கதக்கண்ணனார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "கதக்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. ==வாழ்க்கை குறிப்பு== கதக்கண்ணனார் சங்க க..." |
Corrected typo errors; |
||
| Line 18: | Line 18: | ||
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல் | தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல் | ||
நடுநாள் வருதலும் வரூஉம் | நடுநாள் வருதலும் வரூஉம் | ||
வடுநா ணலமே தோழி நாமே. | வடுநா ணலமே தோழி நாமே. | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
Revision as of 19:14, 10 May 2025
கதக்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கதக்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கதக்கண் என்னும் சொல்லுக்கு சினமிக்க கண் என்று பொருள். கதக்கண் என்ற சொல்லால் சிவன் மற்றும் திருமால் இரு தெய்வங்களும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர் இரு தெய்வங்களில் ஒருவரை வழிபடும் மரபினராக இருத்தல் வேண்டும் என கருதப்படுகிறது. மதுரையில் வாழ்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கதக்கண்ணனார் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 88 ஆம் மற்றும் 94 ஆம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 88 ஆம் பாடல் இரவு நேரத்தில் வந்து சந்திக்க போகும் தலைவனின் வருகையை குறித்து நாணமடையாதே என தோழி தலைவிக்கு அறிவுரைப்பதாக குறிஞ்சித் திணையிலும் குறுந்தொகை 94 ஆம் பாடல் பொருள்வயின் பிரிந்து சென்ற தலைவன் பிரிவினால் அடையும் துயரை எண்ணி தான் அடையும் துயரை தலைவி தோழிக்கு உரைப்பதாக முல்லைத் திணையிலும் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மலைமீது அமைந்துள்ள ஊர்களில் அருவி உண்டாக்கும் மிகு ஓசை எப்போதும் கேட்டப்படி இருக்கும்.
- மலையில் சிறிய கண்களையுடைய யானையும் கூரிய நகங்களும் கொண்ட புலியும் வாழும். அவை ஒன்றுடொனொன்று சண்டையிட்டு கொள்ளும் இயல்பு கொண்டவை.
- மழை பெய்யும் கார்க்காலத்தில் பித்திக பூவின் அரும்புகள் மொக்கு விடும். சில நேரம் அவை மழைக்காலத்திற்கு முன்பாகவும் அரும்பு விடுவதுண்டு.
- பொருள்தேடி தம் மனைவியரை பிரிந்து செல்லும் ஆடவர் மலைகளால் சூழப்பெற்ற மிகுந்த மழையும் நீர் பெருக்கும் கொண்ட பாதைகளை கடந்து செல்ல வேண்டும்.
பாடல் நடை
குறுந்தொகை - 88
- திணை: குறிஞ்சி
- கூற்று: இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 88:Tamilvu
- குறுந்தொகை - 94:Tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.