எயிற்றியனார் (சங்ககாலப் புலவர்): Difference between revisions
(Removed non-breaking space character) |
|||
Line 17: | Line 17: | ||
== பாடல் நடை == | == பாடல் நடை == | ||
===== குறுந்தொகை 286 ===== | ===== குறுந்தொகை 286 ===== | ||
<poem> | |||
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் | உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற் | ||
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில் | றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில் | ||
ஆர நாறும் அறல்போற் கூந்தல் | ஆர நாறும் அறல்போற் கூந்தல் | ||
பேரமர் மழைக்கட் கொடிச்சி | பேரமர் மழைக்கட் கொடிச்சி | ||
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே | மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே | ||
</poem> | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == |
Revision as of 12:48, 3 February 2023
எயிற்றியனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
எயிற்றியனார் என்னும் பெயர் காரணப்பெயராக இருக்கலாம். இவர் தனது பாடலில் "முன் எயிற்று அமிழ்தம் ஊறும் அம் செவ்வாய்" என தலைவியின் பற்களை சிறப்பித்துப் பாடியுள்ளதால் எயிற்றியனார் என்னும் பெயரை குறுந்தொகையை தொகுத்த இவருக்கு சூட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
எயிற்றியனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 286- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. பிரிந்திருக்கும் தலைவியை மனதில் எண்ணி அவளின் அழகை தலைவன் பாராட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 286
- குறிஞ்சித் திணை
- தலைவன் தலைவிக்கும் தனக்கும் முன்னுள்ள பழக்கத்தைக் குறிப்பாக அறிவித்தது.
- கூர்மையான பல், அமிழ்தம் ஊறும் சிவந்த வாய், அகில் சந்தனம் புகையூட்டிக் கமழும் கூந்தல், என்னை எதிர்த்துப் போரிடும் ஈரமுள்ள கண்கள் புன்னகை மதமதப்பான பார்வை
- இவற்றைக் கொண்ட கொடிச்சியான அவள், என் நினைவை விட்டு அகலாமல் இருக்கிறாள்.
பாடல் நடை
குறுந்தொகை 286
உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே
உசாத்துணை
குறுந்தொகை 286, தமிழ்த் துளி இணையதளம்
குறுந்தொகை 286, தமிழ் சுரங்கம் இணையதளம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.