under review

மிளைவேள் தித்தன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(; Added info on Finalised date)
Line 26: Line 26:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|31-Mar-2025, 10:03:56 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:34, 31 March 2025

மிளைவேள் தித்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மிளைவேள் தித்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். தித்தன் என்னும் இயற்பெயர் உடையவர். மிளை என்னும் ஊரில் பிறந்தவர். வேளிர்குடியை சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

மிளைவேள் தித்தன் பாடிய பாடல் குறுந்தொகையில் 284-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்காக பொருளீட்ட சென்ற தலைவன் திரும்பி வந்து தன்னை மணம் புரிந்து கொள்வானா என்று துயரத்தில் இருக்கும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் கூற்றாக குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குறிஞ்சி நில மக்கள் அருவிகள் கொட்டும் பெரிய மலையின் பக்கத்தில் தம்முடைய சிறிய குடில்கள் அமைந்த ஊரை உருவாக்கிக் கொள்வர்.
  • திருமணத்திற்காகப் பொருளீட்ட சென்ற ஆடவர் தம் சொல்படி திரும்பி வந்து, அவர்கள் வாக்கு கொடுத்த மகளிரை மணக்காவிட்டாலும் கூட ஊரார் அப்பெண்ணை பழிசொல்ல மாட்டார்கள்.
  • உவமை: ஊர் பொது மன்றத்து நடுவில் அமைந்திருக்கும் பாறையை சுற்றி செங்காந்தள் பூக்கள் மலர்ந்திருக்கும் காட்சியானது, போரில் ஈடுபட்டு நெற்றியில் புண்ணாகி ரத்தத்துளிகள் வழியும் யானையின் மத்தகத்தை ஒத்திருக்கிறது.

பாடல் நடை

குறுந்தொகை - 284

  • திணை: குறிஞ்சி கூற்று: வரைவிடைத் தோழி,கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது.

பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்
அறவ னாயினும் அல்ல னாயினும்
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும்
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Mar-2025, 10:03:56 IST