பிரமனார்: Difference between revisions
From Tamil Wiki
Corrected typo errors; |
Added: Category:புலவர் |
||
| Line 29: | Line 29: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:54, 21 December 2025
பிரமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
பிரமனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.
இலக்கிய வாழ்க்கை
பிரமனார் பாடிய பாடல் புறநானூறில் 357-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. அறவினை செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காஞ்சித் திணையில் பெருங்காஞ்சி என்னும் துறையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- குன்றுகள் சூழ்ந்து கட்டப்பட்டதாக காட்சியளிக்கும் மண்ணுலகம் மூவேந்தர்களுக்கும் உரிமையுடையது. அவர்கள் அல்லாது தனியாக ஆள்பவர்களும் உள்ளனர்.
- அத்தகு அரசர்கள் இறந்தாலும் செல்வம் அவர்களுக்கு வழித்துணையாக வருவதில்லை. உற்றார், உறவினர் அழுதபடி வழியனுப்பி வைப்பர். வாழும்போது செய்யும் அறவினைகள் மட்டுமே மறுவுலக வாழ்க்கைக்கு துணையாக உடன்வரும்.
- உவமை: இப்பிறப்பு என்னும் இக்கரையில் இருந்து மறுபிறப்பு என்னும் மறுகரைக்கு செல்லும் தெப்பமாக அறவினைகள் அமைந்துள்ளன.
பாடல் நடை
புறநானூறு - 357
- திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி
குன்றுதலை மணந்த மலைபிணித்து யாத்தமண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
மாண்ட அன்றே ஆண்டுகள்; துணையே
வைத்தது அன்றே வெறுக்கை; வித்தும்
அறவினை அன்றே விழுத்துணை; அத்துணைப்
புணைகை விட்டோர்க்கு அரிதே; துணையழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை
இக்கரை நின்றுஇவர்ந்து உக்கரை கொளலே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- புறநானூறு - 357:Puram400
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2025, 12:09:27 IST