second review completed

சுட்டி விகடன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 48: Line 48:
* [https://saravananagathan.wordpress.com/tag/chutti-vikatan/ சுட்டி விகடன் நினைவுகள்: பூ.கொ.சரவணன்]
* [https://saravananagathan.wordpress.com/tag/chutti-vikatan/ சுட்டி விகடன் நினைவுகள்: பூ.கொ.சரவணன்]
* [https://www.dailymotion.com/video/x7wz4sc சுட்டி விகடன் ப்ரெய்லி இதழ் வெளியீடு]  
* [https://www.dailymotion.com/video/x7wz4sc சுட்டி விகடன் ப்ரெய்லி இதழ் வெளியீடு]  
{{First review completed}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 02:19, 14 February 2024

சுட்டி விகடன் இதழ்

சுட்டி விகடன் (1999) சிறார்களுக்கான இதழ். ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்தது. எஸ். பாலசுப்பிரமணியன் இவ்விதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்.

வெளியீடு

சுட்டி விகடன், நவம்பர் 1999 முதல் வெளிவந்த சிறார் மாத இதழ். ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளிவந்தது. இவ்விதழை எஸ். பாலசுப்பிரமணியன் தொடங்கினார். பொது அறிவுச் செய்திகளையும் நவீன உலகின் தொழில்நுட்ப நிகழ்வுகளையும் சிறார்கள் அறிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் இவ்விதழ் வெளியிட்டது. தொடக்க காலத்தில் ஞாநி இவ்விதழின் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டார். சுட்டி கணேசன் இவ்விதழின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

ஏப்ரல் 2005 வரை மாத இதழாக வெளிவந்த சுட்டி விகடன் பின் இருமுறை மாத இதழாக வெளிவந்தது.

சுட்டி விகடன்

உள்ளடக்கம்

சுட்டி விகடன், ‘உயிர்த்தமிழ் பயிர் செய்வோம்’ என்ற முகப்பு வாசகத்துடன் 68 பக்கங்களுடன் வெளிவந்தது. இதழின் விலை தொடக்கத்தில் பத்து ரூபாயாக இருந்தது. பின்னர் காலமாற்றத்திற்கேற்ப அதிகரித்தது. குழந்தைகளுக்கான கதைகள், அறிவியல் கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள், வரலாற்றுச் செய்திகள், பொது அறிவுச் செய்திகள், தொடர்கள், புதிர்கள், படக்கதை, சிந்தனைக்குச் சில செய்திகள், விளையாட்டுச் செய்திகள் போன்றவை சுட்டி விகடனில் இடம்பெற்றன.

கல்வி சார்ந்த விஷயங்கள், பள்ளி நிகழ்வுகள், சிறார் சுற்றுலா, மாணவர்களின் சாதனைகள், விளையாட்டு, கைத்திறன்கள் பற்றிய செய்திகள், சுட்டி ஸ்டார் நியூஸ், விழிப்புணர்வுக் கட்டுரைகள் போன்றவை சுட்டி விகடன் இதழில் வெளியாகின. வண்ணப் படங்களுடன் வெளியான சுட்டிவிகடன் இதழின் புதிர்கள் சிறார்களைக் கவர்ந்தன. சுட்டி விகடனில் வெளியான வார்த்தைச் சதுரங்கம் என்னும் குறுக்கெழுத்துப்புதிர், சிறார்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களையும் ஈர்த்தது. மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், கையளவு களஞ்சியம் போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன.

ரோபோ செய்வது எப்படி, ஹெலிகாப்டர் செய்வது எப்படி, விமானம் செய்வது எப்படி என்றெல்லாம் இதழின் உள்ளே குறிப்புகளுடனும் அதற்கான அட்டைகள் மற்றும் செய்முறைப் பயிற்சிகளுடனும் சுட்டி விகடன் வெளியிட்டது. சிறார்களின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிறார்களுக்கான பல்வேறு பரிசுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ‘தமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல்' என்ற தலைப்பில், ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு இணைப்பிதழ் ஒன்று மாதந்தோறும் வெளிவந்தது.

சிறுவர்களால் விரும்பி வாசிக்கப்படும் இதழாகச் சுட்டி விகடன் இருந்தது. பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி இதழாகவும் சுட்டி விகடன் இதழ் வெளிவந்தது.

சுட்டி விகடன் முகப்பு

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

மாத இதழ், மாதம் இருமுறை இதழ் என வெளிவந்த சுட்டிவிகடன், பொருளாதாரக் காரணங்களால், செப்டம்பர் 1, 2019 தேதியிட்ட இதழில், ”மாதமிருமுறை வெளியாகிவந்த ‘சுட்டி விகடன்’ இந்த இதழோடு விடைபெறுகிறது” என்ற அறிவிப்புடன் நின்றுபோனது.

மதிப்பீடு

சிறார்களின் கற்பனைத்திறனை மேம்படுத்துவதற்கான பலவிதமான பயிற்சிகள், பொது அறிவை வளர்த்தெடுப்பதற்கான பல போட்டிகள் சுட்டி விகடன் இதழில் இடம்பெற்றன. அறிவியல் செய்திகள் எளிய மொழியில் விளக்கங்களுடன் இடம்பெற்றன. நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமப்புறம் சார்ந்த மாணவர்களாலும் சுட்டி விகடன் விரும்பி வாசிக்கப்பட்டது. சிறார்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த இதழாக சுட்டி விகடன் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.