மாமலாடனார்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors;
Line 28: Line 28:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Revision as of 00:55, 21 December 2025

மாமலாடனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மாமலாடனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மலை நாடு ஒன்றில் பிறந்தவர் என்பதற்கப்பால் இவரை பற்றி ஏதும் தெரியவில்லை. சில ஏடுகளில் மாமிலாடன் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மாமலாடனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 46-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டப் புறப்பட்டு சென்ற தலைவனின் பிரிவால் ஏற்பட்ட ஏக்கத்தை தலைவி தோழியிடம் கூறுவதாக மருதத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குருவிகள் வீட்டு முற்றத்தில் உலர வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று பசியாறும். பின்னர் பசுவின் சாணியை உரமாக கொட்டி வைத்திருக்கும் எருமேட்டில் சென்று புழு பூச்சிகளை பிடித்து தின்று ஆடி மகிழும். ஓடு வேயப்பட்ட வீடுகளின் ஏரவானத்தில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும்.
  • உவமை: குருவியின் சிறகு வாடிய அல்லிப்பூ இதழின் மென்மையை ஒத்திருந்தது.

பாடல் நடை

குறுந்தொகை - 46

  • திணை: மருதம்
  • கூற்று: பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது

ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவினுண் தாது குடைவன ஆடி
இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Apr-2025, 19:12:51 IST