திப்புத்தோளார்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 26: | Line 26: | ||
* [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l12202a9-122504 திப்புத்தோளார் - tamilvu] | * [https://www.tamilvu.org/ta/library-l1220-html-l12202a9-122504 திப்புத்தோளார் - tamilvu] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 18:47, 4 September 2024
திப்புத்தோளார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
திப்புத்தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். திப்புத்தோளர் என்றால் வலிமை மிக்க தோளை உடையவர் என்பது பொருள்.
இலக்கிய வாழ்க்கை
திப்புத்தோளார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையின் முதல் பாடலாக உள்ளது. இது குறிஞ்சித் திணைப்பாடல். தோழி கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது. 'தோழி கையுறை மறுத்தது' என்ற துறையைச் சேர்ந்தது
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- இப்பாடலில் முதற்பொருளாகக் குன்றும், கருப்பொருளாக முருகன், யானை, காந்தள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது.
- குறிஞ்சி: வீரக்கழல் அணிந்த சேஎய் (முருகன்) போர்க்களத்தில் ரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், ரத்தம் தோய்ந்த சிவந்த தந்தங்களையும் உடைய யானையையும் உடையவன். முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.
- தலைவன் அளிக்கும் மலர்களை வாங்கிக்கொள்ளத் தோழி மறுக்கிறாள்.
பாடல் நடை
குறுந்தொகை: 1
திணை: குறிஞ்சி; துறை: தோழி கையுறை மறுத்தது
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
உசாத்துணை
✅Finalised Page