under review

காவேரி (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Removed non-breaking space character)
Line 1: Line 1:
[[File:Kaveri Magazine.jpg|thumb|காவேரி - பல்சுவை இலக்கிய இதழ்]]

காவேரி (1940 -1950) தமிழ் பல்சுவை இதழ். கும்பகோணத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். என்.ஆர். ராமானுஜன் காவேரி இதழின்  வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.

== பதிப்பு, வெளியீடு ==
== பதிப்பு, வெளியீடு ==
காவேரி கும்பகோணத்திலிருந்து 1940-ல் தொடங்கி சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் வெளிவந்தது. இந்த இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என். ஆர். ராமானுஜன். இவருக்குச் சொந்தமான 'காவேரி’ அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. தனிப்பிரதி ஒன்றின் விலை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் எட்டணா. மலேசியா போன்ற வெளிநாடுகளில் 10 அணா. வருடச் சந்தா இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு ஆறு ரூபாய். மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏழு ரூபாய் 8 அணா. அரை வருடச் சந்தாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Revision as of 14:49, 31 December 2022

காவேரி - பல்சுவை இலக்கிய இதழ்

காவேரி (1940 -1950) தமிழ் பல்சுவை இதழ். கும்பகோணத்திலிருந்து வெளியான இலக்கிய இதழ். என்.ஆர். ராமானுஜன் காவேரி இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.

பதிப்பு, வெளியீடு

காவேரி கும்பகோணத்திலிருந்து 1940-ல் தொடங்கி சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் வெளிவந்தது. இந்த இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் என். ஆர். ராமானுஜன். இவருக்குச் சொந்தமான 'காவேரி’ அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. தனிப்பிரதி ஒன்றின் விலை இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் எட்டணா. மலேசியா போன்ற வெளிநாடுகளில் 10 அணா. வருடச் சந்தா இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளுக்கு ஆறு ரூபாய். மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏழு ரூபாய் 8 அணா. அரை வருடச் சந்தாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உள்ளடக்கம்

இதழின் முகப்பில், 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்னும் பாரதியின் பாடல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இதழிலும் ஆசிரியரின் தலையங்கம் இடம் பெற்றுள்ளது. கதை, கவிதை, கட்டுரை, தொடர்கதை போன்ற படைப்புகள் காவேரி இதழில் இடம்பெற்றன. ஓரங்க நாடகங்கள், மொழிபெயர்ப்புக் கதைகள், ஆசிரியர் உரைகள் ஆகியனவும் இதழில் வெளியாகின. மருத்துவம் சார்ந்த கட்டுரைகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. திரைப்படங்கள், புத்தகங்கள், பொது விளம்பரங்களும் இவ்விதழில் அதிகம் வெளியாகியுள்ளன. புத்தக விமர்சனங்களும் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன.

வேஙகடலட்சுமி சிறுகதை : காவேரி இதழ்த் தொகுப்பு

பங்களிப்பாளர்கள்

- போன்ற எழுத்தாளர்கள் இவ்விதழில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

ஆவணம்

காவேரி இதழில் வெளியான சில படைப்புகள் தொகுக்கப்பட்டு ‘காவேரி இதழ் தொகுப்பு' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • காவேரி இதழ்த் தொகுப்பு 1&2, கலைஞன் பதிப்பகம்

✅Finalised Page