பிரபஞ்சன்: Difference between revisions
No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
[[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]] | [[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]] | ||
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் | பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கியவிமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர். | ||
== | == பிறப்பு, கல்வி == | ||
பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். | |||
== தனி வாழ்க்கை == | |||
[[File:Prabanjan_2.jpeg|thumb|பிரபஞ்சன்]] பிரபஞ்சனின் மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் . சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து சென்னைக்கு வந்தார். எழுதி வாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது. குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார். மனைவி மறைவுக்குப்பின் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு பவா செல்லத்துரை - டிஸ்கவரி புக்ஸ் வேடியப்பன் ஆகியோர் நிதிதிரட்டி உதவினார்கள். இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர்[[பி.என்.எஸ்.பாண்டியன்]] அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். | |||
== இதழியல் == | |||
பிரபஞ்சன் 1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். | |||
== | == அரசியல் == | ||
பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். | |||
== | == இலக்கிய வாழ்க்கை == | ||
புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். [[வானம்பாடி கவிதை இயக்கம்]] மேல் ஈடுபாடுகொண்டார், [[வானம்பாடி]] இதழில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான [[வெளிச்சங்கள்]] தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது.ர் | |||
பதினாறு வயது முதல் பிரபஞ்சன் எழுதிக்கொண்டிருந்தார். அவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’ இடதுசாரி இதழான ‘பரணி’ யில் 1961ல் வெளியானது. பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். | |||
1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. | 1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. | ||
Line 105: | Line 100: | ||
== மறைவு == | == மறைவு == | ||
டிசம்பர் 21, | டிசம்பர் 21, 2018 ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 114: | Line 109: | ||
* [https://vallinam.com.my/version2/?p=5854 ம. நவீன் - வல்லினம் கட்டுரை] | * [https://vallinam.com.my/version2/?p=5854 ம. நவீன் - வல்லினம் கட்டுரை] | ||
*https://www.hindutamil.in/news/literature/519926-writer-prabanjan-2.html | |||
*[https://www.dinamani.com/specials/nool-aragam/2022/feb/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3799707.html பிரபஞ்சன் சில நினைவுகள்] | |||
*https://freetamilebooks.com/prapanchan-55/ | |||
Revision as of 20:48, 8 March 2022
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கியவிமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.
பிறப்பு, கல்வி
பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பிரபஞ்சனின் மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் . சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து சென்னைக்கு வந்தார். எழுதி வாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது. குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார். மனைவி மறைவுக்குப்பின் சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு பவா செல்லத்துரை - டிஸ்கவரி புக்ஸ் வேடியப்பன் ஆகியோர் நிதிதிரட்டி உதவினார்கள். இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர்பி.என்.எஸ்.பாண்டியன் அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார்.
இதழியல்
பிரபஞ்சன் 1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.
அரசியல்
பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். வானம்பாடி கவிதை இயக்கம் மேல் ஈடுபாடுகொண்டார், வானம்பாடி இதழில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான வெளிச்சங்கள் தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது.ர்
பதினாறு வயது முதல் பிரபஞ்சன் எழுதிக்கொண்டிருந்தார். அவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’ இடதுசாரி இதழான ‘பரணி’ யில் 1961ல் வெளியானது. பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார்.
1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
அக்காலத்திய நாவல்களில் ராஜாக்கள் நாயகர்களாக இருந்த காலகட்டத்தில், பிரெஞ்சுப் பகுதியை மையப்படுத்திய இவரின் `மானுடம் வெல்லும்', `வானம் வசப்படும்' புதினங்கள் முக்கியமானதாகும். ‘மானுடம் வெல்லும்’ நாவலின் இரண்டாம் பகுதி ‘வானம் வசப்படும்’.
கற்பனையற்ற [கட்டமைப்பையும், தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் ‘மானுடம் வெல்லும்’ தமிழில் முதல் படைப்பு.
இன்னொரு வகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் மறு ஆக்கம் மானுடம் வெல்லும்.
இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் ஸ்வீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.
இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் விளக்கியிருப்பார்.
மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி ‘கதை மழை’ எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ புதிய வாசகர்களை உருவாக்கியது.
46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை.
படைப்புகள்
நாவல்கள்
- வானம் வசப்படும்
- மகாநதி
- மானுடம் வெல்லும்
- சந்தியா
- காகித மனிதர்கள்
- கண்ணீரால் காப்போம்
- பெண்மை வெல்க
- பதவி
- ஈரோடு தமிழர் உயிரோடு
- அப்பாவின் வேஷ்டி
- முதல் மழை துளி
- மகாபாரத மாந்தர்கள்
சிறுகதை தொகுப்புகள்
- நேற்று மனிதர்கள்
- விட்டு விடுதலையாகி
- இருட்டு வாசல்
- ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
குறுநாவல்கள்
- ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
- முட்டை
- அகல்யா
மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
- மயிலிறகு குட்டி போட்டது
- அப்பாவின் வேஷ்டி
- தாழப் பறக்காத பரத்தையர் கொடி
நேர்காணல்கள்
விருதுகளும் பரிசுகளும்
- சாகித்திய அகாதமி விருது (1995)
- சாரல் விருது (2013)
- பாரதிய பாஷா பரிஷத் விருது
- கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
- இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
- சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
- தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
- தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
இலக்கிய முக்கியத்துவம்
பிரபஞ்சன் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்களும் ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப் பங்களிப்புகள்.
மறைவு
டிசம்பர் 21, 2018 ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.