நற்றிணை: Difference between revisions
No edit summary |
|||
Line 17: | Line 17: | ||
* அஞ்சில் ஆந்தையார் ( 233 ) | * அஞ்சில் ஆந்தையார் ( 233 ) | ||
* அம்மள்ளனார் ( 82 ) | * அம்மள்ளனார் ( 82 ) | ||
*[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, | *[[அம்மூவனார்]] ( 4 , 35 , 38 ,275 , 307, 315, 327, 395,76, 397 ) | ||
*அம்மெய்யன் நாகனார் ( 252 ) | *அம்மெய்யன் நாகனார் ( 252 ) | ||
* அல்லங் கீரனார் ( 245 ) | * அல்லங் கீரனார் ( 245 ) | ||
Line 49: | Line 49: | ||
*கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் ( 144, 213 ) | *கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் ( 144, 213 ) | ||
*கடுவன் இளமள்ளனார் ( 150 ) | *கடுவன் இளமள்ளனார் ( 150 ) | ||
*கணக்காயனார் ( 23 ) [[கணியன் பூங்குன்றனார்]] ( 226 ) கண்ணகனார் ( 79 ) | *கணக்காயனார் ( 23 ) | ||
*[[கணியன் பூங்குன்றனார்]] ( 226 ) | |||
*கண்ணகனார் ( 79 ) | |||
*கண்ணகாரன் கொற்றனார் ( 143, 156 ) | *கண்ணகாரன் கொற்றனார் ( 143, 156 ) | ||
*கண்ணம்புல்லனார் ( 159 ) | *கண்ணம்புல்லனார் ( 159 ) |
Revision as of 04:47, 4 November 2023
\நற்றிணை தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கியத் தொகுப்பின் முதல் நூல். 175 புலவர்களால் பாடப்பட்ட 400 பாடல்கள் கொண்ட அகத்திணை நூல்.
பதிப்பு, வெளியீடு
நற்றிணையை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்.
தொகுப்பு
நற்றிணை தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது.நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234-ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று.56 பாடல்களை எழுதியவர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.
பாடியோர்
நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 175 புலவர்கள் பாடியுள்ளனர். 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை.
|
|
பாடலில் இடம்பெற்ற தொடரால் பெயர் அமைந்த புலவர்கள்
- வண்ணப்புறக் கந்தத்தனார்
- மலையனார்
- தனிமகனார்,
- விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்
- தும்பிசேர்க்கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் அமைப்பு
நற்றிணை கடவுள் வழ்த்துடன் சேர்த்து 7 முதல் 13 அடிகள் கொண்ட 401 ஆசிரியப்பாக்களால் ஆனது. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நானூறு பாடல்களில் 234-ஆம் பாடல் முழுமையாகவும், 385-ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.
பாடல்அடிகள் | பாடல்கள் | திணை | பாடல்கள் | |
---|---|---|---|---|
7 | 1 | குறிஞ்சித்திணை | 132 | |
8 | 1 | முல்லைத் திணை | 30 | |
9 | 106 | மருதத் திணை | 32 | |
10 | 96 | நெய்தல் திணை | 102 | |
11 | 110 | பாலைத் திணை | 104 | |
12 | 77 | |||
13 | 8 |
நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே.பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.
அரசர்களின் பெயர்கள்
அரசர்கள் | ||
---|---|---|
|
|
|
கொல்லிப்பாவை ( 185, 192, 201
சிறப்புகள்
நற்றிணைப் பாட்டுக்களைப் பாடிய புலவர்கள், கரதலரின் உடல்வனப்பை எடுத்துக் கூறுவதற் கரகதி் தம் புலமையைப் பயன்படுத்தவில்லை காதலரின் பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்துதலே 24 புலவர்களின் கோக்கம். அந்த உள்ளத்தின் இயல்பு புலப்படுவதற்கு, காத லரின் தோற்றம் எக்த அளவிற்கு இன் ஜியமை யாததோ ௮சக்த அளவிற்கே அவர்களின் உடல் . பந்றிய குறிப்புக்கள் உள்ளன. பாட்டுக்களைக் கற்பவர்க்கூக் காதலரின் மூகம் விளங்கத் தோன்றுவதைவிட, முகக் குறிப்பே மிகத் தெளி வாகத் தோன்றும். மற்றக் கலைகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு இது.
பாடல் நடை
உசாத்துணை
- நற்றிணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- நற்றிணை மூலமும் உரையும், வ.த. இராமசுப்பிரமணியம், திருமகள் நிலையம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.