under review

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
(Removed Category:Spc)
Line 48: Line 48:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 21:44, 8 January 2026

ராமநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமநாதன் (பெயர் பட்டியல்)
செட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டியார் (பெயர் பட்டியல்)
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் (நன்றி: மு. இளங்கோவன்)
இலெ.ப.கரு

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் (எல்.கே.பி.ஆர்) (1914 - ஏப்ரல் 14, 2018) எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர். தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

இலெ.ப.கரு. இராமநாதன் நெற்குப்பை என்ற ஊரில் 1914-ம் ஆண்டில் பிறந்தார்.

தனிவாழ்க்கை

மனைவியுடன்

இலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் அடக்கம்மை ஆச்சி என்பவரை மணந்தார். மூன்று மகன்கள், நான்கு மகள்கள். தன் இறுதிகாலத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்தார்.

ஆசிரியப்பணி

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பதுமுறை பொறுப்பு துணை வேந்தராகவும் இருந்தார். பாடத்திட்டம், ஆட்சிக்குழு, பாடத்திட்டக்குழு என பல்வேறு குழுக்களுக்கு தலைமை வகித்தார். சுவாமி விபுலானந்தர், க. வெள்ளைவாரணர் , குடந்தை.ப.சுந்தரேசனார், பொ.வே. சோமசுந்தரனார் கா.சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் பணிபுரிந்தார்.

அமைப்புப் பணிகள்

  • இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
  • 1944-ல் தமிழிசைக் கல்லூரி உருவாக பங்களித்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் கல்வியாளர், தமிழாய்வாளர். இலக்கியத்திறனாய்வு நோக்கில் எட்டுத்தொகைச்செல்வம், திருத்தக்க தேவர், 'நோக்கு' போன்ற நூல்களை எழுதினார். பண்பாட்டு வரலாற்றாய்வு நோக்கில் 'சோழவேந்தர் மூவர்'(1957), 'சங்க காலத் தமிழர் வாழ்வு', 'அண்ணாமலை அரசர்' உள்ளிட்ட நூல்களை எழுதினார். 'தமிழ் இலக்கிய மாலை' போன்ற நூல்களைத் தொகுத்தார். அண்ணாமலைப் பலகலைக்கழகம் வெளியிட்ட கம்பராமாயண உரைக்குழுவில் இருந்தார். தமிழிசை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்

மறைவு

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் ஏப்ரல் 14, 2018-ல் காலமானார்.

பங்களிப்பு

இலெ.ப.கரு இராமநாதன் செட்டியார் கல்வியாளர், தமிழாய்வாளர், தமிழிசை செயல்பாட்டாளர் என்னும் களங்களில் தமிழ்ப்பணியாற்றினார்.

நூல்கள் பட்டியல்

தொகுத்தவை
  • தமிழ் இலக்கிய மாலை
பதிப்பித்தவை
  • தமிழ் இசைச் சங்கம் சென்னை: பண் ஆராய்ச்சி வெள்ளி விழா

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Jun-2023, 17:05:43 IST