நோய்டாவில் L.K.Software, XANSA நிறுவனங்களில் மென்பொருள் நிரலராகவும் , மென்பொருள் தர மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். 2001-ல் வட அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார்.
கணவர் சூர்யநாராயணன் வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) நிறுவனத்தில் பிணையப் பாதுகாப்பு பொறியாளர்(Network Security and Compliance Engineer). மகன்கள் கௌஷிக், ராகவ். குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் மாசாசூசெட்ஸ் மாநிலம் பாஸ்டன் அருகே வசிக்கிறார்.
மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப்பள்ளி கணிதக்கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்று கடந்த பத்து ஆண்டுகளாக கணித ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் நவீன இலக்கியம் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்க செவ்விலக்கிய வாசிப்பில் ஈடுபாடு கொண்டவர். ஜெயமோகன், புதுமைப்பித்தன், டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, டிக்கன்ஸ், ஹெமிங்வே, விர்ஜினியா வூல்ஃப் ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
வட அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர்.
தமிழ்விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் பங்களிப்பாளர் மற்றும் திருத்துநராக 2022 முதல் பங்காற்றி வருகிறார்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2026, 04:12:04 IST
