குயிலன்: Difference between revisions

From Tamil Wiki
; Added info on Finalised date
Corrected typo errors;
Line 1: Line 1:
[[File:Kuyilan Image.jpg|thumb|கவிஞர் குயிலன்]]
[[File:Kuyilan Image.jpg|thumb|கவிஞர் குயிலன்]]
குயிலன் (கு. இராமலிங்கம்; ஜி. ராமலிங்கம்) (செப்டம்பர் 14, 1922 - டிசம்பர் 08, 2002) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசன ஆசிரியர். பல தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதினார். ’நூலகம்’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பாளர்களுள் ஒருவர்.
குயிலன் (கு. இராமலிங்கம்; ஜி. ராமலிங்கம்) (செப்டம்பர் 14, 1922 - டிசம்பர் 08, 2002) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசன ஆசிரியர். பல தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதினார். 'நூலகம்' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பாளர்களுள் ஒருவர்.
[[File:Kuyilan@Young Age.jpg|thumb|கவிஞர் குயிலன் (இளம் வயதில்)]]
[[File:Kuyilan@Young Age.jpg|thumb|கவிஞர் குயிலன் (இளம் வயதில்)]]


Line 11: Line 11:


==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
குயிலனின் ‘காக்கையும் மனிதனும்’ எனும் முதல் கவிதை, அவரது பதினைந்தாவது வயதில், [[வ.ராமசாமி ஐயங்கார்|வ.ரா]]. ஆசிரியராக இருந்த ‘[[பாரத தேவி]]’ இதழில் வெளியானது. தொடர்ந்து ’[[சுதேசமித்திரன்]]’, ’திருமகள்’, ’இந்திரா’, ’மாலதி’, ’ஹிந்துஸ்தான்’, ’கல்வி’, ’ஜனசக்தி’, ’தொழிலாளர் உலகம்’, ’முத்தமிழ் மலர்’, ’தியாகி’, ’[[சக்தி (இதழ்)|சக்தி]]’, ’நவயுவன்’, ’தென்றல்’, ‘திராவிடநாடு’ உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு நூல்களை எழுதினார்.  
குயிலனின் ‘காக்கையும் மனிதனும்' எனும் முதல் கவிதை, அவரது பதினைந்தாவது வயதில், [[வ.ராமசாமி ஐயங்கார்|வ.ரா]]. ஆசிரியராக இருந்த ‘[[பாரத தேவி]]' இதழில் வெளியானது. தொடர்ந்து '[[சுதேசமித்திரன்]]', 'திருமகள்', 'இந்திரா', 'மாலதி', 'ஹிந்துஸ்தான்', 'கல்வி', 'ஜனசக்தி', 'தொழிலாளர் உலகம்', 'முத்தமிழ் மலர்', 'தியாகி', '[[சக்தி (இதழ்)|சக்தி]]', 'நவயுவன்', 'தென்றல்', ‘திராவிடநாடு' உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு நூல்களை எழுதினார்.  


குயிலன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மனைவி சீதாலக்ஷ்மியுடன் இணைந்து ‘சீதாலக்ஷ்மி குயிலன்’ என்ற பெயரில் பல படைப்புகளை எழுதினார்.
குயிலன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மனைவி சீதாலக்ஷ்மியுடன் இணைந்து ‘சீதாலக்ஷ்மி குயிலன்' என்ற பெயரில் பல படைப்புகளை எழுதினார்.


======மொழிபெயர்ப்பு======
======மொழிபெயர்ப்பு======
Line 19: Line 19:


==இதழியல்==
==இதழியல்==
குயிலன், 'முன்னணி’, 'வாரம்' ஆகிய இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ்ப் பண்ணை சார்பில் [[சின்ன அண்ணாமலை]] வெளியிட்ட ‘மாலதி’ இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘இலக்கிய மன்றம்' இதழின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். பொதுவுடைமை சார்ந்து வெளிவந்த ‘தென்றல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ’நூலகம்’ இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
குயிலன், 'முன்னணி', 'வாரம்' ஆகிய இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ்ப் பண்ணை சார்பில் [[சின்ன அண்ணாமலை]] வெளியிட்ட ‘மாலதி' இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘இலக்கிய மன்றம்' இதழின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். பொதுவுடைமை சார்ந்து வெளிவந்த ‘தென்றல்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 'நூலகம்' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.


==பதிப்பு==
==பதிப்பு==
குயிலன், 1961-ல், ‘குயிலன் பதிப்பகம்’ என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார். பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.
குயிலன், 1961-ல், ‘குயிலன் பதிப்பகம்' என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார். பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.


==அமைப்புச் செயல்பாடுகள்==
==அமைப்புச் செயல்பாடுகள்==
Line 28: Line 28:


==அரசியல்==
==அரசியல்==
குயிலன், காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து பணியாற்றினார். பின் பொதுவுடைமைச் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். பொதுவுடைமைக் கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில், ’முன்னணி’ இதழில், ‘மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்' என்ற தலைப்பில் குயிலன் தலையங்கம் எழுதினார். அதனால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு உள்ளாகிக் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், [[ஐ. மாயாண்டி பாரதி|ஐ.மாயாண்டி பாரதி]] ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
குயிலன், காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து பணியாற்றினார். பின் பொதுவுடைமைச் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். பொதுவுடைமைக் கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில், 'முன்னணி' இதழில், ‘மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்' என்ற தலைப்பில் குயிலன் தலையங்கம் எழுதினார். அதனால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு உள்ளாகிக் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், [[ஐ. மாயாண்டி பாரதி|ஐ.மாயாண்டி பாரதி]] ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.


==திரைப்படம்==
==திரைப்படம்==
குயிலன் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான படங்களின் தமிழ் வடிவத்திற்கு வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எல். நாராயணனால் ‘உலகம்’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய தஞ்சை ராமையாதாஸ், [[கம்பதாசன்]], புரட்சிதாசனுக்குப் பின் அதிகப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர் குயிலன். கீழ்க்காணும் படங்கள் உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
குயிலன் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான படங்களின் தமிழ் வடிவத்திற்கு வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எல். நாராயணனால் ‘உலகம்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய தஞ்சை ராமையாதாஸ், [[கம்பதாசன்]], புரட்சிதாசனுக்குப் பின் அதிகப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர் குயிலன். கீழ்க்காணும் படங்கள் உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.


*அரபு நாட்டு அழகி
*அரபு நாட்டு அழகி
Line 61: Line 61:
*ஜிம்போ
*ஜிம்போ


குயிலன் எழுதிய திரைப்பாடல்களை, திருப்பூர் அகிலா விஜயகுமார் மற்றும் புதுவை ஜெ. அபுபக்கர் ஹனிபா இருவரும் இணைந்து ’கவிஞர் குயிலன் திரை இசைப் பாடல்கள்' என்ற தலைப்பில் தொகுத்தனர். மணிவாசகர் பதிப்பகம், 2015-ல் அதனை நூலாக வெளியிட்டது.
குயிலன் எழுதிய திரைப்பாடல்களை, திருப்பூர் அகிலா விஜயகுமார் மற்றும் புதுவை ஜெ. அபுபக்கர் ஹனிபா இருவரும் இணைந்து 'கவிஞர் குயிலன் திரை இசைப் பாடல்கள்' என்ற தலைப்பில் தொகுத்தனர். மணிவாசகர் பதிப்பகம், 2015-ல் அதனை நூலாக வெளியிட்டது.


==மறைவு==
==மறைவு==
Line 67: Line 67:


==மதிப்பீடு==
==மதிப்பீடு==
மரபுக் கவிதையில் தேர்ந்தவராக விளங்கிய குயிலன், தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்பாடல்களைத் தந்த பாடலாசிரியராக அறியப்படுகிறார். குயிலனின் படைப்புகள் பற்றி [[வெ. இராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை]], “குயிலன் அவர்களின் கவிகளில் நல்ல சொல்லாட்சியும், கற்பனை ஆர்வமும் நிறைந்திருக்கின்றன” என்று மதிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் மதிப்பிடப்படுகிறார்.
மரபுக் கவிதையில் தேர்ந்தவராக விளங்கிய குயிலன், தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்பாடல்களைத் தந்த பாடலாசிரியராக அறியப்படுகிறார். குயிலனின் படைப்புகள் பற்றி [[வெ. இராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை]], "குயிலன் அவர்களின் கவிகளில் நல்ல சொல்லாட்சியும், கற்பனை ஆர்வமும் நிறைந்திருக்கின்றன" என்று மதிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் மதிப்பிடப்படுகிறார்.


==நூல்கள்==
==நூல்கள்==

Revision as of 16:02, 22 November 2025

கவிஞர் குயிலன்

குயிலன் (கு. இராமலிங்கம்; ஜி. ராமலிங்கம்) (செப்டம்பர் 14, 1922 - டிசம்பர் 08, 2002) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், வசன ஆசிரியர். பல தமிழ்த் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். மொழிமாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதினார். 'நூலகம்' உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க அமைப்பாளர்களுள் ஒருவர்.

கவிஞர் குயிலன் (இளம் வயதில்)

பிறப்பு, கல்வி

கு. ராமலிங்கம் என்னும் இயற்பெயரை உடைய குயிலன், செப்டம்பர் 14, 1922 அன்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பனைக்குடியில், குருமூர்த்திப் பிள்ளை -வெயிலுகந்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். குடும்பச் சூழலால் ரங்கூனுக்குச் சென்று பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றார்.

தனி வாழ்க்கை

குயிலன் இதழாளராகவும் எழுத்தாளராகவும் செயல்பட்டார். மணமானவர். மனைவி சீதாலக்ஷ்மி.

குயிலன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

குயிலனின் ‘காக்கையும் மனிதனும்' எனும் முதல் கவிதை, அவரது பதினைந்தாவது வயதில், வ.ரா. ஆசிரியராக இருந்த ‘பாரத தேவி' இதழில் வெளியானது. தொடர்ந்து 'சுதேசமித்திரன்', 'திருமகள்', 'இந்திரா', 'மாலதி', 'ஹிந்துஸ்தான்', 'கல்வி', 'ஜனசக்தி', 'தொழிலாளர் உலகம்', 'முத்தமிழ் மலர்', 'தியாகி', 'சக்தி', 'நவயுவன்', 'தென்றல்', ‘திராவிடநாடு' உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல்வேறு நூல்களை எழுதினார்.

குயிலன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மனைவி சீதாலக்ஷ்மியுடன் இணைந்து ‘சீதாலக்ஷ்மி குயிலன்' என்ற பெயரில் பல படைப்புகளை எழுதினார்.

மொழிபெயர்ப்பு

குயிலன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, வடமொழியிலிருந்து தமிழுக்கு எனப் பல நூல்களை மொழிபெயர்த்தார். வடமொழி நூலான விவேக சூடாமணியைத் தமிழில் கவிதை நடையில் தந்தார். குயிலனின் மொழிபெயர்ப்பில் வெளியான எமிலி ஜோலோவின் 'தெரசா' குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பு நூலாக அறியப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் குயிலனின் படைப்புகள் வெளியாகின.

இதழியல்

குயிலன், 'முன்னணி', 'வாரம்' ஆகிய இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ்ப் பண்ணை சார்பில் சின்ன அண்ணாமலை வெளியிட்ட ‘மாலதி' இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘இலக்கிய மன்றம்' இதழின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். பொதுவுடைமை சார்ந்து வெளிவந்த ‘தென்றல்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 'நூலகம்' இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பதிப்பு

குயிலன், 1961-ல், ‘குயிலன் பதிப்பகம்' என்ற பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கிப் பல நூல்களை வெளியிட்டார். பல எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

குயிலன், பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். தமிழ்ஒளி, முகவை ராஜமாணிக்கம் ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.

அரசியல்

குயிலன், காங்கிரஸ் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து பணியாற்றினார். பின் பொதுவுடைமைச் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். பொதுவுடைமைக் கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில், 'முன்னணி' இதழில், ‘மஞ்சள் பெட்டியில் மண்ணைப் போடுங்கள்' என்ற தலைப்பில் குயிலன் தலையங்கம் எழுதினார். அதனால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு உள்ளாகிக் கைது செய்யப்பட்டார். விசாரணைக் கைதியாக மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

திரைப்படம்

குயிலன் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான படங்களின் தமிழ் வடிவத்திற்கு வசன ஆசிரியராகப் பணியாற்றினார். ஏ.எல். நாராயணனால் ‘உலகம்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய தஞ்சை ராமையாதாஸ், கம்பதாசன், புரட்சிதாசனுக்குப் பின் அதிகப் படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர் குயிலன். கீழ்க்காணும் படங்கள் உள்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

  • அரபு நாட்டு அழகி
  • அருமைத் தங்கை அபிராமி
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • ஆசை மகன்
  • ஆண்டி பெற்ற செல்வன்
  • ஆவதெல்லாம் பெண்ணாலே
  • உலகம்
  • எங்கள் செல்வி
  • எல்லாம் இன்பமயம்
  • சந்தானம்
  • நானே ராஜா
  • கண் நிறைந்த கணவன்
  • வீட்டுக்கு வந்த வரலட்சுமி
  • வெற்றி வீரன்
  • வைர மாலை
  • புயலுக்குப் பின்
  • சதி சுலோசனா
  • ஸ்ரீனிவாச கல்யாணம்
  • ஸ்ரீ ராம பக்த ஹனுமான்
  • நாகமோகினி
  • மாயமணி
  • பக்காத் திருடன்
  • பாண்டவர் வனவாசம்
  • வீர கடோத்கஜன்
  • வீர அமர்சிங்
  • மஹிராவணன் அல்லது ஹனுமான் பாதாளவிஜயம்
  • ஜிம்போ

குயிலன் எழுதிய திரைப்பாடல்களை, திருப்பூர் அகிலா விஜயகுமார் மற்றும் புதுவை ஜெ. அபுபக்கர் ஹனிபா இருவரும் இணைந்து 'கவிஞர் குயிலன் திரை இசைப் பாடல்கள்' என்ற தலைப்பில் தொகுத்தனர். மணிவாசகர் பதிப்பகம், 2015-ல் அதனை நூலாக வெளியிட்டது.

மறைவு

குயிலன், டிசம்பர் 08, 2002-ல் காலமானார்.

மதிப்பீடு

மரபுக் கவிதையில் தேர்ந்தவராக விளங்கிய குயிலன், தமிழின் குறிப்பிடத்தகுந்த திரைப்பாடல்களைத் தந்த பாடலாசிரியராக அறியப்படுகிறார். குயிலனின் படைப்புகள் பற்றி நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, "குயிலன் அவர்களின் கவிகளில் நல்ல சொல்லாட்சியும், கற்பனை ஆர்வமும் நிறைந்திருக்கின்றன" என்று மதிப்பிட்டார். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவராக குயிலன் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறார் நூல்
  • குருவிக்கூடு
கவிதை நூல்
  • புதுத்தமிழ் கவிமலர்கள்
  • வழிப்போக்கன் முதலிய கவிதைகள்
  • நனவாக வேண்டிய கனவு
  • தீபாவளி
  • செங்குமுதம் (காவியம்)
  • நிலை பெற்ற சிலை (காவியம்)
சிறுகதைத் தொகுப்பு
  • புதருக்குள் நடந்தது
  • ஒரு கிராமம் விழித்துக்கொள்கிறது
  • பரிசு
  • பெண்களுக்கு உதவி
நாவல்
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
  • புரட்சிப் பெண்
  • நாடகம்
  • பிழைக்கும் வழி
  • சந்திப்பு
  • மரணதண்டனை
கட்டுரை நூல்
  • ஒலியும் வரியும் மொழியும்
  • மா-சே-துங்
  • பாரத நாட்டின் வீரபுத்திரன்
மொழிபெயர்ப்பு
  • தெரெசா (பிரெஞ்சு மூலம்: எமிலி ஜோலோ, Theresa)
  • அவன் பெற்ற செல்வம் (ஆங்கில மூலம்: The Great Expectations)
  • அடிமைப் பெண் (ஆங்கில மூலம்: பி.எஸ்.பெக்சன், The Bond Maid)
  • ஒளி பிறந்தது (மூலம்: மலையாளச் சிறு கதைகள்)
  • தபசு (மலையாள மூலம்: பாரப்புரத்து)
  • மயில் நமது தேசியப் பறவை (மூலம் ஆசிரியர் டி. பி. குரூப்)

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 09:59:56 IST