under review

எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள்: Difference between revisions

From Tamil Wiki
m (Reviewed by Je)
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Elanthurai Govindaswamy Pillai Sagotharargal|Title of target article=Elanthurai Govindaswamy Pillai Sagotharargal}}
எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்றவர்கள் எலந்துறை கோவிந்தஸ்வாமி பிள்ளை, எலந்துறை நாராயணஸ்வாமி பிள்ளை என்ற சகோதரர்கள்.
எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்றவர்கள் எலந்துறை கோவிந்தஸ்வாமி பிள்ளை, எலந்துறை நாராயணஸ்வாமி பிள்ளை என்ற சகோதரர்கள்.



Revision as of 06:54, 29 July 2022

To read the article in English: Elanthurai Govindaswamy Pillai Sagotharargal. ‎

எலந்துரை கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்றவர்கள் எலந்துறை கோவிந்தஸ்வாமி பிள்ளை, எலந்துறை நாராயணஸ்வாமி பிள்ளை என்ற சகோதரர்கள்.

இளமை, கல்வி

கோவிந்தஸ்வாமி பிள்ளையும் நாராயணஸ்வாமி பிள்ளையும், எலந்துரை (இளந்துறை) என்ற ஊரில் நாதஸ்வரக் கலைஞர் அருணாசலம் பிள்ளை - தாயம்மாள் இணையருக்குப் பிறந்தனர்.

பரிசுத்தமான வாசிப்பு கொண்டவர் எனப் பெயர் பெற்ற தந்தை அருணாசலம் பிள்ளையிடமே முதல் இசைப்பயிற்சியைத் துவக்கினர். பின்னர் மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளையிடம் மேற்பயிற்சி பெற்றனர்.

தனிவாழ்க்கை

வடபாதிமங்கலம் பக்கிரிப் பிள்ளையின் மகள் பாக்கியத்தம்மாளை கோவிந்தஸ்வாமி பிள்ளை மணந்தார், ப்ரமரகுசலாம்பாளை நாராயணஸ்வாமி பிள்ளை மணந்தார். வடபாதிமங்கலத்தில் குடியேறி வாழ்ந்தனர்.

கோவிந்தஸ்வாமி பிள்ளைக்கு இரு மகன்கள்: பக்கிரிஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்), சந்தானகிருஷ்ணன்

நாராயணஸ்வாமி பிள்ளைக்கு இரு மகன்கள்: கணேசன், ஷண்முகம்.

இசைப்பணி

கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்கள் இணைந்து வாசிக்கும்போது ஒரே நாதஸ்வரம் போல ஒலிக்கும். கோவிந்தஸ்வாமி பிள்ளையின் வாசிப்பில் விரலடியும், நாராயணஸ்வாமி பிள்ளையின் வாசிப்பில் வீணை போல கமகங்களும் சிறப்பாக இருக்கும். பைரவி, சங்கராபரணம், காம்போஜி இம்மூன்றும் கோவிந்தஸ்வாமி பிள்ளையின் தனிச்சிறப்பான ராகங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை மணிக்கணக்காக ஆலாபனை செய்வார். இளையவர் தர்பார் அல்லது கேதாரகௌளையில் ராக ஆலாபனையைத் துவக்குவது வழக்கம்.

நாராயணஸ்வாமி பிள்ளை பலமுறை யாழ்ப்பாணம் சென்று ஒவ்வொரு முறையும் ஆறுமாதம் தங்கி அங்கு கச்சேரிகள் செய்தவர்.

கோவிந்தஸ்வாமி பிள்ளை நாதஸ்வரம் தவிர வாய்ப்பாட்டு, புல்லாங்குழலிலும் திறமை கொண்டவர்.

மாணவர்கள்

கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்களிடம் பயின்ற முக்கியமான மாணவர்கள்:

  • வடபாதிமங்கலம் ராமஸ்வாமி பிள்ளை
  • குடவாயில் ராஜண்ணா பிள்ளை
  • சேங்காலிபுரம் தங்கவேல் பிள்ளை
  • பக்கிரிஸ்வாமி பிள்ளை (கோவிந்தஸ்வாமி பிள்ளையின் மகன்)
  • மன்னார்குடி மாணிக்கம் பிள்ளை (இவரது முதல் குரு நாராயணஸ்வாமி பிள்ளை)
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கோவிந்தஸ்வாமி பிள்ளை சகோதரர்களுக்குத் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

கோவிந்தஸ்வாமி பிள்ளை 1962-ஆம் ஆண்டிலும் நாராயணஸ்வாமி பிள்ளை 1957-ஆம் ஆண்டிலும் காலமானார்கள்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page