விஜயகுமார் சம்மங்கரை: Difference between revisions
SakthivelS (talk | contribs) |
SakthivelS (talk | contribs) |
||
| Line 19: | Line 19: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.jeyamohan.in/153997/ மிருகமோட்சம்: கிருஷ்ணன்: ஜெயமோகன் தளம்] | * [https://www.jeyamohan.in/153997/ மிருகமோட்சம்: கிருஷ்ணன்: ஜெயமோகன் தளம்] | ||
* [https://www.youtube.com/watch?v=L1Ziou9Djes&t=178s விஜயகுமார் சம்மங்கரை உரையாடல் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விருந்தினர் அரங்கம் 2026] | |||
Latest revision as of 17:08, 14 June 2026
- விஜயகுமார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: விஜயகுமார் (பெயர் பட்டியல்)
விஜயகுமார் சம்மங்கரை (பிறப்பு: அக்டோபர் 27, 1983) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
விஜயகுமார் சம்மங்கரை கோவையில் அக்டோபர் 27, 1983 அன்று பழனிச்சாமி, பொன்னாத்தாள் இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் கவிதா. கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். குமரகுரு கல்லூரியில் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
விஜயகுமார் சம்மங்கரை 2012-ல் உமாசெல்வியை மணந்தார். மகன் வைபவ் சிவா. மென்பொருள் துறையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
விஜயகுமார் சம்மங்கரையின் முதல் கதை "வராகம்" பதாகை இதழில் 2021-ல் வெளியானது. பதாகை, வல்லினம், சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். விஜயகுமார் சம்மங்கரையின் முதல் நூல் "மிருகமோட்சம்" யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.
இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், நாஞ்சில் நாடன், லக்ஷ்மி மணிவண்ணன், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கியைக் குறிப்பிடுகிறார்.
இலக்கிய இடம்
"அசல் சவாலான ஆன்மத் தேடலில் ஆன்மிகத் தடை அதாவது அலௌகீக தடை பற்றி குறைவாகவே சிந்திக்கிறோம். ஆன்மிக வேட்கையும் அது தரும் அலௌகீக சஞ்சலமும் பிரிக்க இயலாது, இன்றி அமையாதது. இக்கதை இதை பரிசீலிப்பதால் முக்கியமானது." என விமர்சகர் கிருஷ்ணன் 'மிருகமோட்சம்' சிறுகதை பற்றி மதிப்பிடுகிறார்.
நூல்கள் பட்டியல்
சிறுகதைத்தொகுப்பு
- மிருகமோட்சம் (2022)
- மஹான் சக்கரவர்த்தி & பிற கதைகள் (2024)
இணைப்புகள்
- மிருகமோட்சம்: கிருஷ்ணன்: ஜெயமோகன் தளம்
- விஜயகுமார் சம்மங்கரை உரையாடல் | குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விருந்தினர் அரங்கம் 2026
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Oct-2023, 05:30:24 IST