அமெரிக்க இலங்கை மிஷன்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 8: | Line 8: | ||
1810-ல் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்தினரால் உருவாக்கப்பட்ட மிஷனரி அமைப்பு (American Board of Commissioners for Foreign Missions (ABCFM)) வழியாக அமெரிக்க இலங்கை மிஷன் உருவாக்கப்பட்டது. 1812-ல் முதல் மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கடுமையான பயணங்களுக்குப் பின் இந்தியா (கொல்கத்தா) வந்து சேர்ந்தனர் (ஜூன் 17, 1812). அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் பிற மத போதகர்களுக்கு அனுமதி வழங்காததால் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் பம்பாய் (மும்பை) மிஷனரிகளின் அழைப்பைப்பெற்று, சாமுவேல் நெவெல் எனும் மிஷனரி பம்பாய்க்குப் பயணித்தார். தற்செயலாக அவரது கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதன் வழியாக அங்கிருந்த ஆட்சியாளர்களுடனும் மதப்பணியாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் நெவல். ஆங்கிலேய ஆளுனர் அமெரிக்க மிஷனை இலங்கையில் துவங்கும்படி நெவலைக் கேட்டுக்கொண்டார். அமெரிக்கப் போர் முடிவடைந்ததும் ஐந்து புதிய மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தனர். 1816-ல் அமெரிக்க இலங்கை மிஷன் தொடங்கப்பட்டது. | 1810-ல் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்தினரால் உருவாக்கப்பட்ட மிஷனரி அமைப்பு (American Board of Commissioners for Foreign Missions (ABCFM)) வழியாக அமெரிக்க இலங்கை மிஷன் உருவாக்கப்பட்டது. 1812-ல் முதல் மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கடுமையான பயணங்களுக்குப் பின் இந்தியா (கொல்கத்தா) வந்து சேர்ந்தனர் (ஜூன் 17, 1812). அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் பிற மத போதகர்களுக்கு அனுமதி வழங்காததால் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் பம்பாய் (மும்பை) மிஷனரிகளின் அழைப்பைப்பெற்று, சாமுவேல் நெவெல் எனும் மிஷனரி பம்பாய்க்குப் பயணித்தார். தற்செயலாக அவரது கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதன் வழியாக அங்கிருந்த ஆட்சியாளர்களுடனும் மதப்பணியாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் நெவல். ஆங்கிலேய ஆளுனர் அமெரிக்க மிஷனை இலங்கையில் துவங்கும்படி நெவலைக் கேட்டுக்கொண்டார். அமெரிக்கப் போர் முடிவடைந்ததும் ஐந்து புதிய மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தனர். 1816-ல் அமெரிக்க இலங்கை மிஷன் தொடங்கப்பட்டது. | ||
== கல்விப்பணி == | == கல்விப்பணி == | ||
இலங்கை வந்து சில காலங்களிலேயே கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க மிஷனரிகள் உள்ளூர் மக்களுக்குக் கல்வி வழங்கத் தொடங்கினர். [[வட்டுக்கோட்டை குருமடம்|வட்டுக்கோட்டை குருமடமே]] அவர்களின் முதன்மையான நிறுவனமாகும். [[டேனியல் பூர்|ரெவ். டாக்டர் டேனியேல் பூர்]] இக்காலகட்டத்தின் முன்னோடி. இக்காலகட்டத்தில் இங்கிருந்து தேர்ச்சிபெற்று பின்னர் 1857- ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] , [[கரோல் விசுவநாதபிள்ளை]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வட்டுக்கோட்டை குருமடம் ஐரோப்பிய கல்லூரிக்கு இணையானதாகக் கருதப்பட்டது. | இலங்கை வந்து சில காலங்களிலேயே கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க மிஷனரிகள் உள்ளூர் மக்களுக்குக் கல்வி வழங்கத் தொடங்கினர். [[வட்டுக்கோட்டை குருமடம்|வட்டுக்கோட்டை குருமடமே]] அவர்களின் முதன்மையான நிறுவனமாகும். [[டேனியல் பூர்|ரெவ். டாக்டர் டேனியேல் பூர்]] இக்காலகட்டத்தின் முன்னோடி. இக்காலகட்டத்தில் இங்கிருந்து தேர்ச்சிபெற்று பின்னர் 1857-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற [[சி.வை. தாமோதரம் பிள்ளை]] , [[கரோல் விசுவநாதபிள்ளை]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வட்டுக்கோட்டை குருமடம் ஐரோப்பிய கல்லூரிக்கு இணையானதாகக் கருதப்பட்டது. | ||
மிஷன் துவங்கி நாற்பது ஆண்டுகளுக்குள் 1848-ல் கிட்டத்தட்ட 150 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், அவற்றில் பயின்ற மாணவர்களுமாக மொத்தம் 30,000 மாணவர்கள் பயன்பெற்றனர். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழிலும் கல்வி வழங்கப்பட்டது. | மிஷன் துவங்கி நாற்பது ஆண்டுகளுக்குள் 1848-ல் கிட்டத்தட்ட 150 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், அவற்றில் பயின்ற மாணவர்களுமாக மொத்தம் 30,000 மாணவர்கள் பயன்பெற்றனர். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழிலும் கல்வி வழங்கப்பட்டது. | ||
Line 72: | Line 72: | ||
வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து தமிழ் மொழியில் முன்னோடியான பல வகை புத்தகங்களும் வெளிவந்தன. உள்ளூர் இலக்கியம், தர்க்கம், அல்ஜிபிரா, வானியல் மற்றும் பொது அறிவியல் புத்தகங்கள் ஆரம்பத்தில் வெளி வந்தன. 1820-ல் ஒரு அச்சகத்தைத் தொடங்கி இலங்கையின் இரண்டாவது செய்தித்தாளான 'மார்ணிங் ஸ்டாரை' (Morning Star) வெளியிட்டனர் அதன் தமிழ்ப்பதிப்பு [[உதயதாரகை|உதயதார]]கையும் வெளியிடப்பட்டது. 1862-ல் ரெவ். மிரன் வின்ஸ்லோ முழுமையான ஆங்கில - தமிழ் அகராதியை பதிப்பித்தார். தமிழில் மருத்துவ , பொது சுகாதார , மத போதனை நூல்களை இவர்கள் பதிப்பித்தனர். தமிழ் உரைநடை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் கல்வி பொதுமக்களுக்கு எளிதானதாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையினராய் இருந்தாலும் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிற அறிவுத்துறைகளிலும் தேர்ச்சி பெற்றதனால் 1956-ல் பாதிப்பங்கு அரசுப் பணிகளில் தமிழர்கள் பங்குபெற்றிருந்தனர் என்பது மிஷனரிகளின் பங்களிப்புக்குச் சான்றாகும். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் அமெரிக்க மிஷன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றின. | வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து தமிழ் மொழியில் முன்னோடியான பல வகை புத்தகங்களும் வெளிவந்தன. உள்ளூர் இலக்கியம், தர்க்கம், அல்ஜிபிரா, வானியல் மற்றும் பொது அறிவியல் புத்தகங்கள் ஆரம்பத்தில் வெளி வந்தன. 1820-ல் ஒரு அச்சகத்தைத் தொடங்கி இலங்கையின் இரண்டாவது செய்தித்தாளான 'மார்ணிங் ஸ்டாரை' (Morning Star) வெளியிட்டனர் அதன் தமிழ்ப்பதிப்பு [[உதயதாரகை|உதயதார]]கையும் வெளியிடப்பட்டது. 1862-ல் ரெவ். மிரன் வின்ஸ்லோ முழுமையான ஆங்கில - தமிழ் அகராதியை பதிப்பித்தார். தமிழில் மருத்துவ , பொது சுகாதார , மத போதனை நூல்களை இவர்கள் பதிப்பித்தனர். தமிழ் உரைநடை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் கல்வி பொதுமக்களுக்கு எளிதானதாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையினராய் இருந்தாலும் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிற அறிவுத்துறைகளிலும் தேர்ச்சி பெற்றதனால் 1956-ல் பாதிப்பங்கு அரசுப் பணிகளில் தமிழர்கள் பங்குபெற்றிருந்தனர் என்பது மிஷனரிகளின் பங்களிப்புக்குச் சான்றாகும். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் அமெரிக்க மிஷன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றின. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://noolaham.net/project/773/77218/77218.pdf அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை] | * [https://noolaham.net/project/773/77218/77218.pdf அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை] | ||
* [https://web.archive.org/web/20140128104341/http://www.ceylontamils.com/acm/ACMHistoryArticle.pdf அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு] | * [https://web.archive.org/web/20140128104341/http://www.ceylontamils.com/acm/ACMHistoryArticle.pdf அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு] | ||
* [https://youtu.be/0uPZUr15rV8 A Brief History of the American Ceylon Mission in Jaffna, youtube.com] | * [https://youtu.be/0uPZUr15rV8 A Brief History of the American Ceylon Mission in Jaffna, youtube.com] | ||
*[https://archive.org/details/ceylonmission18100howl அமெரிக்க மிஷன் கல்விகள் இணையநூலகம்] | * [https://archive.org/details/ceylonmission18100howl அமெரிக்க மிஷன் கல்விகள் இணையநூலகம்] | ||
* [https://web.archive.org/web/20120215084418/http://www.ceylontamils.com/discuss/viewtopic.php?t=158 அமெரிக்க மிஷன் வரலாறு, இணையநூலகம்] | |||
*[https://web.archive.org/web/20120215084418/http://www.ceylontamils.com/discuss/viewtopic.php?t=158 அமெரிக்க மிஷன் வரலாறு, இணையநூலகம்] | |||
* [http://www.ceylontamils.com/photos/showThumbs.php?albumId=2 அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்] | * [http://www.ceylontamils.com/photos/showThumbs.php?albumId=2 அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்] | ||
{{Standardised}} | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:59, 3 May 2022
அமெரிக்க இலங்கை மிஷன் (1813-1916) அமெரிக்க சீர்திருத்தக் கிறிஸ்துவர்களால் இலங்கையில் நடத்தப்பட்ட மதபோதக அமைப்பு. யாழ்ப்பாணத்தில் நவீன அடிப்படைக் கல்வியும், இரண்டாம் நிலைக் கல்வியும் வழங்கிய முன்னோடிகள். ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாமல் தமிழிலும் கல்வி கற்பித்தனர். தமிழில் பல புத்தகங்களை மொழிபெயர்த்தும், புதிதாய் இயற்றியும் வெளியிட்டுள்ளனர். பொதுக்கல்விச் சாலைகள், மருத்துவக் கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் குருமடங்களை நிறுவி மக்கள் பணி செய்தனர்.
அவர்கள் நிறுவிய வட்டுக்கோட்டை குருமடம் ஒரு பல்கலையைப் போன்ற அமைப்பு என்பதால் ஆசியாவிலேயே முன்னோடி நிறுவனம் என்று கருதப்படுகிறது.
தொடக்கம்
யாழ்ப்பாணத்தில் 1540-களில் போர்ச்சுகீசியர்களின் ஆதரவுடன் கத்தோலிக்க மதபோதகர்கள் மதம் பரப்ப ஆரம்பித்தனர். 150 வருடங்களுக்குப் பின் 1658-ல் டச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்கள்) துறைமுகத்தைக் கைப்பற்றினர். இதன்மூலம் டச்சு சீர்திருத்த சபை அங்கு பரவியது. 1796-ல் ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றினர். டச்சுக்காரர்களைப்போல் அல்லாமல் ஆங்கிலேயர் பிற கிறிஸ்தவ அமைப்புகளை ஆதரவுடன் நடத்தினர். இதனால் யாழ்ப்பாணத்தில் பல கிறித்துவ மதபரப்பு மையங்கள் (மிஷன்) உருவாகின. இவற்றில் அமெரிக்க இலங்கை மிஷன் முக்கியமானதாகும்.
1810-ல் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்தினரால் உருவாக்கப்பட்ட மிஷனரி அமைப்பு (American Board of Commissioners for Foreign Missions (ABCFM)) வழியாக அமெரிக்க இலங்கை மிஷன் உருவாக்கப்பட்டது. 1812-ல் முதல் மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கடுமையான பயணங்களுக்குப் பின் இந்தியா (கொல்கத்தா) வந்து சேர்ந்தனர் (ஜூன் 17, 1812). அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர் பிற மத போதகர்களுக்கு அனுமதி வழங்காததால் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் பம்பாய் (மும்பை) மிஷனரிகளின் அழைப்பைப்பெற்று, சாமுவேல் நெவெல் எனும் மிஷனரி பம்பாய்க்குப் பயணித்தார். தற்செயலாக அவரது கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது. அதன் வழியாக அங்கிருந்த ஆட்சியாளர்களுடனும் மதப்பணியாளர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார் நெவல். ஆங்கிலேய ஆளுனர் அமெரிக்க மிஷனை இலங்கையில் துவங்கும்படி நெவலைக் கேட்டுக்கொண்டார். அமெரிக்கப் போர் முடிவடைந்ததும் ஐந்து புதிய மதபோதகர்கள் அமெரிக்காவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தனர். 1816-ல் அமெரிக்க இலங்கை மிஷன் தொடங்கப்பட்டது.
கல்விப்பணி
இலங்கை வந்து சில காலங்களிலேயே கல்வி வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அமெரிக்க மிஷனரிகள் உள்ளூர் மக்களுக்குக் கல்வி வழங்கத் தொடங்கினர். வட்டுக்கோட்டை குருமடமே அவர்களின் முதன்மையான நிறுவனமாகும். ரெவ். டாக்டர் டேனியேல் பூர் இக்காலகட்டத்தின் முன்னோடி. இக்காலகட்டத்தில் இங்கிருந்து தேர்ச்சிபெற்று பின்னர் 1857-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற சி.வை. தாமோதரம் பிள்ளை , கரோல் விசுவநாதபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வட்டுக்கோட்டை குருமடம் ஐரோப்பிய கல்லூரிக்கு இணையானதாகக் கருதப்பட்டது.
மிஷன் துவங்கி நாற்பது ஆண்டுகளுக்குள் 1848-ல் கிட்டத்தட்ட 150 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், அவற்றில் பயின்ற மாணவர்களுமாக மொத்தம் 30,000 மாணவர்கள் பயன்பெற்றனர். ஆங்கிலம் மட்டுமன்றி தமிழிலும் கல்வி வழங்கப்பட்டது.
பெண்கல்வி
அக்கால இலங்கையில் பெண்கள் கல்வி கற்பது குறித்து மிகப் பழமையான கருத்துக்களே இருந்தன. பெண்கல்வி தவறென்றும் கல்வி கற்றால் பெண்களுக்குத் திருமணம் நடைபெறாது என்றும் கருதப்பட்டது. பெண்கள் குழந்தை பெறவும் வீட்டுவேலை செய்யவும் மட்டுமே ஆனவர்கள் என்ற நிலை இருந்தது. 1816-ல் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 3 சதவீதம் பெண்களுக்கே வாசிக்கத் தெரிந்திருந்தது.
அமெரிக்க மிஷன் பெண்களுக்காக மூன்று வகைக் கல்விக்கூடங்களை உருவாக்கியது. இதில் ஒரு விடுதிப் பள்ளியும் அடக்கம். 1824-ல் ஹரியட் வின்ஸ்லொவால் உடுவில்லில் துவங்கப்பட்ட இப்பள்ளி ஆசியாவிலே பெண்களுக்கான முதல் விடுதிப்பள்ளியாகும். உள்ளூர் எதிர்ப்புகளை தவிர்க்க தொடக்கத்தில் பெண்களுக்கு திருமணத்தின்போது வரதட்சிணை வழங்குவது, ஆடைகள் வழங்குவது என சில சலுகைகளை அளித்தனர். 1850 வாக்கில் உள்ளூர் மக்கள் பெண்கல்வி குறித்த பார்வைகளை மாற்றிக்கொண்டதால் இவ்வழக்கங்கள் கைவிடப்பட்டன.
இதைப் போல முதன் முதலாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்தவர்களும் அமெரிக்க சிலோன் மிஷனைச் சார்ந்தவர்களே..
வருடம் | பள்ளிகள் | மாணவர்கள் | மாணவிகள் |
1819 | 15 | 633 | 10 |
1824 | 90 | 2864 | 613 |
1836 | 155 | 6037 | 1000 |
1868 | 60 | 1598 | 728 |
1879 | 121 | 8120 | 1400 |
1884 | 138 | 8332 | 1751 |
1900 | 133 | 10244 | 2791 |
1911 | 118 | 9893 | 3544 |
மருத்துவப் பணி
அமெரிக்க மிஷன் மருத்துவசேவையை தொடங்குவதென 1819 -ல் தீர்மானித்தது. அதன்படி 182-0 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் மருத்துவர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. ஆரம்ப காலத்தில் மருத்துவர்கள் மிஷனில் இல்லை என்றாலும் சிலர் மருத்துவப் பயிற்சி பெற்றவர்களாக இருந்ததால் மருத்துவ சேவை சிறிதளவில் நடந்து வந்தது. ஐரோப்பியக் கல்வியைப் போலவே மருத்துவத்திற்கும் உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பிருந்தது. 1819-ல் இலங்கை வந்து சேர்ந்த மரு. ஸ்கடர் என்பவரே முதல் முழுத்தகுதி பெற்ற மருத்துவராவார். அவரின் முயற்சியில் ஒவ்வொரு மிஷனுக்கும் ஒரு மருத்துவரை பயிற்றுவிக்கத் தொடங்கி மொத்தம் 10 மாணவர்களுக்கு பயிற்சியளித்தார் இவர்களில் இருவரே படிப்பை முடித்துத் தேர்ந்தனர். ஸ்கடரைத் தொடர்ந்து மருத்துவர் நேதன் வாட் பணியாற்றினார். வாட்டின் சேவைக் காலம் முடிவடைந்தபோது வந்து பணியை ஏற்றவர் மருத்துவர் சாமுவேல் கிரீன். 1848-ல் மரு. சாமுவேல் கிரீன் தனது 25 வயதில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவரின் பெரும் முயற்சியால் பல புதிய மருத்துவர்கள் உருவாகினர். இவரும் இவரது மாணவர்களும் சேர்ந்து பல மருத்துவ புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தனர்.காலரா மற்றும் மஞ்சள் காய்ச்சலுக்கு இவர்கள் அளித்த மருந்துக்கள் பல உயிர்களையும் காத்தன. மரு. கிரீன் 600 பேரை காலராவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
தமிழ்ப்பணி
வட்டுக்கோட்டை குருமடத்திலிருந்து தமிழ் மொழியில் முன்னோடியான பல வகை புத்தகங்களும் வெளிவந்தன. உள்ளூர் இலக்கியம், தர்க்கம், அல்ஜிபிரா, வானியல் மற்றும் பொது அறிவியல் புத்தகங்கள் ஆரம்பத்தில் வெளி வந்தன. 1820-ல் ஒரு அச்சகத்தைத் தொடங்கி இலங்கையின் இரண்டாவது செய்தித்தாளான 'மார்ணிங் ஸ்டாரை' (Morning Star) வெளியிட்டனர் அதன் தமிழ்ப்பதிப்பு உதயதாரகையும் வெளியிடப்பட்டது. 1862-ல் ரெவ். மிரன் வின்ஸ்லோ முழுமையான ஆங்கில - தமிழ் அகராதியை பதிப்பித்தார். தமிழில் மருத்துவ , பொது சுகாதார , மத போதனை நூல்களை இவர்கள் பதிப்பித்தனர். தமிழ் உரைநடை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இதனால் கல்வி பொதுமக்களுக்கு எளிதானதாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையினராய் இருந்தாலும் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிற அறிவுத்துறைகளிலும் தேர்ச்சி பெற்றதனால் 1956-ல் பாதிப்பங்கு அரசுப் பணிகளில் தமிழர்கள் பங்குபெற்றிருந்தனர் என்பது மிஷனரிகளின் பங்களிப்புக்குச் சான்றாகும். யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் அமெரிக்க மிஷன் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு சமூக வளர்ச்சிக்குப் பங்காற்றின.
உசாத்துணை
- அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் - சி. டி. வேலுப்பிள்ளை
- அமெரிக்க இலங்கை மிஷன் - சுருக்கப்பட்ட வரலாறு
- A Brief History of the American Ceylon Mission in Jaffna, youtube.com
- அமெரிக்க மிஷன் கல்விகள் இணையநூலகம்
- அமெரிக்க மிஷன் வரலாறு, இணையநூலகம்
- அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணம் படங்கள்
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.