புருஷன்: Difference between revisions

From Tamil Wiki
Line 54: Line 54:


== வேதாந்தம் ==
== வேதாந்தம் ==
புருஷன் என்னும் சொல்லுக்கு வேதங்கள் அளிக்கும் இரண்டு வகை பார்வைகளில் புருஷசூக்தத்தில் உள்ள பார்வையை [[பூர்வ மீமாம்சை]] எனப்படும் வைதிகமரபு முதன்மையாகக் கொண்டது. பார்ப்பவனும் நுகர்பவனுமாக இருநிலையில் இயற்கையின் உள்ளுறையாக இருக்கும் புருஷன் என்னும் பார்வையை [[உத்தர மீமாம்சை]] என்னும் [[வேதாந்தம்]] மற்றும் வேதாந்தத்தின் வளர்ச்சிவடிவமான [[அத்வைதம்]] ஆகியவை அடிப்படையாகக் கொண்டன.   
புருஷன் என்னும் சொல்லுக்கு வேதங்கள் அளிக்கும் இரண்டு வகை பார்வைகளில் புருஷசூக்தத்தில் உள்ள பார்வையை [[பூர்வ மீமாம்சை]] எனப்படும் வைதிகமரபு முதன்மையாகக் கொண்டது. வைதிக மரபில் [[புருஷமேதம்]] என்னும் வேள்விச்சடங்கு புருஷனின் உடலாக ஓர் மானுட உடலை உருவகித்து அதை வேள்வித்தீயில் பலிகொடுப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது 
 
பார்ப்பவனும் நுகர்பவனுமாக இருநிலையில் இயற்கையின் உள்ளுறையாக இருக்கும் புருஷன் என்னும் பார்வையை [[உத்தர மீமாம்சை]] என்னும் [[வேதாந்தம்]] மற்றும் வேதாந்தத்தின் வளர்ச்சிவடிவமான [[அத்வைதம்]] ஆகியவை அடிப்படையாகக் கொண்டன.   


வேதாந்தத்தின் பார்வை இரண்டு பிரிவாகப் பிரிக்கத்தக்கது. தொடக்ககால வேதாந்தம் புருஷன் என்னும் சொல்லை பிரகிருதியின் உள்ளுறை என்று வகுத்துக்கொண்டது. பிரகிருதியை ஆள்பவன், பிரகிருதியை ஊர்தியாகக் கொண்டவன், பிரகிருதியின் அதிபன். பிரபஞ்சம் முழுக்க ஊடுருவியிருப்பவன். பிரபஞ்சத்தின் சாட்சியாகவும் (திருஷ்டா) பிரபஞ்சத்தை நுகர்பவனாகவும் (ஃபோக்தா) ஒரே சமயம் திகழ்பவன். பிரபஞ்சத்தில் ஈஸ்வரனாகவும், பிரபஞ்சம் கடந்து பிரம்மம் ஆகவும், உயிர்களில் ஆத்மாவாகவும் திகழ்பவன். அணுத் துளியிலும், அண்டமெனும் ஒட்டுமொத்தத்திலும் உள்ள சாராம்சம்.   
வேதாந்தத்தின் பார்வை இரண்டு பிரிவாகப் பிரிக்கத்தக்கது. தொடக்ககால வேதாந்தம் புருஷன் என்னும் சொல்லை பிரகிருதியின் உள்ளுறை என்று வகுத்துக்கொண்டது. பிரகிருதியை ஆள்பவன், பிரகிருதியை ஊர்தியாகக் கொண்டவன், பிரகிருதியின் அதிபன். பிரபஞ்சம் முழுக்க ஊடுருவியிருப்பவன். பிரபஞ்சத்தின் சாட்சியாகவும் (திருஷ்டா) பிரபஞ்சத்தை நுகர்பவனாகவும் (ஃபோக்தா) ஒரே சமயம் திகழ்பவன். பிரபஞ்சத்தில் ஈஸ்வரனாகவும், பிரபஞ்சம் கடந்து பிரம்மம் ஆகவும், உயிர்களில் ஆத்மாவாகவும் திகழ்பவன். அணுத் துளியிலும், அண்டமெனும் ஒட்டுமொத்தத்திலும் உள்ள சாராம்சம்.   

Revision as of 18:25, 12 June 2024

கற்கால பாறைக்குடைவு ஓவியம், ரத்னகிரி, மானுட உருவம்
பாகுபலி சிலை
புத்தர் பேரண்டத் தோற்றம் போ -லின் மடாலயம்
விஷ்ணு (புருஷோத்தமன்)

புருஷன் (புருடன்) இயற்கையின் பிரக்ஞைநிலை. இயற்கையின் உள்ளுறைந்துள்ள தன்னிலை. பிரகிருதியின் மறுநிலையாக அமைபவன். பிரகிருதி என்னும் இயற்கையை அறிபவன். அதன் வழியாக இயற்கையில் குணங்களை உருவாக்குபவன். இயற்கையை இயக்கம் கொள்ளச் செய்பவன். சாங்கியதரிசனம் புருஷன் என்னும் கருத்துருவை உருவாக்கியது. வேதாந்தம் உட்பட பிற தரிசனங்கள் அதை விரிவாக்கம் செய்துகொண்டன.

சொற்பொருள்

தொன்மையான சம்ஸ்கிருத அகராதியான யாஸ்கரின் நிருக்தம் புருஷ என்னும் சொல்லை புரு என்னும் வேர் கொண்டதாக வரையறை செய்கிறது. புரு என்றால் இருப்பது. புர என்றால் இருக்கும் இடம். புருஷ என்னும் சொல்லுக்கு உறைவது, இருந்துகொண்டிருப்பது, இருப்பை உணர்வது என்று பொருள்.

தோற்றுவாய்

புருஷன் என்னும் உருவகத்தின் தோற்றுவாய் கற்காலத்தைய நீத்தோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு, உடல் வழிபாடு போன்ற தொடக்கநிலையில் இருந்தே உருவாகி வருவது. புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பாறைக்குடைவு ஓவியங்களில் மிகப்பெரிய மானுட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. படுத்திருப்பதுபோலவோ நிற்பதுபோலவோ. சில ஓவியங்களில் அவை வான்முகில்களையோ மலைகளையோ சுமந்துகொண்டிருப்பதுபோல் வரையப்பட்டுள்ளன. அந்த மானுட உடல்களின் உள்ளே பல்வேறு விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த உருவங்களுக்கு பலவகையான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம்., உயிர்நீத்த பெருந்தந்தைகள் அல்லது தலைவர்கள் அவ்வாறு வரையப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவே நெடுங்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. அவர்களை ஒரு சமூகமாக, ஒரு தொகையுருவமாக பார்ப்பதையே அந்த ஓவியங்களுக்குள் உள்ள உருவங்கள் காட்டுகின்றன. விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் வடிவமாகவே அவர்கள் உருவகிக்கப்பட்டனர். இரண்டாவது விளக்கம், மனிதர்களை தெய்வசக்திகளுக்குப் பலிகொடுக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்தது என பழங்குடிச் சடங்குகள் காட்டுகின்றன. அப்படிப் பலிகொடுக்கப்பட்டவர்கள் பல்வேறு பலிவிலங்குகளுக்கு நிகரானவர்கள். அவர்களின் உருவங்கள் அப்படிச் செதுக்கப்பட்டிருக்கலாம்.

உலகமெங்கும், மானுடனை, மானுட உடலை தெய்வ வடிவமாக வழிபடும் வழக்கம் உள்ளது. மானுட உடலை இயற்கையாகவும், பூமியாகவும் உருவகம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய நிலத்தில் இருந்த அந்த உருவகங்களே பின்னர் புருஷன் என்னும் கருத்துருவமாக ஆயின. இந்திய மதங்களில் விஸ்வரூபம் என்னும் பேரண்டத்தோற்றம் தெய்வங்களின் மிகப்பெரிய மானுட உருவமாக உருவகிக்கப்படுகிறது. புருஷன் என்னும் கருத்துருவத்தின் வளர்ச்சிநிலை இது.

வேதம்

புருஷன் என்னும் உருவகம் முதன்முதலாக ரிக்வேதத்தில் கிடைக்கிறது. ரிக்வேதத்தில் சாதாரணமாக மனிதன் என்னும் பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித உடல் என்னும் பொருளிலும், மனித உடலுக்குள் உறையும் தன்னுணர்வு என்னும் பொருளிலும் பின்னர் பயன்படுத்தப்பட்டது. மெல்ல மெல்ல அவ்வுருவகம் அனைத்து மனிதர்களையும் இணைத்துக் கொண்ட ஒற்றை மனித உருவமாக வளர்வதை வேதங்கள் காட்டுகின்றன. கணம் அல்லது வேதகாலச் சமூகத்தின் அடையாளமாக ஒற்றைமனிதனை உருவகித்து அவனை புருஷன் என்றனர். பின்னர் பிரபஞ்சமனிதன் ஒருவனின் உருவகம் உருவாகி வந்தது. ரிக்வேதத்தின் இறுதியில், புருஷ சூக்தம் என்னும் பாடலில் இந்த பிரபஞ்சமானுடன் என்னும் புருஷ உருவகம் முழுமையடைந்தது.

வேதங்களிலும், வேதவிளக்கமாக அமையும் பிராமணங்கள் மற்றும் ஆரண்யகங்களிலும் புருஷன் என்னும் கருத்துருவம் பொதுவாகவும் தத்துவார்த்தமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

பொதுப்பொருள்

புருஷன் என்னும் சொல் ரிக்வேதத்திலும் பிற்காலத்திலும் ‘மனிதன்’ என்பதற்கான பொதுவான சொல். அதர்வ வேதத்தின்படி புருஷன் ஐந்து பகுதிகள் கொண்டவன். ஐதரேய பிராமணத்தின் படி ஆறு பகுதிகள் கொண்டவன். வெவ்வேறு நூல்களில் வெவ்வேறு வகைகளில் இது வரையறுக்கப்படுகிறது.

புருஷா என்பது ஒரு மனிதனின் ஆயுட்காலம், 'தலைமுறை' ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.'மாணவர்' என்னும் பொருளிலும் ஒரு வினைச்சொல்லில் அதை ஆற்றும் நபர் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தத்துவப்பொருள்

புருஷசூக்தம்

வேதங்களில் உள்ள புருஷசூக்தம் (ரிக்வேதம் 10 - 90) பிரபஞ்ச மனிதன் ஒருவனை உருவகிப்பது. படைப்புக்கு முந்தைய, படைப்புக்குக் காரணமான, படைக்கப்பட்ட பிரபஞ்சமாகவும் நீடிக்கும் ஒரு மானுடப்பேருவவம் இப்பாடலில் வருகிறது. புருஷனை பலி கொடுப்பதைப் பற்றியும் இப்பாடல் சொல்கிறது. இப்பாடலில் அந்தப் பலி கவியுருவகமாக உள்ளதென்றாலும் உண்மையான மனிதபலி இருந்திருப்பதை, அந்த மனிதன் புனிதமானவனாகவும், தெய்வமாகவும் கருதப்பட்டான் என்பதை இந்த உருவகம் காட்டுகிறது. தொன்மையான பல கவித்துவ உருவகங்கள் பின்னிப்பிணைந்த இப்பாடல் பல்வேறு குறியீட்டுப்பொருட்களும் மறைஞான உள்ளடக்கமும் கொண்டதாகக் கருதப்படுகிறது ( பார்க்க புருஷ சூக்தம்)

ஆத்மசூக்தம்

வேதங்கள் கூறும் தொன்மையான ஆதிபுருஷனாக அல்லது கடவுளுருவாக தன்னை உருவகித்துக்கொள்ளும் வேதமந்திரம் இது. இதை பின்னர் வைகானஸ மரபு இறைச்சக்தியை ஒரு பூசகர் தன்னுள் வரவழைத்துக்கொள்ளும் சடங்குக்குப் பயன்படுத்திக் கொண்டது ( ஆத்ம சூக்தம்)

இருபறவைகள்

இணைப்பறவைகள் ஒரு மரக்கிளையில் அமர்ந்துள்ளன, ஒன்று பழம் உண்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது என்னும் உவமை ரிக்வேதத்தில் வருகிறது. இது புருஷனின் இயல்பைச் சொல்லும் உருவகமாக பின்னர் தைத்ரிய உபநிடதம் போன்றவற்றில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புருஷன் இயற்கையின் நுகர்வோன் (ஃபோக்தா) ஆகவும் வெறும் சாட்சியாகவும் ஒரே சமயம் திகழ்கிறான். (ரிக்வேதம் 1.164.20 )

சாங்கியம்

இந்து மெய்யியல் மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியம் அதன் முதன்மைக் கருத்துருவாக பிரகிருதி என்பதை முன்வைக்கிறது. பிரகிருதியிலுள்ள குணங்களை அறியும் தன்னிலையை புருஷ நிலை என்கிறது. புருஷனின் அறிதலால் அவியக்தம் (வெளிப்பாடற்ற) நிலையில் இருக்கும் பிரதானம் (முதன்மை) என்னும் மூலப்பிரகிருதியானது சத்வம், தமஸ், ரஜஸ் என்னும் மூன்று குணங்களை அடைந்து வியக்தம் (வெளிப்பாடுள்ள) என்னும் பிரகிருதியாக ஆகிறது. அதுவே பிரபஞ்சமாகும். பிரபஞ்சம் என்பது பிரகிருதி தன்னுடைய மூன்றுகுணங்களின் சமநிலை இழப்பால் செயல்வடிவமாக ஆகி, முடிவிலாத இணைவு மற்றும் பிரிவுகளாக விரிந்து நிகழ்ந்துகொண்டிருப்பதாகும்.

புருஷனின் பல இருப்புகள்

சாங்கிய தத்துவத்தில் உயிர் அல்லது உயிர்களின் உள்ளம் என்பதற்கும் புருஷன் என்பதற்கும் எப்போதுமே குழப்பமான விளக்கமே காணப்படுகிறது என்று சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் கருதுகிறார் (இந்திய தத்துவ ஞானம்) புருஷன் பற்றிய சாங்கியத்தின் பார்வை இருநிலை கொண்டது. ஒரேசமயம் புருஷன் வெறும்சாட்சியாக, தொடக்கமும் முடிவும் அற்ற ஒட்டுமொத்தப் பிரக்ஞையாக, பிரகிருதியின் குணங்களால் உணர்வுநிலைகளை அடையாத ஒன்றாக நிலைகொள்கிறது; கூடவே புருஷன் உயிர்களாகவும் உள்ளங்களாகவும் முடிவிலாது பெருகி பிரபஞ்சமெங்கும் நிறைந்துமுள்ளது.

சாங்கிய தரிசனம் புத்தி, அகங்காரம் மற்றும் அகங்காரத்தின் விளைவான புலனறிதல்கள் எவையுமற்ற புருஷன் என்னும் உருவகத்தை ஏற்கிறது. அந்த உருவகம் வேதாந்திகள் முன்வைக்கும் ஆத்மா என்னும் உருவகத்திற்கு மிக அணுக்கமானதாக உள்ளது. அந்த அடிப்படையில்தான் சாங்கியம் பின்னாளில் அத்வைதத்திற்கு அணுக்கமான ஆன்மிக தரிசனமாக ஆகியது. சாங்கியத்தின் துணைத்தரிசனமான யோகம் இந்து மதப்பிரிவுகளின் ஆன்மிகப் பயிற்சியாகவும் வளர்ச்சி அடைந்தது

புருஷனின் வீடுபேறு

பிரகிருதி தன்னுணர்வு, நோக்கம், செயலூக்கம் ஆகியவை அற்றது. அவற்றை பிரகிருதிக்கு அளிப்பவன் புருஷனே. புருஷனால் பிரகிருதி செயலூக்கம் பெற்று பெருகிப்பிரிகையில் புருஷனும் அவ்வண்ணமே பெருகிப்பிரிந்து முடிவிலாத தனிப்பிரக்ஞைகளாக ஆகி அப்பிரகிருதியை தனித்தனி துளிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

ஆத்யாத்மிகம் (மனிதனால் விளைவது), ஆதிபௌதிகம் (இயற்கையால் விளைவது), ஆதிதெய்வீகம் (அடிப்படை விதிகளால் விளைவது) என மூன்று துயர்களுக்கு மானுடன் ஆளாகிறான் என்று சொல்லும் சாங்கியம் அத்துயர்களைப் புரிந்துகொள்வதே அதைக் கடக்கும் வழி என அறிவிக்கிறது. அத்துயர்களுக்கான காரணம் பிரகிருதி புருஷன் ஆகியவற்றுக்கிடையேயான உறவை புரிந்துகொள்ளாமலிருக்கும் அவித்யை (அறியாமை)யாகும். அதை சாங்கிய ஞானம் நீக்கும் என்று கூறுகிறது. (சாங்கிய காரிகை 44)

புருஷன் இயற்கையை உருவாக்கவில்லை, அதை மாற்றியமைப்பதில்லை, அவன் இருப்பை இயற்கை அறியாது, அவன் வெறும் சாட்சி மட்டுமே, அவனுடைய அறிதலால் இயற்கையில் முக்குணங்கள் உருவாகி இயற்கை அவனுக்காக குணங்கள் கொண்டதாக தோற்றம்கொள்கிறது. புருஷனால் மாற்றம் கொள்ளும் பிரகிருதி மஹத் என்னும் அறிதலின் நுண்ணலகை உருவாக்குகிறது. அது தன்னிலையின் தொடக்கமாகிய அகங்காரத்தை உருவாக்குகிறது. அகங்காரம் ஐந்து தன்மாத்திரைகள்,ஐந்து பருப்பொருட்கள், பத்து புலன்கள், மனம், புத்தி என பிரிந்து பிரபஞ்சத்தைச் சமைக்கிறது. இவை இருபத்துநான்கு தத்துவங்கள் என சாங்கியத்தால் சொல்லப்படுகின்றன.

புருஷன் தன்னுடைய மனம், புத்தி மற்றும் பத்து புலன்களால் அறியப்படும் பிரபஞ்சத்தை பிரகிருதி என்றும், அந்த பிரபஞ்சத்துடன் கொண்ட புலனறிவால் அறியப்படும் தன்னை புருஷன் என்றும் பிழையாக எண்ணிக்கொள்கிறான். அந்தப் பிழை மூலப்பிழை. அதைக் களைந்து புருஷனும் பிரகிருதியும் தங்கள் உண்மைப்பெருநிலையை உணர்வதே சாங்கிய ஞானமாகும்.

வேதாந்தம்

புருஷன் என்னும் சொல்லுக்கு வேதங்கள் அளிக்கும் இரண்டு வகை பார்வைகளில் புருஷசூக்தத்தில் உள்ள பார்வையை பூர்வ மீமாம்சை எனப்படும் வைதிகமரபு முதன்மையாகக் கொண்டது. வைதிக மரபில் புருஷமேதம் என்னும் வேள்விச்சடங்கு புருஷனின் உடலாக ஓர் மானுட உடலை உருவகித்து அதை வேள்வித்தீயில் பலிகொடுப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது

பார்ப்பவனும் நுகர்பவனுமாக இருநிலையில் இயற்கையின் உள்ளுறையாக இருக்கும் புருஷன் என்னும் பார்வையை உத்தர மீமாம்சை என்னும் வேதாந்தம் மற்றும் வேதாந்தத்தின் வளர்ச்சிவடிவமான அத்வைதம் ஆகியவை அடிப்படையாகக் கொண்டன.

வேதாந்தத்தின் பார்வை இரண்டு பிரிவாகப் பிரிக்கத்தக்கது. தொடக்ககால வேதாந்தம் புருஷன் என்னும் சொல்லை பிரகிருதியின் உள்ளுறை என்று வகுத்துக்கொண்டது. பிரகிருதியை ஆள்பவன், பிரகிருதியை ஊர்தியாகக் கொண்டவன், பிரகிருதியின் அதிபன். பிரபஞ்சம் முழுக்க ஊடுருவியிருப்பவன். பிரபஞ்சத்தின் சாட்சியாகவும் (திருஷ்டா) பிரபஞ்சத்தை நுகர்பவனாகவும் (ஃபோக்தா) ஒரே சமயம் திகழ்பவன். பிரபஞ்சத்தில் ஈஸ்வரனாகவும், பிரபஞ்சம் கடந்து பிரம்மம் ஆகவும், உயிர்களில் ஆத்மாவாகவும் திகழ்பவன். அணுத் துளியிலும், அண்டமெனும் ஒட்டுமொத்தத்திலும் உள்ள சாராம்சம்.

உபநிடதங்கள்

‘இந்த புருஷன் உடலில்லாமல், உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் திகழ்பவன். பிறக்காதவன், உயிர்மூச்சில்லாதவன், உள்ளமில்லாதவன், எல்லா இருப்புகளையும் விட உயர்ந்தவன், அவனிலிருந்து உயிர்களனைத்தும் பிறக்கின்றன. மூச்சும் உள்ளமும் உருவாகின்றன. இங்கிருப்பவை அனைத்துக்கும் அவனே சாரம்’ என்று முண்டக உபநிடதம் குறிப்பிடுகிறது.

அங்கிரஸ் முனிவர் ஆத்ம உபநிடதத்தில் புருஷன் உடலில் வாழ்பவன் என்றும் அவனுக்கு மூன்று வகை இருப்புகள் உள்ளன என்றும் வரையறைசெய்கிறார். பிறந்து இறந்து புலன்கள் வழியாக செயல்படும் வெளிப்புருஷன் (பாஹ்யாத்ம) உயிர் என தோற்றமளித்து உள்நின்று அனுபவங்களை வெறுமே பார்த்துக்கொண்டிருக்கும் அகப்புருஷன் ( அந்தராத்ம) இவ்விரண்டும் எந்த ஒற்றையிருப்பின் பகுதியோ அதுவான முழுப்ப்புருஷன் (பரமாத்ம)

அத்வைத வேதாந்தம் பிரபஞ்சம் என்பது மாயையே என்னும் கொள்கையை வலியுறுத்தியது. ஆகவே பிரகிருதியும் மாயையே. பிரகிருதியின் பொருள்வயத்தன்மை, அதன் ஐந்து வகைப் பொருண்மை எல்லாமே மாயை. ஜீவாத்மா தன் அகங்காரம் வழியாக உருவாக்கிக்கொள்ளும் மாயத்தோற்றம் அது. பிரகிருதி என்பது புருஷன் முன் உருவாகும் மாயத்தோற்றமே.

கீதை

பகவத் கீதை புருஷன் என்பதை இறையுருவமாக முன்வைக்கிறது. பரமபுருஷன் என்னும் பொருளிலேயே கீதையில் அச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’பார்த்தா, பரமபுருஷன் குறைவற்ற சரணாகதியால் அடையத்தக்கவன். இங்குள்ள உயிர்களெல்லாம் அவனில் அமைகின்றன. அவனே இங்கனைத்திலும் உறைகிறான்’ (கீதை அத்தியாயம் 8- 22) அர்ஜுனன் பல இடங்களில் கிருஷ்ணனை பரமபுருஷனாக காண்கிறான். ”புருஷோத்தமனே! நீ தன்னால் தன்னை அறிய வல்லவன். பூதங்களானாய், பூதங்களின் தலைவனே, தேவதேவனே, வையத்து இறைவனே” (பகவத்கீதை 10- 15)

அத்வைதம்

சாங்கியதரிசனத்தின்படி புருஷன் என்பது முழுமையான ஒருமை, தொடக்கமுடிவற்றது, அது இங்கே எல்லா உயிர்களிலும் திகழும் பன்மையாக எப்படி ஆகியது? அதன் பன்மைத்தன்மை (நானாத்வம்) எப்படி உருவாகியது? புருஷனைப் பற்றி சாங்கியம் சொல்வன அனைத்துமே அனுபவநிலையிலுள்ள புருஷனுக்கே பொருந்துவன. அதற்கப்பாலுள்ள தூய கருத்துருவான புருஷனை உருவகிக்க சாங்கியம் வேதாந்தத்தின் தர்க்கமுறையையே கடைப்பிடிக்கிறது. சாங்கியகாரிகையில் அதைக் காணலாம். புலன்கள், அகங்கார, மகத் ஆகியவற்றுக்கும் அப்பாலுள்ள தூய புருஷன் என்னும் சாங்கியத்தின் உருவகமானது உண்மையில் வேதாந்த மரபின் ஆத்மா என்னும் உருவகமேயாகும்.

வேதாந்தம் சாங்கிய தத்துவத்தின் பிரகிருதி-புருஷ உருவகத்தை தனக்குரியவகையில் விளக்கிக்கொண்டது. சாங்கிய காரிகையே வேதாந்தக் கருத்துக்கள் சாங்கியத்தில் ஊடுருவியபின் உருவான நூல்தான். சாங்கியகாரிகைக்கு உரை எழுதிய வாசஸ்பதி மிஸ்ரர் சாங்கிய காரிகை புருஷன் என்பவன் உண்டு என்பதற்கு சுட்டும் ஐந்து காரணங்களை வேதாந்த நோக்கில் விளக்குகிறார். அவை

  1. பிரகிருதியும் புருஷனும் இணைந்தே உள்ளன. பிரகிருதியிலுள்ள சத்வம், தமஸ், ரஜஸ் ஆகிய குணங்கள் புருஷனில் சுகம், துக்கம், விழைவு ஆகிய உணர்வுகளாக ஆகின்றன. அவை ஒன்றை ஒன்று உருவாக்குகின்றன. ஆகவே பிரகிருதியின் முக்குணம் கொண்ட இருப்பே புருஷனின் இருப்புக்கான சான்றாகும்.
  2. முக்குணங்களாலான இயற்கையைப் பார்க்கையில் இதன் தொடக்கத்தில் அந்த முக்குணங்களும் தோன்றாத நிலை ஒன்று இருந்தாகவேண்டும். அப்போது பிரகிருதியை அறியும் புருஷனும் அவன் அறியும் சுகம், துக்கம், மோகம் ஆகியவை இல்லாத ஒரு நிலையில் இருந்திருக்கவேண்டும். தூய புருஷநிலை உண்டு என்பதற்கான சான்று இது.
  3. பிரகிருதி முக்குணங்களால் செயல்வேகம்கொண்டுள்ளது, மூன்று உணர்வுகளை புருஷனில் உருவாக்குகிறது. பிரகிருதி தேர் (ரதம்) என்றால் அதைச்செலுத்துவோன் (ரதி) இருந்தாகவேண்டும்
  4. பிரகிருதியின் முக்குணங்கள் அவற்றை அடையும்நிலையாலேயே அறியப்படுகின்றன. சத்வம், தமஸ்,ரஜஸ் ஆகியவை சுகம், துக்கம், விழைவு என்னும் உணர்வுகளாலேயே இருப்புணரப்படுகின்றன. குணங்கள் இருப்பது என்பதே குணங்களை அறியும் குணி இருக்கிறான் என்பதற்கான சான்று.
  5. பிரகிருதிக்கு உள்ளுணர்வு இல்லை, ஆகவே நோக்கமும் இல்லை. முடிவிலாத குணகளின் இணைவுகள் வழியாக பிரகிருதி செயல்பட்டுக்கொண்டிருப்பது எதற்காக என்னும் வினாவுக்கு விடையாக புருஷனின் விடுதலை என்றே பதில் சொல்லமுடியும். (சாங்கியகாரிகை17)

புருஷனின் இந்த பன்மைத்தன்மை எவ்வண்ணம் உருவாகிறது? பரமபுருஷனின் பன்மைத்தன்மை பிரகிருதியின் பன்மைத்தன்மையால் உருவாகிறது. புருஷன் குடிகொண்ட உடல் புருஷனில் பன்மைத்தன்மையை உருவாக்குகிறது. அதாவது ஒரு பிரக்ஞை தன்னை தனித்த தன்னிலையாக உணர்வது அந்த பிரக்ஞை திகழும் உடலால்தான். உடலே பிரக்ஞையின் பாத்திரம், அதுவே அதன் வடிவை தீர்மானிக்கிறது. இதை உபாதி (கருவி) என வேதாந்தம் சொல்கிறது. ஆனால் அதை வாசஸ்பதி மிஸ்ரர் மறுக்கிறார். அப்படியென்றால் உடலில் புதிய உறுப்புகள் உருவாகும்போது பிரக்ஞை வளர்கிறதா, குறையும்போது பிரக்ஞை குறைகிறதா? அப்படியென்றால் உடலின் உறுப்புகளான கைக்கும் காலுக்கும் தனித்த பிரக்ஞை உண்டு என்று சொல்லிவிடலாமா? ஓர் உறுப்பு இல்லாமலாவது ஒரு சாவு என கூறமுடியுமா? அனைத்து அனுபவங்களையும் அடைவது, அனுபவங்களுக்கு தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்வது, உள்ளிருக்கும் புருஷநிலைதான்.

வாசஸ்பதி மிஸ்ரர் புருஷன் ஒன்றே என்பதை மறுக்கிறார். புருஷன் ஒன்றே என்றால் ஓருடலில் திகழும் புருஷன் அடைந்த ஞானம் அத்தனை புருஷநிலைகளுக்கும் உரியதாக ஆகும். பாவபுண்ணியங்களும் அவ்வண்ணமே ஆகும். புருஷனின் பன்முகத்தன்மை என்பது ஒரு பிரபஞ்ச நிகழ்வு என்றால் எல்லா புருஷநிலைகளும் ஒரே இயல்பு கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு புருஷநிலைகளிலும் உள்ள முடிவில்லா வேறுபாடுகளும் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் தனித்தன்மைகளும் உருவாகாது. உயிர்களில் உறைவது ஆத்மாதான். அது தனக்கான தனித்துவம் கொண்டது. அதன் இயல்புகளே அதன் பயணத்தையும் மீட்பையும் தீர்மானிக்கின்றன என்று வாசஸ்பதி மிஸ்ரர் கூறுகிறார். உயிரும் ஆத்மாவும் ஒன்றென்றே திகழ்பவை. அதை ஜீவாத்மா என்ற சொல்லால் அத்வைதம் குறிப்பிடுகிறது. ஜீவனை விட்டு ஆத்மாவுக்கு ஒரு இருப்புநிலை இல்லை.

சைவம்

புருஷன் என்னும் கருத்துருவை சைவம் சிவனுடன் இணைத்துக் கொண்டுள்ளது. காஷ்மீரி சைவ கொள்கையின்படி சிவம் சதாசிவ நிலையில், அறியப்படா ஒற்றையிருப்பாக, பிறிதொன்றிலாததாக உள்ளது. ஈஸ்வரன் என்னும் நிலையில் அது இங்குள்ள அனைத்திலும் உள்ளுறையாக திகழ்கிறது. அதன் அடுத்த நிலையில் அது புருஷன் என இங்குள்ள ஒவ்வொரு உயிர்களுக்குள்ளும் அறியும்தன்னிலையாக மாறுகிறது. அந்த நிலையில் அது ஐந்து உடலாடைகளை (கஞ்சுகம்) அணிந்துகொள்கிறது. அவை முறையே காலம், ராகம் (விழைவு) நியதி (நெறிகள்) அறிவு( வித்யா) அழிவு (காலா). இவ்வாறாக பரமபுருஷன் அல்லது பரமாத்மன் தன்னை புருஷன் ஆக அல்லது ஜீவாத்மன் ஆக ஆக்கிக்கொள்கிறது. ஒரு மாமலை தன்னை அணுவாக ஆக்கிக்கொள்வதுபோல தன்னுடைய இயல்பை அது சுருக்கிக்கொள்கிறது. ஒரு தனி ஆத்மா என்பது சதாசிவம் தனக்கென கொண்டுள்ள அணுநிலையே.

வைணவம்

வைணவ மரபின்படி புருஷன் என்பது பரப்பிரம்மம் என்னும் முழுமுதன்மையின் ஒரு தோற்றம். பிரகிருதியை இயக்கும்பொருட்டு பரப்பிரம்மம் புருஷனாகிறது. உயிர்கள் அனைத்திலும் உறையும் பிரக்ஞை. ( ஸ்ரீ ப்ருஹத் பாகவதாம்ருதா) பாஞ்சராத்ரம் என்னும் வைணவ ஆகம மரபு புருஷன் என குறிப்பிடுவது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட முழுமுதன்மையான நாராயணனையே. பாஞ்சராத்ர ஆகமங்களில் ஒன்று புருஷசம்ஹிதை. பாஞ்சராத்ர மரபில் புகழ்பெற்ற ஆகமநூலான பத்ம சம்ஹிதையில் நாராயணனை வழிபட்டு, நாராயணனின் வியூக (வடிவ) நிலையான ஒரு சிலையில் அத்தெய்வநிலையை வரவழைக்கும்பொருட்டு ஓதப்படும் ஔபசாரிக மந்திரம் (அன்றாடச்சடங்கு மந்திரம்) புருஷமந்திரம் எனப்படுகிறது

சாக்தம்

சாக்தம் பரமபுருஷன் என்னும் கருத்தை ஏற்பதில்லை, சாக்த மரபில் புருஷன் என்னும் சொல் தனிப்பட்ட ஆத்மாவைக் குறிப்பதாக, உயிர்களில் இருந்து அறியும் தன்னிலைக்குரிய சொல்லாக மட்டுமே உள்ளது. உயிர்களுக்குள் இருந்து பருப்பொருளுடன் புலன்கள் வழியாகத் தொடர்புகொண்டிருப்பதே புருஷன். அதற்கப்பால் அறிபடுபொருளும் அறியும்தன்னிலையும் மாயையால் ஆளப்படுகின்றன. சக்தியின் சகல (அடையாளங்கள் கொண்ட) தோற்றத்தை அறிவது புருஷநிலையே.

பௌத்தம்

பௌத்ததின் மஹாயான மரபின்படி புத்தரின் உடல் மகாதர்மத்தின் உருவத்தோற்றமாக (மகாதம்மகாயம்) உருவகிக்கப்படுகிறது. புத்தரின் சிலைகள் அதனடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன. புருஷன் என்னும் கருத்தாக்கத்தின் பௌத்த வடிவமாக இது கருதப்படுகிறது. (பார்க்க தர்மகாயம்)

சமணம்

சமண மதத்தில் தீர்த்தங்காரர்களின் தோற்றம் புருஷன் என்னும் கருத்துருவத்தின் செல்வாக்கு கொண்டது. தீர்த்தங்காரர்கள் கற்பனைக்கெட்டாத அளவு பெரிய உடல் கொண்டவர்களாகவும், முற்றிலும் தூய்மையான முழுமையான இலக்கணம் கொண்ட உடல்கொண்டவர்களாகவும் உருவகிக்கப்பட்டுள்ளனர். (பார்க்க தீர்த்தங்காரர்)

பிற துறைகள்

தத்துவம் அல்லாத பிற துறைகளில் புருஷன் என்னும் கருத்துரு சிறிய வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. தத்துவத்தில் இருந்து பெறப்பட்ட பொருளே பெரும்பாலும் அத்துறைகளில் அச்சொல்லுக்கு அளிக்கப்படுகிறது

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் சாங்கிய தரிசனத்துக்கு அணுக்கமானது. சாங்கிய தரிசனத்தின் பல கொள்கைகளை அது பயன்படுத்துகிறது. புருஷன் என்னும் கருத்தை சாங்கியத்தை ஒட்டியே அது அமைத்துக் கொண்டுள்ளது. புருஷன் என்பது ஆயுர்வேதக் கருத்தின்படி உடலில் உறையும் கருத்துருவ இருப்பு. ஓர் உடலின் எல்லா புலன்களையும் பயன்படுத்திக்கொண்டு இயற்கையை அறிவது புருஷன். இயற்கை புருஷனுடன் தொடர்புகொள்கிறது. ஓர் உடலில் உயிரை நிலைநிறுத்தும் விழைவைக் கொண்டிருப்பதும், அவ்விழைவின்பொருட்டு அவ்வுடலின் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வதும் புருஷனே.

புருஷன் ஐந்து பருப்பொருட்கள் மற்றும் பிரக்ஞை என்னும் ஆறு அம்சங்களால் ஆனது (ஷட்தத்வமாமாக புருஷா) என சரக சம்ஹிதை குறிப்பிடுகிறது . புருஷன் சாங்கியம் சொல்லும் 24 தத்துவங்களாலானவன் என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கின்றன. இயற்கை தன்னுடைய பிளவற்ற, முழுமையான நிலையில் இருந்து திரிபடைவதற்கு 16 திரிபுகள் (விக்ருதிகள்) காரணம், அதேபோல புருஷன் தன்னை தனித்தறிவதற்கு அதே விக்ருதிகள் அவனில் 16 விகாரங்கள் (திரிபுணர்வுகள்) நிகழ்வது காரணம்.

ஜோதிஷம்

இந்திய ஜோதிஷ மரபில் புருஷன் என்னும் கருத்துரு இரண்டு பொருளில் கையாளப்படுகிறது. ஒன்று, பிரபஞ்சத்தின் சாரமாக இருக்கும் பிரக்ஞை, பொருட்களின் உள்ளுறைந்து அவற்றை இயக்கும் கருத்துருவம், பிரபஞ்சத்தின் நெறிகளை வகுக்கும் தன்னுணர்வு. இரண்டு, ஒவ்வொரு கோள்களும் ஒவ்வொரு புருஷன் என உருவகிக்கப்படுகின்றன. அக்கோள்களின் பருவடிவம் பிரகிருதியாலானது, அதற்கு தன்னுணர்வோ நோக்கமோ உள்ளார்ந்த ஆற்றலோ இல்லை. ஆனால் அவற்றில் உறையும் புருஷன் நோக்கமும் ஆற்றலும் கொண்டவன். பிரபஞ்ச இயக்கங்களை கட்டுப்படுத்தும் விசை கொண்டவன்.

சிற்பவியல்

இந்தியச் சிற்பவியல் மற்றும் கட்டிடக்கலையில் புருஷன் என்னும் கருத்துருவம் வாஸ்து புருஷன் என உருவகிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சிற்பக்கலையில் மிக விரிவான ஒரு கருத்துருவம் இது. ஒரு கட்டிடம் அல்லது கோட்டை அல்லது நகரம் என்பது ஒரு பருவடிவம், பிரகிருதிபோல. பிரகிருதியின் உள்ளுறையாக இருந்து அதை இயக்கும் புருஷன் போல ஒவ்வொரு பருவடிவுக்குள்ளும் அதற்குரிய புருஷன் உள்ளது. (மலைகளுக்கும் அவ்வண்ணம் உள்ளுறைந்த புருஷன் உண்டு என நூல்கள் சொல்கின்றன). பொருள் (வஸ்து)வின் உள்ளே உறையும் அந்த புருஷன் வாஸ்து புருஷன் என குறிப்பிடப்படுகிறான். ஆலயம், மாளிகை , கோட்டை, நகரம் ஆகிய ஒவ்வொன்றிலும் அதற்குரிய வாஸ்துபுருஷன் உறைகிறான்.

அந்த வாஸ்துபுருஷனின் புரம் (உறைவிடம்)தான் அந்த அமைப்பு. ஆகவே அது ஓர் உடல். அந்த உடல் அப்புருஷனின் செயல்பாட்டுக்குரியவகையில் முழுமையாக அமையவேண்டும். அதில் குறையோ மிகையோ இருக்கலாகாது. அந்த அமைப்புகள் உருவாக்கப்படும்போது அந்த வாஸ்துபுருஷன்தான் முதலில் தியானிக்கப்படுகிறான்.அவனுக்குரிய உறைவிடத்தின் வரைபடம் உருவாக்கப்படுகிறது. அது வாஸ்துமண்டலம் எனப்படுகிறது. அந்த வரைபடத்தின் அடிப்படையில் அந்த கட்டிடமோ கோட்டையோ நகரோ உருவாக்கப்படுகிறது.

உசாத்துணை