under review

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்

From Tamil Wiki
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் (நன்றி: மு. இளங்கோவன்)

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் (எல்.கே.பி.ஆர்) (1914 - ஏப்ரல் 14, 2018) எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர். தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது ஆண்டுகள் தலைவராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலெ.ப.கரு. இராமநாதன் நெற்குப்பை என்ற ஊரில் 1914-ம் ஆண்டில் பிறந்தார். அடக்கம்மை ஆச்சி என்பவரை மணந்தார். மூன்று மகன்கள், நான்கு மகள்கள். தன் இறுதிகாலத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்தார்.

ஆசிரியப்பணி

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்பதுமுறை பொறுப்பு துணை வேந்தராகவும் இருந்தார். பாடத்திட்டம், ஆட்சிக்குழு, பாடத்திட்டக்குழு என பல்வேறு குழுக்களுக்கு தலைமை வகித்தார்.

அமைப்புப் பணிகள்

  • இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
  • 1944-ல் தமிழிசைக் கல்லூரி உருவாக பங்களித்தார்.

இலக்கிய வாழ்க்கை

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் 'நோக்கு', 'சோழவேந்தர் மூவர்'(1957), 'சங்க காலத் தமிழர் வாழ்வு', 'அண்ணாமலை அரசர்' உள்ளிட்ட நூல்களை எழுதினார். 'தமிழ் இலக்கிய மாலை' போன்ற நூல்களைத் தொகுத்தார். அண்ணாமலைப் பலகலைக்கழகம் வெளியிட்ட கம்பராமாயண உரைக்குழுவில் இருந்தார்.

மறைவு

இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் ஏப்ரல் 14, 2018-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • நோக்கு
  • சோழவேந்தர் மூவர்(1957)
  • சங்க காலத் தமிழர் வாழ்வு
  • அண்ணாமலை அரசர்
  • எட்டுத்தொகைச் செல்வம்
  • திருத்தக்கதேவர்
தொகுத்தவை
  • தமிழ் இலக்கிய மாலை
பதிப்பித்தவை
  • தமிழ் இசைச் சங்கம் சென்னை: பண் ஆராய்ச்சி வெள்ளி விழா

உசாத்துணை


✅Finalised Page