being created

சயாம் மரண ரயில்பாதை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:
இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் தாய்லாந்து ஒரு நடுநிலை நாடாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. டிசம்பர் 8, 1941இல் ஜப்பான் தாய்லாந்தை ஆக்கிரமித்தது. 1942ல் தாய்லாந்து வழியாக பர்மாவில் நுழைந்த ஜப்பானிய படைகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவையும் ஆக்கிரமித்தன. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. மலாய் தீபகற்பத்தைச் சுற்றி அபாயகரமான 3200 கி.மீ கடல் பயணத்தைத் தவிர்க்க, பாங்காக்கிலிருந்து ரங்கூனுகு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் பாதையை மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. அவை பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), பர்மா – சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway) ஆகும்.  

தாய்லாந்தில் உள்ள பான் பாங்க் (Ban Pong) முதல் பர்மாவில் உள்ள தன்பியூசத் (Thanbyuzayat) வரை இந்த ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 111 கிலோ மீட்டர் பர்மாவிலும் 304 கிலோ மீட்டர் தாய்லாந்திலும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. சிங்கப்பூர் சாங்கி சிறையிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற சிறை முகாம்களிலிருந்தும் போர்க்கைதிகள் 1942இல் வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு சயாம் - பர்மா பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.  

ஜூன் 23, 1942இல் நோங் பிளாடுக் (Non Pladuk) வந்து இடைதங்கலுக்கான ஒரு முகாமைக் கட்டினர். உள்கட்டமைப்பின் ஆரம்பக்கட்ட பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 16, 1942இல் ரயில் பாதை கட்டுமானம் தொடங்கியது. பர்மாவில் இருந்து ஒரு கட்டுமான குழுவும் தாய்லாந்தில் இருந்து மற்றுமொரு குழுவும் இடைவிடாது பணியில் ஈடுபட்டது. டிசம்பர் 1943ல் இத்திட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர ஜப்பானிய அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அக்டோபர் 17, 1943ல் இத்திட்டம் நிறைவு பெற்றது.  

Line 15: Line 15:
== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ==
== இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ==
ரப்பர் தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என பல ஆயிரம் மக்கள் கடுமையான உடல் உழைப்பு வேலைகளுக்கு பல்வேறு பொய்களால் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டனர். நோயாலும் பசியாலும் விபத்தாலும் கொலைத் தண்டனைகளாலும்  ஆயிரக்கணக்கில் மக்கள்  இறந்துகொண்டிருக்க, தண்டவாளம் போடும் முயற்சியை நிறைவு செய்யும் தீவிரத்துடன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களும் வலுக்கட்டாயமாகப் பணியவைத்து ரயில் பாதை போடும் வேலைக்குப் பிடித்துச்செல்லப்பட்டனர்.

== தொழிலாளர்கள் ==
== தொழிலாளர்கள் ==
====== ஜப்பானியர்கள் ======
====== ஜப்பானியர்கள் ======
இந்த ரயில் பாலம் 12,000 ஜப்பானிய வீரர்களின் மேற்பார்வையில் அமைந்தது. அவர்களில் 800 கொரிய வீரர்களும் அடங்குவர். இவர்களே இரயில் பொறியியலாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர். அவர்களில் 800 கொரியர்களும் அடங்குவர். ஜப்பானிய வீரர்களுக்குக் கடுமையான பணிச்சுமை இல்லாத போதும் சுமார் 1000 பேர் வரை ரயில் கட்டுமானத்தின் போது இறந்தனர். ஜப்பானிய வீரர்கள் போர்க்கைதிகளிடமும் பிற தொழிலாளர்களிடமும் வன்முறையைப் பிரயோகித்ததோடு உடல் ரீதியான சித்திரவதைகளும் செய்தனர். தொழிலாளர்களுக்குக் கடும் தண்டனைகளையும் அவமானங்களையும் வழங்கிக்கொண்டே இருந்தனர்.  

====== தென்கிழக்காசிய தொழிலாளர்கள் ======

இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்ட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆகும். ஜாவா இன மக்கள், மலாயா தமிழர்கள், பர்மியர்கள், சீனர்கள், தாய்லாந்து மக்கள் மற்றும் பிற தென்கிழக்காசியர்கள் ஜப்பான் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதன் கட்டுமானப் பணியில் பலரும் இறந்தனர். தொடக்கக் கட்டத்தில் பர்மியர்களும் தாய்லாந்துகாரர்களும் அந்தந்த நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டனர், இதில் தாய்லாந்து தொழிலாளர்கள் தப்பித்து ஓடினர். பர்மியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஜப்பானிய ஆக்கிரமிப்பை பர்மியர்கள் வரவேற்றதோடு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பில் ஜப்பானுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்.

ரயில் பாலம் அமைக்க துரிதம் காட்டிய ஜப்பான் அரசு, 1943இன் முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியமும் தங்கும் வசதியும் தருவதாக உறுதியளித்தது. அதை மக்கள் நம்பாதபோது பொதுமக்கள் ஜப்பானிய அரசால் வற்புறுத்தப்பட்டு பாலம் அமைக்க பிடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 100,000க்கும் மேற்பட்ட மலாயா தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 60,000 பேருக்கு மேல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.  

====== போர்க் கைதிகள் ======
====== போர்க் கைதிகள் ======
பர்மாவுக்குச் சென்ற முதல் போர்க் கைதிகளான 3000 ஆஸ்திரேலியர்கள் ரயில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் விமான நிலையம் மற்றும் உள் கட்டமைப்பில் பணிபுரிந்தனர். தொடர்ந்து போர்கைதிகள் சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வழித்தடத்தின் ஒவ்வொரு 8-17 கிலோ மீட்டருக்கும் குறைந்தது 1000 தொழிலாளர்கள் தங்கும் முகாம்களை நிறுவினர். முகாம்கள் ஓலைக் கூரையுடன் மூங்கில் தூண்களால் கட்டப்பட்டது. அதன் பக்கவாட்டுகள் திறந்திருந்தன. இந்த முகாம்கள் 60 மீட்டர் நீளம் கொண்டவை. ஒரு மண் தரையின் ஒவ்வொரு பக்கத்திலும் தரையில் இருந்து மேடைகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளர்களும் தூங்க இரண்டடி அகலமான இடம் கொடுக்கப்பட்டது.  

== கொடுமைகள் ==

== இலக்கியப் பதிவுகள் ==
== இலக்கியப் பதிவுகள் ==

Revision as of 17:25, 15 June 2022

சயாம் மரணரயில்
சயாம் மரணரயில் பாதை அமைப்பு
சயாம் மரணரயில் பாதை அமைப்பு

‘சயாம் மரண ரயில்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் தாய்லாந்து – பர்மா இரயில் பாதை, இரண்டாம் உலகப்போரில் போது (செப்டம்பர் 16, 1942 - அக்டோபர் 17, 1943) கட்டப்பட்ட 415 கி.மீ (258 மைல்கள்) ரயில் பாதை ஆகும். தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் நோக்கத்தில் ஜப்பானியர்களால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் ஏறக்குறைய 180,000 லிருந்து 250 000 ஆசியத் தொழிலாளர்களும், 60,000 மேற்பட்ட போர்க் கைதிகளும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர். மிகக்கடுமையான வேலைச்சூழல், போதிய உணவு இல்லாமை, நோய், வன மிருகங்களின் தாக்குதல் மற்றும் ஜப்பானியர்கள் விதித்த மிகக் கடுமையான தண்டனை காரணமாக சுமார் 90,000 ஆசியத் தொழிலாளர்களும் 12,000க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளும் இறந்து போயினர். இந்த ரயில் பாதையை ஜப்பானிய அரசாங்கம் Tai – Men Rensetsu Tetsudō (தாய்லாந்து-பர்மா இணைப்பு ரயில்வே) என அழைத்தது.

வரலாறு

பர்மாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஒரு ரயில் பாதை அமைக்க 1885ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் அரசால் ஆய்வு செய்யப்பட்டது. தாய்லாந்து மியன்மார் எல்லையில் 282 மீட்டர் உயரத்தில் உள்ள கணவாய் (Three Pagodas Pass), மேற்கு தாய்லாந்தில் உள்ள குவாய் நதி ஆகியவை குறுக்கிட்டதால் அப்பணி மிகக் கடுமையானது என அத்திட்டம் மீட்டுக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் தாய்லாந்து ஒரு நடுநிலை நாடாகவே தன்னை அறிவித்துக்கொண்டது. டிசம்பர் 8, 1941இல் ஜப்பான் தாய்லாந்தை ஆக்கிரமித்தது. 1942ல் தாய்லாந்து வழியாக பர்மாவில் நுழைந்த ஜப்பானிய படைகள் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த பர்மாவையும் ஆக்கிரமித்தன. ஜப்பானியர் தங்களின் படைகளைப் பராமரிக்க, மலாக்கா நீரிணை மற்றும் அந்தமான் கடல் வழியாக வரவேண்டி இருந்தது. மேலும், நேச நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் தாக்குதல் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. மலாய் தீபகற்பத்தைச் சுற்றி அபாயகரமான 3200 கி.மீ கடல் பயணத்தைத் தவிர்க்க, பாங்காக்கிலிருந்து ரங்கூனுகு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த இரயில் பாதையை மூன்று பெயர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. அவை பர்மா இரயில்பாதை (Burma Railway), மரண இரயில்பாதை (Death Railway), பர்மா – சயாம் இரயில்பாதை (Burma–Siam Railway) ஆகும்.

தாய்லாந்தில் உள்ள பான் பாங்க் (Ban Pong) முதல் பர்மாவில் உள்ள தன்பியூசத் (Thanbyuzayat) வரை இந்த ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. 111 கிலோ மீட்டர் பர்மாவிலும் 304 கிலோ மீட்டர் தாய்லாந்திலும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. சிங்கப்பூர் சாங்கி சிறையிலிருந்தும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற சிறை முகாம்களிலிருந்தும் போர்க்கைதிகள் 1942இல் வடக்கு நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ரயில் பாதை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் மலாயாவில் இருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. மலாக்கா, சிங்கப்பூர், கோத்தாபாரு, கோலா லிப்பிஸ் பகுதிகளில் ஏற்கனவே போடப்பட்டிருந்த ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெடுக்கப்பட்டு சயாம் - பர்மா பாதைக்கு பயன்படுத்தப்பட்டன.

ஜூன் 23, 1942இல் நோங் பிளாடுக் (Non Pladuk) வந்து இடைதங்கலுக்கான ஒரு முகாமைக் கட்டினர். உள்கட்டமைப்பின் ஆரம்பக்கட்ட பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 16, 1942இல் ரயில் பாதை கட்டுமானம் தொடங்கியது. பர்மாவில் இருந்து ஒரு கட்டுமான குழுவும் தாய்லாந்தில் இருந்து மற்றுமொரு குழுவும் இடைவிடாது பணியில் ஈடுபட்டது. டிசம்பர் 1943ல் இத்திட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர ஜப்பானிய அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே அக்டோபர் 17, 1943ல் இத்திட்டம் நிறைவு பெற்றது.

இந்த நிறைவை ஒட்டி அக்டோபர் 25, 1943ல் விடுமுறை அறிவிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்

ரப்பர் தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள், தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என பல ஆயிரம் மக்கள் கடுமையான உடல் உழைப்பு வேலைகளுக்கு பல்வேறு பொய்களால் ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டனர். நோயாலும் பசியாலும் விபத்தாலும் கொலைத் தண்டனைகளாலும்  ஆயிரக்கணக்கில் மக்கள்  இறந்துகொண்டிருக்க, தண்டவாளம் போடும் முயற்சியை நிறைவு செய்யும் தீவிரத்துடன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களும் வலுக்கட்டாயமாகப் பணியவைத்து ரயில் பாதை போடும் வேலைக்குப் பிடித்துச்செல்லப்பட்டனர்.

தொழிலாளர்கள்

ஜப்பானியர்கள்

இந்த ரயில் பாலம் 12,000 ஜப்பானிய வீரர்களின் மேற்பார்வையில் அமைந்தது. அவர்களில் 800 கொரிய வீரர்களும் அடங்குவர். இவர்களே இரயில் பொறியியலாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர். அவர்களில் 800 கொரியர்களும் அடங்குவர். ஜப்பானிய வீரர்களுக்குக் கடுமையான பணிச்சுமை இல்லாத போதும் சுமார் 1000 பேர் வரை ரயில் கட்டுமானத்தின் போது இறந்தனர். ஜப்பானிய வீரர்கள் போர்க்கைதிகளிடமும் பிற தொழிலாளர்களிடமும் வன்முறையைப் பிரயோகித்ததோடு உடல் ரீதியான சித்திரவதைகளும் செய்தனர். தொழிலாளர்களுக்குக் கடும் தண்டனைகளையும் அவமானங்களையும் வழங்கிக்கொண்டே இருந்தனர்.

தென்கிழக்காசிய தொழிலாளர்கள்

இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்ட தென்கிழக்காசிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆகும். ஜாவா இன மக்கள், மலாயா தமிழர்கள், பர்மியர்கள், சீனர்கள், தாய்லாந்து மக்கள் மற்றும் பிற தென்கிழக்காசியர்கள் ஜப்பான் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அதன் கட்டுமானப் பணியில் பலரும் இறந்தனர். தொடக்கக் கட்டத்தில் பர்மியர்களும் தாய்லாந்துகாரர்களும் அந்தந்த நாடுகளில் பணியில் அமர்த்தப்பட்டனர், இதில் தாய்லாந்து தொழிலாளர்கள் தப்பித்து ஓடினர். பர்மியர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஜப்பானிய ஆக்கிரமிப்பை பர்மியர்கள் வரவேற்றதோடு தொழிலாளர்களுக்கான ஆட்சேர்ப்பில் ஜப்பானுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்.

ரயில் பாலம் அமைக்க துரிதம் காட்டிய ஜப்பான் அரசு, 1943இன் முற்பகுதியில் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியமும் தங்கும் வசதியும் தருவதாக உறுதியளித்தது. அதை மக்கள் நம்பாதபோது பொதுமக்கள் ஜப்பானிய அரசால் வற்புறுத்தப்பட்டு பாலம் அமைக்க பிடித்துச் செல்லப்பட்டனர். சுமார் 100,000க்கும் மேற்பட்ட மலாயா தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 60,000 பேருக்கு மேல் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

போர்க் கைதிகள்

பர்மாவுக்குச் சென்ற முதல் போர்க் கைதிகளான 3000 ஆஸ்திரேலியர்கள் ரயில் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் விமான நிலையம் மற்றும் உள் கட்டமைப்பில் பணிபுரிந்தனர். தொடர்ந்து போர்கைதிகள் சிங்கப்பூர் மற்றும் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வழித்தடத்தின் ஒவ்வொரு 8-17 கிலோ மீட்டருக்கும் குறைந்தது 1000 தொழிலாளர்கள் தங்கும் முகாம்களை நிறுவினர். முகாம்கள் ஓலைக் கூரையுடன் மூங்கில் தூண்களால் கட்டப்பட்டது. அதன் பக்கவாட்டுகள் திறந்திருந்தன. இந்த முகாம்கள் 60 மீட்டர் நீளம் கொண்டவை. ஒரு மண் தரையின் ஒவ்வொரு பக்கத்திலும் தரையில் இருந்து மேடைகள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு தொழிலாளர்களும் தூங்க இரண்டடி அகலமான இடம் கொடுக்கப்பட்டது.

கொடுமைகள்

இலக்கியப் பதிவுகள்

ஊடகப்பதிவுகள்

நாடோடிகள் கலைக்குழு சார்பாக SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பில் தமிழிலும் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.