under review

தூயவன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எம். எஸ். அக்பர்  நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு  ஜனவரி 22, 1947 அன்று மகனாகப்  பிறந்தார். உடன் பிறந்தவரகள் ஐந்து சகோதரிகள்.  தந்தை ஒலியுல்லா  ஆங்கில இலக்கியத்தில்  இளங்கலைப்  பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றினார்.  
எம். எஸ். அக்பர்  நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு  ஜனவரி 22, 1947 அன்று மகனாகப்  பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள்.  தந்தை ஒலியுல்லா  ஆங்கில இலக்கியத்தில்  இளங்கலைப்  பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றினார்.  


எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தையின் இறப்பினால்  படிப்பு இடை நின்றது.
எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தையின் இறப்பினால்  படிப்பு இடை நின்றது.
Line 82: Line 82:
<references />
<references />


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 09:14, 16 November 2023

நன்றி:மாலைமலர்

தூயவன்(எம். எஸ். அக்பர்)(ஜனவரி 22, 1947- ஜூலை 11, 1987) சிறுகதை எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, தயாரிப்பாளர். 'பலப்பரீட்சை' திரைப்படத்திற்காக தமிழக அரசின் விருதும் தங்கப் பதக்கமும் பெற்றார்.

பிறப்பு, கல்வி

எம். எஸ். அக்பர் நாகூரில் சாகு ஒலியுல்லா, ஜொகரான் இணையருக்கு ஜனவரி 22, 1947 அன்று மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். தந்தை ஒலியுல்லா ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றினார்.

எம். எஸ். அக்பர், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தையின் இறப்பினால் படிப்பு இடை நின்றது.

அக்பர் இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார்.அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு அவரது எழுத்தார்வத்தை வளர்த்தது.

தனி வாழ்க்கை

எம்.எஸ். அக்பர் ஜெய்புன்னிசாவை செப்டெம்பர் 27, 1968-ல் மணந்து கொண்டார். ஜெய்புன்னிசா 'செல்வி' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார். மகன் பாபு தூயவன், மகள் யாஸ்மின். தூயவன் எழுத்தாளர் நாகூர் ரூமியின் தாய் மாமன்.

இலக்கிய வாழ்க்கை

அக்பர் ' தூயவன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதினார். தினத்தந்தி, ராணி, ஆனந்த விகடன், தினமணி கதிர்' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் வெளியாகின. அவர் எழுதிய 'உயர்ந்த பீடம்'[1] என்ற சிறுகதை, விகடன் தன் முத்திரைக்கதைகளுக்கான பரிசுத் தொகையை 501 ரூபாயாக உயர்த்தியபின் அப்பரிசை வென்ற முதல் முத்திரைக் கதை. இது அவருக்குப் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. மாதநாவல்கள் எழுதினார். தினமணி கதிரில் இவர் எழுதிய 'சிவப்பு ரோஜா' என்ற சிறுகதை பரிசுக்கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானது.

நாடகத்துறை

நடிகர் மேஜர் சுந்தர்ராஜனுக்காக தூயவன் எழுதிய 'தீர்ப்பு', ஏ.வி.எம். ராஜனுக்காக எழுதிய 'பால் குடம்' இரு நாடகங்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

திரைத்துறை

'பால்குடம்' நாடகத்தை திரைப்படமாக ஏ.வி.எம். ராஜன் எடுத்தபோது தூயவன் எழுதிய வசனங்களுக்குக் கிடைத்த கவனத்தையடுத்து திரை வாய்ப்புகள் வந்தன. ஜெய்சங்கர், ஜெயபாரதி நடித்த “புதிய வாழ்க்கை”, சிவாஜி கணேசன் நடித்த 'மனிதருள் மாணிக்கம், ஜெயலலிதா, முத்துராமன் நடித்த 'திக்குத் தெரியாத காட்டில்' உள்பட சுமார் 84 திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். 1978-ல் 'பலப்பரீட்சை' திரைப்பட வசனத்திற்காகாக தமிழக அரசின் தங்கப் பதக்கம் பெற்றார். சாண்டோ சின்னப்ப தேவரின் 'கோமாதா என் குலமாதா', 'மாணவன்' ,'ஆட்டுக்கார அலமேலு', 'அன்புக்கு நான் அடிமை', ரஜினி காந்த் நடித்த 'தாய் மீது சத்தியம்', 'தாய்வீடு', 'அன்னை ஓர் ஆலயம்' போன்ற திரைப்படங்கள் தூயவனின் வசனத்தில் 100 நாட்களைக் கடந்து ஓடின.

நண்பர் சக்திவேலுடன் இணைந்து எஸ்.டி.கம்பைன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார். 7 திரைப்படங்களைத் தயாரித்தார். 'அன்புள்ள ரஜனிகாந்த்', 'வைதேகி காத்திருந்தாள்' இரு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்றன.

எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப்பதக்கம் பெறுதல்

விருதுகள், பரிசுகள்

  • 1978- சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருது (பலப்பரிட்சை)
  • 1967- விகடன் முத்திரைக் கதை பரிசு

மதிப்பீடு

தூயவன் குறிப்பிடத்தக்க திரைப்பட வசனகர்த்தாவாக அறியப்படுகிறார். அவரது நாடகங்களும் பரவலான கவனத்தைப் பெற்றன.

திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்
  • விடியும் வரை காத்திரு
  • கேள்வியும் நானே பதிலும் நானே
  • வைதேகி காத்திருந்தாள்
  • அன்புள்ள ரஜினிகாந்த்
  • நானே ராஜா நானே மந்திரி
  • தலையாட்டி பொம்மைகள்
  • உள்ளம் கவர்ந்த கள்வன்
வசனம் எழுதிய சில திரைப்படங்கள்
  • பால் குடம்
  • புதிய வாழ்க்கை
  • மனிதருள் மாணிக்கம்
  • திக்குத் தெரியாத காட்டில்
  • முடிசூடா மன்னன்
  • கல்யாணமாம் கல்யாணம்
  • எங்களுக்கும் காலம் வரும்
  • கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
  • கோமாதா என் குலமாதா
  • மாணவன்
  • ஆட்டுக்கார அலமேலு
  • அன்புக்கு நான் அடிமை
  • தாயில்லாமல் நான் இல்லை
  • தாய் மீது சத்தியம்
  • தாய் வீடு
  • ரங்கா
  • அன்னை ஓர் ஆலயம்
  • தவப்புதல்வன்
  • பொல்லாதவன்
  • அன்புள்ள ரஜினிகாந்த்
  • பணம் பெண் பாசம்

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்


✅Finalised Page