under review

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Line 8: Line 8:
[[File:தொண்டைமான் குடும்பம்.png|thumb|தொண்டைமான் குடும்பம்]]

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் (ஜூலை 22, 1904 - ஏப்ரல் 31, 1965) எழுத்தாளர். பயணக் கட்டுரையாளர். பயணக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். மாவட்ட ஆட்சியர்.  கோயில் கலை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர். பேச்சாளர். டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுமத்தைச் சேர்ந்தவர்.

==பிறப்பு, கல்வி==
==பிறப்பு, கல்வி==
====== முன்னோர் ======
====== முன்னோர் ======
பல்லவ அரசகுடியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னும் பட்டப்பெயருக்குரியவர்கள் வரலாற்றில் உள்ளனர். அவர்களில் ஒருவர் சோழப்படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான். புதுக்கோட்டை அரசகுடி அவர்களின் மரபு எனப்படுகிறது. அவர்களில் ஒரு கிளை திருநெல்வேலியில் குடியேறியது. அவர்கள் குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் சைவ மடங்களின் கிளைகளை நிறுவினார்கள் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன.   

அந்த மரபில் வந்தவர் [[சிதம்பரத் தொண்டைமான்]]. அவர் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் மாணவர். தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். திருப்புகழ்சாமி என்னும் முருகதாச ஸ்வாமிகளின் மாணவர்.   

அவருடைய மகன் முத்தையா தொண்டைமான். [[முத்தையா தொண்டைமான்|முத்தையா தொண்டைமா]]னின் மகன் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.   

====== பிறப்பு ======
====== பிறப்பு ======
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஜூலை 22, 1904 அன்று திருநெல்வேலியில் பிறந்தார். முத்தையா தொண்டைமானுக்கும் முத்தம்மாளுக்கும் முதல் மகனாகப்பிறந்தார். பாஸ்கரத் தொண்டைமானுடன் பிறந்தவர்கள் ஐவர். எழுத்தாளர் [[தொ.மு.சி. ரகுநாதன்]] இவரின் இளைய சகோதரர்.   

====== கல்வி ======
====== கல்வி ======
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் திருநெல்வேலியில் தொடக்க கல்வி கற்றார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலைப் (B.A) பட்டம் பெற்றார். இந்துக்கல்லூரித் தமிழாசிரியர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் தொண்டைமானின் தமிழறிவை வளர்த்தவர்.   

==தனிவாழ்க்கை ==
==தனிவாழ்க்கை ==
கல்லூரி காலத்தில் தன் முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். ராஜேஸ்வரி, சரோஜினி, கருணாகரன், இந்திராணி.  இருவர் இளமையிலேயே மறைந்தனர்.  

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் பட்டப்படிப்பை முடித்தவுடன் வனத்துறையில் (Forest Department) சேர்ந்தார். பின் வருவாய் துறையில் (Revenue Department) ஆய்வாளராக இருந்தார். அதிலிருந்து தாசில்தார், மாவட்ட உதவி ஆட்சியர் ஆகிய பதவிகளில் இருந்தார். இந்திய அரசு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானை மாவட்ட ஆட்சித் தலைவராக (Conferred I.A.S) ஆக்கி வேலூர் மாவட்டத்திற்கு கலெக்டராக நியமித்தது. 1959-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் கலைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களில் [[ஆனந்தபோதினி]] பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் பணிப்புரிந்த சுப்பிரமணியக் கவிராயரும், [[ரா.பி. சேதுப்பிள்ளை]]யும் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானுக்கு தமிழில் ஆர்வத்தை முதலில் வளர்த்தவர்கள்.   

பாஸ்கரத் தொண்டைமான் பின்னர் [[டி.கே.சிதம்பரநாத முதலியார்|டி.கே.சிதம்பரநாத முதலியா]]ரின் '[[வட்டத்தொட்டி]]' நட்புவட்டத்தில் இணைந்தார். வட்டத்தொட்டியில் கம்பன் அடிப்பொடி [[சா. கணேசன்]], [[வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்]], நாமக்கல் கவிஞர் [[வெ. இராமலிங்கம் பிள்ளை]], கவிமணி [[தேசிகவினாயகம் பிள்ளை|தேசிக விநாயகம் பிள்ளை]], ராஜாஜி, [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] ரா. கிருஷ்ண மூர்த்தி ஆகிய தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்றவர்கள். வட்டத்தொட்டியில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானும் முக்கியமானவராக இருந்தார்.  

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வேண்டுகோளின் படி பாஸ்கரத் தொண்டைமான் [[கல்கி (வார இதழ்)|கல்கி]] இதழில் வேங்கடம் முதல் குமரி வரை என்ற கோயில் பயணக்கட்டுரைத் தொடரை எழுதினார். அவை பாலாற்றின் மருங்கிலே (1960), பொன்னியின் மடியிலே (1961) காவெரிக் கரையிலே (1961) பொருநைத் துறையிலே (1961) என்று தனித்தனி துணைத் தலைப்புடன் வெளிவந்தன. தினமணிகதிர் முதலிய பத்திரிக்கைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.     

====== ஆலய அறிமுகம் ======
====== ஆலய அறிமுகம் ======
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் முதன்மைப் பங்களிப்பு என்பது தமிழில் ஆலயங்களை கலை, கலாச்சார மையங்களாகப் பார்க்கும் நவீனப்பார்வையை அறிமுகம் செய்தார் என்பதே. தீர்த்தமாடுதல், புனித பயணம் என்னும் வகையிலேயே அதுவரை ஆலயப்பயணங்கள் அணுகப்பட்டன. ஆலயக்கட்டுமானம், ஆலயங்களின் தொன்மம், ஆலயச்சிற்பங்கள், ஆலயத்தைச் சார்ந்த வரலாறு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பாஸ்கரத் தொண்டைமானின் கட்டுரைகள் புதிய வாசகர்களை உருவாக்கின. அவருக்குப் பின்னரும்கூட அந்தக்கோணத்தில் எழுதியவர்கள் குறைவே. பாஸ்கரத் தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை தமிழக ஆலயங்கள் பற்றிய ஒரு முதன்மையான நூல்தொகை.  

====== கம்பராமாயணம் ======
====== கம்பராமாயணம் ======
டி.கெ.சிதம்பரநாத முதலியாரிடமிருந்து கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரத் தொண்டைமான் டி.கெ.சியின் ரசனை மரபில் கம்பனைப்பற்றி எழுதினார். சா.கணேசனின் கம்பன் கழகப் பணிகளிலும் ஈடுபட்டார்.கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட கடவுள் ஆகிய நூல்களும் எழுதியிருக்கிறார்.  

==அமைப்புப் பணிகள்==
==அமைப்புப் பணிகள்==
[[File:பாஸ்கரத் தொண்டைமான் 2.jpg|thumb|தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், (நன்றி: கள்ளர் குல வரலாறு இணையதளம்)]]

=====கோயில் மீட்பு=====
=====கோயில் மீட்பு=====
தஞ்சையில் பணியாற்றிய போது கோயில்களில் பராமரிப்பின்றி கிடக்கும் சிற்பங்கள், செப்புத் திருமேனிகளை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மஹாலில் கலைக் கூடம் அமைத்துள்ளார். கலை அழகு கெடாமல் கோயில் திருப்பணி செய்ய உதவியுள்ளார். கோயிலுக்கு சொந்தமான மூர்த்திகள் வேறெங்காவது இருந்தால் அதை மீட்டு உரிய கோயில்களில் சேர்த்துள்ளார்.

=====கம்பன்கழகம்=====
=====கம்பன்கழகம்=====
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் சிறந்த பேச்சாளர். கம்பன் கழக அமைப்புப்பணிகளில் பங்களிப்பாற்றியவர்.

==மறைவு==
==மறைவு==
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஏப்ரல் 31, 1965 அன்று மரணமடைந்தார்.

==விருதுகள்==
==விருதுகள்==
காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி 1964ல் தொண்டைமானுக்கு கலாமணி என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது

''“கலாமணி தொண்டைமான் ரீ பாஸ்கர சில்ப கல்பக''

''ஷஷ்டி பூர்த்யுத்லவே சர்வ மங்களா கருணாஸ்பதம்”''

என்னும் வாழ்த்துரையை எழுதி வழங்கினார்
என்னும் வாழ்த்துரையை எழுதி வழங்கினார்
== நினைவுகள் ==
== நினைவுகள் ==
* திருநெல்வேலி மாநகராட்சியில் 'பாஸ்கரத் தொண்டைமான்' என்று அவர் பெயரில் தெரு ஒன்று உள்ளது.

* தொ.மு பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள்  2009-ல் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டன

==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் முக்கிய பங்களிப்பு தமிழகத்திலும் வட இந்தியாவிலும் பயணம் செய்து, கோயில் பயணக் கட்டுரைகள் எழுதியது. கோயிலுக்கான வழிகாட்டி நூலாக அனைவரும் வாசிக்கும் படி எளிய அழகிய நடையில் எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் பயணக்கட்டுரைத்தன்மை கொண்டவை, எளிமையானவை. ஆனால் சிற்பங்களைப்பற்றியும் கோயில் பற்றியும் நுணுக்கமான ரசனை இவருக்குண்டு. வேங்கடம் முதல் குமரி வரை, மதுரை மீனாட்சி, கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் ஆகிய  நூல்கள் முக்கியமானவை.

தமிழகத்தில் கோயில்களை பண்பாட்டு நோக்குடன் அணுகும் பார்வையை உருவாக்கிய முன்னோடியாக தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் கருதப்படுகிறார்.

==நூல்கள் ==
==நூல்கள் ==
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள்
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள்
====== பயணக்கட்டுரை ======
====== பயணக்கட்டுரை ======
* வேங்கடம் முதல் குமரி வரை, 1960
* வேங்கடம் முதல் குமரி வரை, 1960
* வேங்கடத்துக்கு அப்பால்
* வேங்கடத்துக்கு அப்பால்
*
*
====== வாழ்க்கை வரலாறு ======
====== வாழ்க்கை வரலாறு ======
* ரசிகமணி டி.கே.சி
* ரசிகமணி டி.கே.சி
* தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்

====== தொகுப்பு ======
====== தொகுப்பு ======
* ரசிகமணி டி.கெ.சி.கடிதங்கள்
* ரசிகமணி டி.கெ.சி.கடிதங்கள்
====== ஆலயக்கலை ======
====== ஆலயக்கலை ======
* கல்லும் சொல்லாதோ கவி
* கல்லும் சொல்லாதோ கவி
Line 99: Line 69:
* அமரகாதலர்
* அமரகாதலர்
* மதுரை மீனாட்சி
* மதுரை மீனாட்சி
====== கம்பராமாயணம் ======
====== கம்பராமாயணம் ======
* கம்பன் கண்ட இராமன்
* கம்பன் கண்ட இராமன்
* பாதுகா பட்டாபிஷேகம்
* பாதுகா பட்டாபிஷேகம்
* கம்பன் சுயசரிதம்  
* கம்பன் சுயசரிதம்  
====== கவிதை ======
====== கவிதை ======
* மாயமான்
* மாயமான்
* தென்றல் தந்த கவிதை
* தென்றல் தந்த கவிதை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://kallarkulavaralaru.blogspot.com/2018/10/blog-post.html புகைப்படங்கள் நன்றி கள்ளர் வரலாறு இணையப்பக்கம்]

Revision as of 14:45, 3 July 2023

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
மனைவி பாலம்மாள்
பாஸ்கரத் தொண்டைமான், சென்னை கவர்னர் பிரகாசம்
பாஸ்கரத் தொண்டைமான் அறுபது
பாஸ்கரத் தொண்டைமான் மனைவியுடன்
பாஸ்கரத்தொண்டைமான், டி.கெ.சியுடன்
பாஸ்கரத்தொண்டைமான் ராஜாஜியுடன்
தொண்டைமான் குடும்பம்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் (ஜூலை 22, 1904 - ஏப்ரல் 31, 1965) எழுத்தாளர். பயணக் கட்டுரையாளர். பயணக் கட்டுரைகள் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். மாவட்ட ஆட்சியர். கோயில் கலை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டவர். பேச்சாளர். டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுமத்தைச் சேர்ந்தவர்.

பிறப்பு, கல்வி

முன்னோர்

பல்லவ அரசகுடியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னும் பட்டப்பெயருக்குரியவர்கள் வரலாற்றில் உள்ளனர். அவர்களில் ஒருவர் சோழப்படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான். புதுக்கோட்டை அரசகுடி அவர்களின் மரபு எனப்படுகிறது. அவர்களில் ஒரு கிளை திருநெல்வேலியில் குடியேறியது. அவர்கள் குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் சைவ மடங்களின் கிளைகளை நிறுவினார்கள் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன. அந்த மரபில் வந்தவர் சிதம்பரத் தொண்டைமான். அவர் வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் மாணவர். தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். திருப்புகழ்சாமி என்னும் முருகதாச ஸ்வாமிகளின் மாணவர். அவருடைய மகன் முத்தையா தொண்டைமான். முத்தையா தொண்டைமானின் மகன் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

பிறப்பு

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஜூலை 22, 1904 அன்று திருநெல்வேலியில் பிறந்தார். முத்தையா தொண்டைமானுக்கும் முத்தம்மாளுக்கும் முதல் மகனாகப்பிறந்தார். பாஸ்கரத் தொண்டைமானுடன் பிறந்தவர்கள் ஐவர். எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவரின் இளைய சகோதரர்.

கல்வி

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் திருநெல்வேலியில் தொடக்க கல்வி கற்றார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளங்கலைப் (B.A) பட்டம் பெற்றார். இந்துக்கல்லூரித் தமிழாசிரியர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர் தொண்டைமானின் தமிழறிவை வளர்த்தவர்.

தனிவாழ்க்கை

கல்லூரி காலத்தில் தன் முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரை மணந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். ராஜேஸ்வரி, சரோஜினி, கருணாகரன், இந்திராணி. இருவர் இளமையிலேயே மறைந்தனர். தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் பட்டப்படிப்பை முடித்தவுடன் வனத்துறையில் (Forest Department) சேர்ந்தார். பின் வருவாய் துறையில் (Revenue Department) ஆய்வாளராக இருந்தார். அதிலிருந்து தாசில்தார், மாவட்ட உதவி ஆட்சியர் ஆகிய பதவிகளில் இருந்தார். இந்திய அரசு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானை மாவட்ட ஆட்சித் தலைவராக (Conferred I.A.S) ஆக்கி வேலூர் மாவட்டத்திற்கு கலெக்டராக நியமித்தது. 1959-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் கலைக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி நாட்களில் ஆனந்தபோதினி பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் பணிப்புரிந்த சுப்பிரமணியக் கவிராயரும், ரா.பி. சேதுப்பிள்ளையும் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானுக்கு தமிழில் ஆர்வத்தை முதலில் வளர்த்தவர்கள். பாஸ்கரத் தொண்டைமான் பின்னர் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் 'வட்டத்தொட்டி' நட்புவட்டத்தில் இணைந்தார். வட்டத்தொட்டியில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன், வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராஜாஜி, கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி ஆகிய தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்றவர்கள். வட்டத்தொட்டியில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானும் முக்கியமானவராக இருந்தார். கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வேண்டுகோளின் படி பாஸ்கரத் தொண்டைமான் கல்கி இதழில் வேங்கடம் முதல் குமரி வரை என்ற கோயில் பயணக்கட்டுரைத் தொடரை எழுதினார். அவை பாலாற்றின் மருங்கிலே (1960), பொன்னியின் மடியிலே (1961) காவெரிக் கரையிலே (1961) பொருநைத் துறையிலே (1961) என்று தனித்தனி துணைத் தலைப்புடன் வெளிவந்தன. தினமணிகதிர் முதலிய பத்திரிக்கைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஆலய அறிமுகம்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் முதன்மைப் பங்களிப்பு என்பது தமிழில் ஆலயங்களை கலை, கலாச்சார மையங்களாகப் பார்க்கும் நவீனப்பார்வையை அறிமுகம் செய்தார் என்பதே. தீர்த்தமாடுதல், புனித பயணம் என்னும் வகையிலேயே அதுவரை ஆலயப்பயணங்கள் அணுகப்பட்டன. ஆலயக்கட்டுமானம், ஆலயங்களின் தொன்மம், ஆலயச்சிற்பங்கள், ஆலயத்தைச் சார்ந்த வரலாறு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பாஸ்கரத் தொண்டைமானின் கட்டுரைகள் புதிய வாசகர்களை உருவாக்கின. அவருக்குப் பின்னரும்கூட அந்தக்கோணத்தில் எழுதியவர்கள் குறைவே. பாஸ்கரத் தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை தமிழக ஆலயங்கள் பற்றிய ஒரு முதன்மையான நூல்தொகை.

கம்பராமாயணம்

டி.கெ.சிதம்பரநாத முதலியாரிடமிருந்து கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரத் தொண்டைமான் டி.கெ.சியின் ரசனை மரபில் கம்பனைப்பற்றி எழுதினார். சா.கணேசனின் கம்பன் கழகப் பணிகளிலும் ஈடுபட்டார்.கம்பன் சுயசரிதம், கம்பன் கண்ட கடவுள் ஆகிய நூல்களும் எழுதியிருக்கிறார்.

அமைப்புப் பணிகள்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், (நன்றி: கள்ளர் குல வரலாறு இணையதளம்)
கோயில் மீட்பு

தஞ்சையில் பணியாற்றிய போது கோயில்களில் பராமரிப்பின்றி கிடக்கும் சிற்பங்கள், செப்புத் திருமேனிகளை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மஹாலில் கலைக் கூடம் அமைத்துள்ளார். கலை அழகு கெடாமல் கோயில் திருப்பணி செய்ய உதவியுள்ளார். கோயிலுக்கு சொந்தமான மூர்த்திகள் வேறெங்காவது இருந்தால் அதை மீட்டு உரிய கோயில்களில் சேர்த்துள்ளார்.

கம்பன்கழகம்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் சிறந்த பேச்சாளர். கம்பன் கழக அமைப்புப்பணிகளில் பங்களிப்பாற்றியவர்.

மறைவு

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஏப்ரல் 31, 1965 அன்று மரணமடைந்தார்.

விருதுகள்

காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி 1964ல் தொண்டைமானுக்கு கலாமணி என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது “கலாமணி தொண்டைமான் ரீ பாஸ்கர சில்ப கல்பக ஷஷ்டி பூர்த்யுத்லவே சர்வ மங்களா கருணாஸ்பதம்” என்னும் வாழ்த்துரையை எழுதி வழங்கினார்

நினைவுகள்

  • திருநெல்வேலி மாநகராட்சியில் 'பாஸ்கரத் தொண்டைமான்' என்று அவர் பெயரில் தெரு ஒன்று உள்ளது.
  • தொ.மு பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள் 2009-ல் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டன

இலக்கிய இடம்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் முக்கிய பங்களிப்பு தமிழகத்திலும் வட இந்தியாவிலும் பயணம் செய்து, கோயில் பயணக் கட்டுரைகள் எழுதியது. கோயிலுக்கான வழிகாட்டி நூலாக அனைவரும் வாசிக்கும் படி எளிய அழகிய நடையில் எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் பயணக்கட்டுரைத்தன்மை கொண்டவை, எளிமையானவை. ஆனால் சிற்பங்களைப்பற்றியும் கோயில் பற்றியும் நுணுக்கமான ரசனை இவருக்குண்டு. வேங்கடம் முதல் குமரி வரை, மதுரை மீனாட்சி, கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, இந்தியக் கலைச் செல்வம், தமிழர் கோயில்களும் பண்பாடும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. தமிழகத்தில் கோயில்களை பண்பாட்டு நோக்குடன் அணுகும் பார்வையை உருவாக்கிய முன்னோடியாக தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் கருதப்படுகிறார்.

நூல்கள்

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் நூல்கள்

பயணக்கட்டுரை
  • வேங்கடம் முதல் குமரி வரை, 1960
  • வேங்கடத்துக்கு அப்பால்
வாழ்க்கை வரலாறு
  • ரசிகமணி டி.கே.சி
  • தமிழறிஞர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
தொகுப்பு
  • ரசிகமணி டி.கெ.சி.கடிதங்கள்
ஆலயக்கலை
  • கல்லும் சொல்லாதோ கவி
  • பிள்ளையார்பட்டி பிள்ளையார்
  • ஆறுமுகமான பொருள்
  • தமிழர் கோயில்களும் பண்பாடும்
  • கலைஞன் கண்ட கடவுள்
  • ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
  • இந்தியக் கலைச் செல்வம்
  • தமிழ் கோயில்களும் தமிழர் பண்பாடும்
  • அமரகாதலர்
  • மதுரை மீனாட்சி
கம்பராமாயணம்
  • கம்பன் கண்ட இராமன்
  • பாதுகா பட்டாபிஷேகம்
  • கம்பன் சுயசரிதம்
கவிதை
  • மாயமான்
  • தென்றல் தந்த கவிதை

உசாத்துணை

✅Finalised Page