under review

தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Line 8: Line 8:
கொடுத்த பொருளில் உடனே கவிதை பாடக்கூடிய திறமையால் 'ஆசுகவி' என்ற பெயரையும் பெற்றார்.

== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
முத்தியால்பேட்டை அரசினர்பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகப் பணி செய்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சென்னையில் கூரையில் பள்ளிகள் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக சிந்தாரிப்பேட்டை நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காகப் போராடினார். அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக, நாடகங்கள் எழுதி, இயக்கினார். அதில் ஆசிரியர்களை நடிக்க வைத்து, அவரும் நடித்து நிதி திரட்டினார். நாடகங்கள் மூலம் சமூக பிரச்னைகளை வலியுறுத்தி வந்த பாவலருக்கு, அன்னி பெசன்ட் அம்மையாரின் கருத்துகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017-ல் அன்னிபெசண்ட் அம்மையார் கைதானபோது தன்பணியைத் துறந்து தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைக்காக போராடிய ராஜாஜி, [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]], தி இந்து நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் என பல தலைவர்களோடு தோழமையோடு இருந்தார்.  
முத்தியால்பேட்டை அரசினர்பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகப் பணி செய்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சென்னையில் கூரையில் பள்ளிகள் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக சிந்தாரிப்பேட்டை நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காகப் போராடினார். அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக, நாடகங்கள் எழுதி, இயக்கினார். அதில் ஆசிரியர்களை நடிக்க வைத்து, அவரும் நடித்து நிதி திரட்டினார்.  
 
== அரசியல் ==
நாடகங்கள் மூலம் சமூக பிரச்னைகளை வலியுறுத்தி வந்த பாவலருக்கு, அன்னி பெசன்ட் அம்மையாரின் கருத்துகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017-ல் அன்னிபெசண்ட் அம்மையார் கைதானபோது தன்பணியைத் துறந்து தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைக்காக போராடிய ராஜாஜி, [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]], தி இந்து நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் என பல தலைவர்களோடு தோழமையோடு இருந்தார்.  
== இதழியல் பணி ==
== இதழியல் பணி ==
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். வார இதழான 'தேசபந்து', மாத இதழான ' பாரதி' காங்கிரஸ் நாளிதழான 'இன்றைய சமாச்சாரம்' போன்ற பல பத்திரிகைகளில் பணி புரிந்தார்.

Line 24: Line 27:
பாவலரின் மற்றொரு நாடகமான 'பாம்பே மெயில்' கதாநாயகன், அன்றைய காங்கிரஸ் கொடியை ஏந்தி, "பாரத மணிக்கொடி வாழ்க" என்ற பாடலுடன் தொடங்கியது. பாடல்களை , மகாத்மா காந்தியின் ராட்டையுடன் கதாநாயகன் பாடுவது போல், நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது.

'பாலாம்பாள்' நாடகம் காந்தியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 'கவர்னர்ஸ் கப்</>' நாடகம் சூதாட்டமான குதிரைப் பந்தயத்தின் தீமையை உணர்த்தியது. 'கதரின் வெற்றி', ' தேசியக்கொடி' முதலான நாடகங்களில் நேரடியாகத் தேசிய இயக்கக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்விரு நாடகங்களும் லண்டன் நகரில் நடத்தப்பட்டன. 'தேசியக் கொடி' நாடகம் நாகபுரியில் நிகழ்ந்த போராட்டத்தைப் புலப்படுத்தியது. நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த தெருவில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது என்று காவலர்கள் தடை செய்தனர். தேசியத் தொண்டர்கள் தேசியக் கொடியுடன் நாள்தோறும் அந்தத் தெருவில் செல்வதைப் போராட்டமாக்கினர். எண்ணற்ற தொண்டர்கள் இப்போராட்டத்தில் சிறை சென்றனர். இந்த அடிப்படையில்தான் 'தேசியக்கொடி' நாடகம் உருவாக்கப் பட்டது.
'பாலாம்பாள்' நாடகம் காந்தியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 'கவர்னர்ஸ் கப் ' நாடகம் சூதாட்டமான குதிரைப் பந்தயத்தின் தீமையை உணர்த்தியது. 'கதரின் வெற்றி', ' தேசியக்கொடி' முதலான நாடகங்களில் நேரடியாகத் தேசிய இயக்கக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்விரு நாடகங்களும் லண்டன் நகரில் நடத்தப்பட்டன. 'தேசியக் கொடி' நாடகம் நாகபுரியில் நிகழ்ந்த போராட்டத்தைப் புலப்படுத்தியது. நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த தெருவில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது என்று காவலர்கள் தடை செய்தனர். தேசியத் தொண்டர்கள் தேசியக் கொடியுடன் நாள்தோறும் அந்தத் தெருவில் செல்வதைப் போராட்டமாக்கினர். எண்ணற்ற தொண்டர்கள் இப்போராட்டத்தில் சிறை சென்றனர். இந்த அடிப்படையில்தான் 'தேசியக்கொடி' நாடகம் உருவாக்கப் பட்டது.

தேசிய கருத்துகளை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து, 'பாவலர் பாய்ஸ் கம்பெனி' தொடங்கினார். சிறுவர்களை நாடக உலகில் சரியான முறையில் வழிநடத்தவும், சமூகக் கருத்துகளை தெளிவாக புரிந்துக்கொள்ளவும் உதவினார். சீர்திருத்த நாடகங்களை தமிழகம் முழுவதும் பரப்ப, சிறுவர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார்.டி. கே. எஸ் சகோதரர்கள் (டி.கே. சங்கரன், டி. கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி. கே. பகவதி) மற்றும் எஸ். எம். சிதம்பரநாதன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.  

Line 30: Line 33:
இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெள்ளிவிழா (silver jubilee) நடந்தபோது தன்னுடைய பாலசபையினரை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப்போய் அச்சமயம் பல தமிழ் நாடகங்கள் நடத்தினார்.  

== பாடல்கள் ==
கிருஷ்ணசாமி பாவலர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளார். அதில் குறிப்பிடத் தக்கவை 'போரூர் முருகன் அபிஷேக மாலை', 'கந்தர் கவசம்', 'திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி பதிகம்', 'வேம்படி விநாயகர் பஞ்சரத்தினம்' ஆகியவை.

== இறப்பு ==
தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் மார்ச் 1, 1934 அன்று காசநோயால் மரணமடைந்தார்
== விருதுகள், சிறப்புகள் ==
* ஷோடசாவதானி
* சதாவதானி
* பிரசங்க சிந்தாமணி
* சங்கத் தொனி
== பண்பாட்டு இடம் ==
== பண்பாட்டு இடம் ==
தமிழில் நாடகங்களால் கருத்துப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் கிருஷ்ணசாமி பாவலர் முக்கியமானவர். புராண, இதிகாச, காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டே நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்தன. அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சீர்திருத்தம் என உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்களின் தேவையை உணர்ந்து அவற்றை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். காந்தியம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியதும், மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம், தேச விடுதலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்ததும் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். நவீன சாதனங்களைக் கொண்டு, நாடகக் குழுக்கள் அமைத்து பாமர மக்களிடம் நாடகங்களைக் கொண்டு சேர்த்தார். சமூகப் பிரச்னைகளான மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, குதிரைப் பந்தய ஒழிப்பு, கலப்பு திருமணம் ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் நாடகங்களை எழுதி மக்களுக்கு கருத்துகளை திணிக்காமல், உணர்த்தினார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார்.

Line 37: Line 50:

பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனை கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கினார்.. அவர் காலத்திய [[வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்|வடுவூர் துரைசாமி ஐயங்கார்]], ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றினார். (கதர் பக்தி ஒரு துப்பறியும் தேசிய நாடகம் என்றே குறிப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டது).  

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் மார்ச் 1, 1934 அன்று காசநோயால் மரணமடைந்தார்.
== எழுதி இயக்கிய நாடகங்கள் ==
== எழுதி இயக்கிய நாடகங்கள் ==
* அரிச்சந்திர மயான காண்டம்
* அரிச்சந்திர மயான காண்டம்
Line 53: Line 64:
* பம்பாய் மெயில்
* பம்பாய் மெயில்
* கமலசேகரன்
* கமலசேகரன்
== விருதுகள், சிறப்புகள் ==
 
* ஷோடசாவதானி
*
* சதாவதானி
* பிரசங்க சிந்தாமணி
* சங்கத் தொனி
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009555_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf நாடகக் கலையின் வரலாறு-எஸ்.வி.சஹஸ்ரநாமம்- தமிழ் இணைய கல்விக் கழகம்]

Revision as of 12:59, 12 February 2024

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ( தென்பட்டணம் பொன்னுசாமி கிருஷ்ணசாமிப் பாவலர், சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் : ஆகஸ்ட் 29, 1890-மார்ச் 1, 1934) இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தும் பல பிரபலமான நாடகங்களை எழுதி, இயக்கியவர். சதாவதானி, ஆசுகவி. 'பாவலர் பாய்ஸ்' என்ற நாடகக் கம்பெனியை ஆரம்பித்து இந்திய சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தி, பல நாடகங்களை இயக்கினார். டி.கே.எஸ். சகோதரர்கள், முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவர் எழுதிய நாடகங்களில் நடித்தனர்.

பிறப்பு, கல்வி

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் ஆகஸ்ட் 29, 1890 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பொன்னுசாமி கிராமணியாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கல்வியாளர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் அவரது இளைய சகோதரர். தந்தை பொன்னுசாமி கிராமணியார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரான அட்டாவதானம் தி. க. சுப்பராய செட்டியாரிடம் தமிழ் பயின்றவர். தன் பள்ளிப்படிப்பை சிந்தாதிரிப்பேட்டையில் முடித்தார். தமிழ்மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோ. வடிவேலு செட்டியாரிடம் தமிழிலக்கியங்களைப் பயின்றார்.

தனது இருபதாவது வயதில் சென்னை வி. பி. ஹாலில் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர் தலைமையில் ஷோடசாவதானமும் (ஒரே சமயத்தில் பதினாறு தனித்தனி நிகழ்வுகளை/செயல்களை அவதானித்தல்) , மதுரையில் அரசன் சண்முகனார் முன்னிலையில் சதாவதானமும் (ஒரே சமயத்தில் நூறு தனித்தனி நிகழ்வுகளை/செயல்களை அவதானித்தல்) நிகழ்த்தி 'பிரசங்க சிந்தாமணி', 'சங்கத் தொனி' ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

கொடுத்த பொருளில் உடனே கவிதை பாடக்கூடிய திறமையால் 'ஆசுகவி' என்ற பெயரையும் பெற்றார்.

தனி வாழ்க்கை

முத்தியால்பேட்டை அரசினர்பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகப் பணி செய்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம்ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சென்னையில் கூரையில் பள்ளிகள் நடத்தப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக சிந்தாரிப்பேட்டை நடுநிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காகப் போராடினார். அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக, நாடகங்கள் எழுதி, இயக்கினார். அதில் ஆசிரியர்களை நடிக்க வைத்து, அவரும் நடித்து நிதி திரட்டினார்.

அரசியல்

நாடகங்கள் மூலம் சமூக பிரச்னைகளை வலியுறுத்தி வந்த பாவலருக்கு, அன்னி பெசன்ட் அம்மையாரின் கருத்துகள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவருடைய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017-ல் அன்னிபெசண்ட் அம்மையார் கைதானபோது தன்பணியைத் துறந்து தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைக்காக போராடிய ராஜாஜி, திரு.வி.க, தி இந்து நாளிதழின் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் என பல தலைவர்களோடு தோழமையோடு இருந்தார்.

இதழியல் பணி

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். வார இதழான 'தேசபந்து', மாத இதழான ' பாரதி' காங்கிரஸ் நாளிதழான 'இன்றைய சமாச்சாரம்' போன்ற பல பத்திரிகைகளில் பணி புரிந்தார்.

நாடகப்பணி

இதழியலில் பணி புரிந்த தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் சமகாலத் தேசிய நிகழ்ச்சிகளை வெளியிட பத்திரிகையைவிட நாடகம் ஏற்ற ஊடகம் என்று உணர்ந்தார். பம்மல் சம்பந்த முதலியாரின் 'சுகுண விலாஸ சபை' யின் உறுப்பினராக இணைந்து பல நாடகங்களில் நடித்தார். "சாரங்கதராவில் சுமந்திரராகவும் மனோகராவில் ராஜப்பிரியனாகவும் நன்றாய் நடித்தார்" என்று பம்மல் சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார்.

சமூக நலனுக்கு பயன்படும் வகையில் நாடங்களை அமைப்பதற்காக பால மனோகரா சபா' வை உருவாக்கினார். 'தனபதி', 'விஜய விலோசனை', 'பதி பக்தி', 'கதர் பக்தி', 'பம்பாய் மெயில்' போன்ற நாடகங்களைஎழுதி மேடையேற்றினார்.

'பதிபக்தி' என்ற நாடகம் குடியின் கொடுமையை உணர்த்தியது. தேசியக் கொள்கைகளுள் ஒன்றான மதுவிலக்கை விளக்கும் வகையில்-மதுவின் தீமையை உணர்த்தும் வகையில் வசனங்கள் அமைந்தன. பின்னர், அது திரைப்படமாகவும் வெளி வந்தது. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியால் இந்நாடகம் எடுத்து நடத்தப்பட்டபோது அதில் அறிமுகமாகி பின்னாளில் பிரபலமடைந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன், பிரபல எழுத்தாளர் எஸ். எஸ். எஸ். வாசன், இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன், பிரபல நடிகர்களான டி.எஸ். பாலையா, எம். ஆர். ராதா, என். எஸ். கிருஷ்ணன் போன்றோர்.

அவர் அடுத்த படியாக எழுதிய 'கதரின் வெற்றி" என்ற நாடகத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. தேசபக்தர்களைக் காவல் துறை அடிப்பது போன்ற காட்சிகளுக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். பொது மேடைகளில் நாடகம் போட அனுமதி அளிக்கவில்லை. அதனால், அந்த நாடகத்தின் பெயர் "கதர் பக்தி" என மாற்றி, நடிக்கப்பட்டது. விதேசித் துணிகளுக்கெதிரான போராட்டம் நாட்டில் பரவிக்கொண்டிருந்த சமயம், சென்னையில் ராயல் தியேட்டரில் இந்த நாடகம் நடந்து முடிந்ததும் நாடகத்தைப் பார்த்த சிலர் அப்போதே மேடையில் ஏறி, எனக்கும் கதராடை தாருங்கள் என்று முழங்கும் அளவுக்கு உணர்ச்சிவசப்படச் செய்த நாடகம் இது என்று கா. திரவியம் குறிப்பிடுகிறார்.

'பஞ்சாப் கேசரி[1]' என்ற நாடகத்தை அன்றைய மதராஸ் மாகாணம் முழுவதும் நடத்தியதுடன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற அயல் நாடுகளிலும் நடத்தினார். பின்னர், பி.யு. சின்னப்பா நடிப்பில், அது திரைப்படமாகவும் வெளி வந்தது. படத்தின் தொடக்கக் காட்சியில், "வந்தே மாதரம்" என்ற பாடலுடன் படம் தொடங்கியது.

பாவலரின் மற்றொரு நாடகமான 'பாம்பே மெயில்' கதாநாயகன், அன்றைய காங்கிரஸ் கொடியை ஏந்தி, "பாரத மணிக்கொடி வாழ்க" என்ற பாடலுடன் தொடங்கியது. பாடல்களை , மகாத்மா காந்தியின் ராட்டையுடன் கதாநாயகன் பாடுவது போல், நாடகம் அமைக்கப்பட்டு இருந்தது.

'பாலாம்பாள்' நாடகம் காந்தியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. 'கவர்னர்ஸ் கப் ' நாடகம் சூதாட்டமான குதிரைப் பந்தயத்தின் தீமையை உணர்த்தியது. 'கதரின் வெற்றி', ' தேசியக்கொடி' முதலான நாடகங்களில் நேரடியாகத் தேசிய இயக்கக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்விரு நாடகங்களும் லண்டன் நகரில் நடத்தப்பட்டன. 'தேசியக் கொடி' நாடகம் நாகபுரியில் நிகழ்ந்த போராட்டத்தைப் புலப்படுத்தியது. நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த தெருவில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது என்று காவலர்கள் தடை செய்தனர். தேசியத் தொண்டர்கள் தேசியக் கொடியுடன் நாள்தோறும் அந்தத் தெருவில் செல்வதைப் போராட்டமாக்கினர். எண்ணற்ற தொண்டர்கள் இப்போராட்டத்தில் சிறை சென்றனர். இந்த அடிப்படையில்தான் 'தேசியக்கொடி' நாடகம் உருவாக்கப் பட்டது.

தேசிய கருத்துகளை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்லலாம் என முடிவெடுத்து, 'பாவலர் பாய்ஸ் கம்பெனி' தொடங்கினார். சிறுவர்களை நாடக உலகில் சரியான முறையில் வழிநடத்தவும், சமூகக் கருத்துகளை தெளிவாக புரிந்துக்கொள்ளவும் உதவினார். சீர்திருத்த நாடகங்களை தமிழகம் முழுவதும் பரப்ப, சிறுவர்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்தார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார்.டி. கே. எஸ் சகோதரர்கள் (டி.கே. சங்கரன், டி. கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி. கே. பகவதி) மற்றும் எஸ். எம். சிதம்பரநாதன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வெள்ளிவிழா (silver jubilee) நடந்தபோது தன்னுடைய பாலசபையினரை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப்போய் அச்சமயம் பல தமிழ் நாடகங்கள் நடத்தினார்.

பாடல்கள்

கிருஷ்ணசாமி பாவலர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டு பல பாடல்கள் பாடியுள்ளார். அதில் குறிப்பிடத் தக்கவை 'போரூர் முருகன் அபிஷேக மாலை', 'கந்தர் கவசம்', 'திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி பதிகம்', 'வேம்படி விநாயகர் பஞ்சரத்தினம்' ஆகியவை.

இறப்பு

தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் மார்ச் 1, 1934 அன்று காசநோயால் மரணமடைந்தார்

விருதுகள், சிறப்புகள்

  • ஷோடசாவதானி
  • சதாவதானி
  • பிரசங்க சிந்தாமணி
  • சங்கத் தொனி

பண்பாட்டு இடம்

தமிழில் நாடகங்களால் கருத்துப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் கிருஷ்ணசாமி பாவலர் முக்கியமானவர். புராண, இதிகாச, காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டே நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்தன. அரசியல், சமூக நடைமுறை, பண்பாடு, சீர்திருத்தம் என உள்ளடக்கங்களைக் கொண்ட நாடகங்களின் தேவையை உணர்ந்து அவற்றை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். காந்தியம் தொடர்பான நாடகங்களை உருவாக்கியதும், மது விலக்கு, கதர்ப் பிரச்சாரம், தேச விடுதலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடகங்களை அமைத்ததும் தெ. பொ. கிருஷ்ணசாமிப் பாவலரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள். நவீன சாதனங்களைக் கொண்டு, நாடகக் குழுக்கள் அமைத்து பாமர மக்களிடம் நாடகங்களைக் கொண்டு சேர்த்தார். சமூகப் பிரச்னைகளான மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, குதிரைப் பந்தய ஒழிப்பு, கலப்பு திருமணம் ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு எளிமையாக புரியும் விதத்தில் நாடகங்களை எழுதி மக்களுக்கு கருத்துகளை திணிக்காமல், உணர்த்தினார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார்.

லண்டனில் நடந்த வெம்ப்லி கண்காட்சியில் (Wembley exhibition[2]) தென்னகத்தின் சார்பாக பாய்ஸ் கம்பெனி குழுவுடன் சென்று 'கதரின் வெற்றி', 'தேசியக் கொடி' ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார். [3]

பாடல் என்னும் நிகழ்த்து வடிவத்திலிருந்து, புனை கதைகளைப் போலப் பேசும் மரபு சார்ந்த நாடகங்களை உருவாக்கினார்.. அவர் காலத்திய வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்ற துப்பறியும் கதாசிரியர்களைப் பின்பற்றித் துப்பறியும் நாடகங்களை மேடையேற்றினார். (கதர் பக்தி ஒரு துப்பறியும் தேசிய நாடகம் என்றே குறிப்பிடப்பட்டு, அச்சிடப்பட்டது).

எழுதி இயக்கிய நாடகங்கள்

  • அரிச்சந்திர மயான காண்டம்
  • சதி சாவித்திரி
  • பர்த்ருஹரி
  • வள்ளி
  • பிரஹலாதா
  • தனபதி
  • விஜய விலோசனை
  • பதிபக்தி
  • தேசியக்கொடி
  • பாலாம்பாள்
  • பஞ்சாப் கேசரி
  • பம்பாய் மெயில்
  • கமலசேகரன்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. Punjab kesari 1938- The Hindu May 2014
  2. The British Empire Exhibition was a colonial exhibition held at Wembley Park, London England from 23 April to 1 November 1924 and from 9 May to 31 October 1925
  3. https://madrasmusings.com/Vol%2018%20No%2018/otherstories.html

✅Finalised Page