பிரம்ம சூத்திரம்: Difference between revisions
Moved to Final |
Corrected typo errors; Corrected year suffix text; ; Added info on Finalised date |
||
| Line 1: | Line 1: | ||
பிரம்ம சூத்திரம் (பொ.ம் | பிரம்ம சூத்திரம் (பொ.ம் 5-ம் நூற்றாண்டு) (ப்ரஹ்மசூத்ரம், ப்ருஹ்மஸூத்ரம், பிரம்மசூத்ரம்) இந்திய தத்துவ நூல். இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான உத்தர மீமாம்சத்தின் முதன்மையான தத்துவ நூல். பாதராயணர் இதன் ஆசிரியர். உத்தரமீமாம்சை பின்னர் வேதாந்தம் என பெயர் பெற்றது. வேதாந்தத்தின் பிற்கால ஆசிரியர்களால் விரிவாக உரை எழுதப்பட்ட நூல் இது. வேதாந்தத்தின் மையக் கொள்கையான பிரம்மம் என்னும் கருத்துருவை வகுத்துரைப்பதனால் பிரம்ம சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. வேதாந்த சூத்திரம் என்றும் பாதராயண சூத்திரம் என்றும் கூறப்படுவதுண்டு. | ||
== காலம் == | == காலம் == | ||
பிரம்மசூத்திரத்தின் காலம் பற்றிய பலவகையான விவாதங்கள் உள்ளன. பிரம்மசூத்ரம் சாங்கிய தரிசனம் முதல் சமணம் வரையிலான பல தரப்புகளை மறுப்பதனால் அது பொமு | பிரம்மசூத்திரத்தின் காலம் பற்றிய பலவகையான விவாதங்கள் உள்ளன. பிரம்மசூத்ரம் சாங்கிய தரிசனம் முதல் சமணம் வரையிலான பல தரப்புகளை மறுப்பதனால் அது பொமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளார் சிலர் சொல்கிறார்கள். | ||
பகவத்கீதையில் பிரம்மசூத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகவே பகவத்கீதையின் காலகட்டத்திற்கு முந்தையது பிரம்மசூத்திரம் என்று வகுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆறுதரிசனங்களுக்கும் உரிய முதன்மை இலக்கண நூல்கள் உருவான பொமு | பகவத்கீதையில் பிரம்மசூத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகவே பகவத்கீதையின் காலகட்டத்திற்கு முந்தையது பிரம்மசூத்திரம் என்று வகுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆறுதரிசனங்களுக்கும் உரிய முதன்மை இலக்கண நூல்கள் உருவான பொமு 3-ம் நூற்றாண்டு முதல் பொமு 5-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இந்நூலை ஆய்வாளர் மதிப்பிடுகிறார்கள். | ||
இந்நூல் பொமு | இந்நூல் பொமு 5-ம் நூற்றாண்டு வாக்கில் உருவாகி தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம் என்றும் பொயு 4-5-ம் நூற்றாண்டில், குப்தர் காலகட்டத்தில் இந்நூலின் இன்றைய வடிவம் முழுமையடைந்திருக்கலாம் என்றும் பொதுவாக ஊகிக்கப்படுகிறது. | ||
== நூல்வடிவம் == | == நூல்வடிவம் == | ||
| Line 18: | Line 18: | ||
== பெயர்கள் == | == பெயர்கள் == | ||
இந்நூல் துறவை இறுதி வழியாகச் சொல்வதனால் | இந்நூல் துறவை இறுதி வழியாகச் சொல்வதனால் பிக்ஷு சூத்திரம் என்றும், உடலுக்குள் உள்ள ஆத்மாவை பேசுபொருளாகக் கொண்டமையால் சாரீரக சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதராயண சூத்ரம் என்றும், வேதாந்த சூத்ரம் என்றும் பிற பெயர்கள் உண்டு. | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
| Line 69: | Line 69: | ||
* எதிலிருந்து தோன்றுகிறதோ அது (ஜன்மாதி அஸ்ய யத: ) அனைத்தும் எதிலிருந்து தோன்றுகிறதோ அதுவே பிரம்மம் (அத்தியாயம் 1 பாதம் 1-2) | * எதிலிருந்து தோன்றுகிறதோ அது (ஜன்மாதி அஸ்ய யத: ) அனைத்தும் எதிலிருந்து தோன்றுகிறதோ அதுவே பிரம்மம் (அத்தியாயம் 1 பாதம் 1-2) | ||
* ஆனால் அது ஒருமையாலானது (தத்து சமன்வயாத்) (அத் 1 பாதம் 1-4) | * ஆனால் அது ஒருமையாலானது (தத்து சமன்வயாத்) (அத் 1 பாதம் 1-4) | ||
* தன்னை நிலைநிறுத்தியவனுக்கு வீடுபேறு சொல்லப்பட்டுள்ளது (தன்னிஷ்டஸ்ய | * தன்னை நிலைநிறுத்தியவனுக்கு வீடுபேறு சொல்லப்பட்டுள்ளது (தன்னிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத்) (அத் 1 பாதம் 1-7) | ||
* அசைவன அசைவற்றனவற்றை உண்பது (அத்தா சராசரக்ரஹணாத்). பிரம்மம் அசைவன அசைவற்றவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டது (அத் 1 பாதம் 2-9) | * அசைவன அசைவற்றனவற்றை உண்பது (அத்தா சராசரக்ரஹணாத்). பிரம்மம் அசைவன அசைவற்றவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டது (அத் 1 பாதம் 2-9) | ||
* இல்லையென்றாக வாய்ப்பற்றமையால் பிற ஏதும் அல்ல அது (அனவஸ்திதேர் அசம்பவாச்ச நே இதர). (அத் 1 பாதம் 2 -17) | * இல்லையென்றாக வாய்ப்பற்றமையால் பிற ஏதும் அல்ல அது (அனவஸ்திதேர் அசம்பவாச்ச நே இதர). (அத் 1 பாதம் 2 -17) | ||
| Line 84: | Line 84: | ||
* தச்சன் இருநிலையில் இருப்பது போல. (யதா ச தட்சா உபயதா:) தச்சன் பொருளைப் படைப்பவனாகவும் படைக்காத சாமானியனாகவும் இருக்கிறான். படைக்கையிலேயே அவன் தச்சன். அதுபோல புலன்களுடன் இணைந்து உலகை உருவாக்கிக்கொள்ளும் ஆத்மா அவ்வாறல்லாத நிலையிலும் இருக்கிறது. (அத் 2 பாதம் 3-40) | * தச்சன் இருநிலையில் இருப்பது போல. (யதா ச தட்சா உபயதா:) தச்சன் பொருளைப் படைப்பவனாகவும் படைக்காத சாமானியனாகவும் இருக்கிறான். படைக்கையிலேயே அவன் தச்சன். அதுபோல புலன்களுடன் இணைந்து உலகை உருவாக்கிக்கொள்ளும் ஆத்மா அவ்வாறல்லாத நிலையிலும் இருக்கிறது. (அத் 2 பாதம் 3-40) | ||
*ஒளிக்கிரணங்கள் தடைபட்டால் உருவத்தை அடைவதுபோல பிரம்மம் உருவம்கொள்கிறது | *ஒளிக்கிரணங்கள் தடைபட்டால் உருவத்தை அடைவதுபோல பிரம்மம் உருவம்கொள்கிறது (பிரகாசவத் ச அவையர்த்யாத்: ). உடலில் தடைபட்ட பிரம்மமே ஆத்மா ( அத் 3 பாதம் 2-15) | ||
*பாம்பும் அதன் வளையங்களும் வேறுவேறாகத் தோன்றுவதுபோல பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறாகத் தோன்றுகின்றன (உபய வியபதேசாத் து அஹிகுண்டலவத்:). பிரம்மமும் ஆத்மாவும் இரண்டாகத் தெரிவதும் ஆகும் (அத் 3 பாதம் 2-27) | *பாம்பும் அதன் வளையங்களும் வேறுவேறாகத் தோன்றுவதுபோல பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறாகத் தோன்றுகின்றன (உபய வியபதேசாத் து அஹிகுண்டலவத்:). பிரம்மமும் ஆத்மாவும் இரண்டாகத் தெரிவதும் ஆகும் (அத் 3 பாதம் 2-27) | ||
*ஒளிக்கதிரால் அதைச்சூழ்ந்துள்ள ஒளிமண்டலம் ஒளிகொள்வதுபோல பிரம்மம் ஆத்மாவை ஒளிரவைக்கிறது (பிரகாச ஆச்ரவத் வா தேஜஸ்வாத்:) (அத் 3 பாதம் 2-28) | *ஒளிக்கதிரால் அதைச்சூழ்ந்துள்ள ஒளிமண்டலம் ஒளிகொள்வதுபோல பிரம்மம் ஆத்மாவை ஒளிரவைக்கிறது (பிரகாச ஆச்ரவத் வா தேஜஸ்வாத்:) (அத் 3 பாதம் 2-28) | ||
| Line 112: | Line 112: | ||
பிரம்மசூத்திரம் வேதாந்தத்தின் மூலநூலகக் கருதப்படுகிறது. ஆகவே பிறகு வந்த வேதாந்த துணைப்பிரிவுகள் அனைத்துக்குமே அதுதான் முதல்நூல். இதனால் அதிலுள்ள சூத்திரங்களை தங்கள் தேவைக்கேற்ப பொருள்கொண்டு உரைகளை எழுதியுள்ளனர். இவ்வாறு பொருள்கொள்வதில் கீழ்க்கண்ட முறைகளால் உரைவேறுபாடுகள் தோன்றின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். | பிரம்மசூத்திரம் வேதாந்தத்தின் மூலநூலகக் கருதப்படுகிறது. ஆகவே பிறகு வந்த வேதாந்த துணைப்பிரிவுகள் அனைத்துக்குமே அதுதான் முதல்நூல். இதனால் அதிலுள்ள சூத்திரங்களை தங்கள் தேவைக்கேற்ப பொருள்கொண்டு உரைகளை எழுதியுள்ளனர். இவ்வாறு பொருள்கொள்வதில் கீழ்க்கண்ட முறைகளால் உரைவேறுபாடுகள் தோன்றின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். | ||
* சூத்திரங்களிலுள்ள இணைப்புச் சொற்களை பொருள்கொள்வது. ஒரே சொல்லையே 'எனவே' என்றும், 'அவ்வாறன்றி' என்றும் பொருள்கொண்டு உரை எழுதியுள்ளனர். உதாரணமாக சூத்திரம் 2.3. | * சூத்திரங்களிலுள்ள இணைப்புச் சொற்களை பொருள்கொள்வது. ஒரே சொல்லையே 'எனவே' என்றும், 'அவ்வாறன்றி' என்றும் பொருள்கொண்டு உரை எழுதியுள்ளனர். உதாரணமாக சூத்திரம் 2.3.15-ல், அந்தரா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது, இது ’ஏனென்றால்’ என்றும் ‘அவ்வாறன்றி’ என்றும் பொருள்கொள்ளப்படுவதுண்டு. சங்கரர் ராமானுஜர் நிம்பார்க்கர் ஆகியோர் 'ஏனென்றால்' என பொருள்கொள்கையில் மத்வர் 'அவ்வாறன்றி' எனப் பொருள்கொள்கிறார். | ||
* முந்தைய சூத்திரத்துடனான இணைப்பை பொருள்கொள்வது. முந்தைய சூத்திரத்துக்கு நீட்சியாகவா அல்லது மறுப்பாகவா அடுத்த சூத்திரம் உள்ளது என்பதை எப்படி பொருள்கொள்கிறார்களோ அப்படி மொத்தப்பொருளும் மாறுபடுகிறது. உதாரணமாக, சங்கரர் சகுணபிரம்மம் பற்றிய ந ச கார்யே பிரதிபத்தி அபிசந்தி (4.3.14) என்ற சூத்திரத்தை பொருள்கொள்ளும்போது அதை மறுப்புக்குரியதாக பாதராயணர் சொல்வதாக பொருள்கொள்கிறார். ஆனால் பலர் அவ்வாறன்றி சகுணபிரம்மத்தையும் பாதராயணர் முன்வைப்பதாக சொல்லியுள்ளனர். சங்கரர் ஆத்மாவின் அளவு பற்றி பிரம்மசூத்திரம் சொல்வனவற்றை அது மறுப்புக்குரியதாக சொல்கிறது என்று எடுத்துக்கொள்கையில், ராமானுஜர் அது பிரம்மசூத்திரத்தின் தரப்பே என கொள்கிறார். | * முந்தைய சூத்திரத்துடனான இணைப்பை பொருள்கொள்வது. முந்தைய சூத்திரத்துக்கு நீட்சியாகவா அல்லது மறுப்பாகவா அடுத்த சூத்திரம் உள்ளது என்பதை எப்படி பொருள்கொள்கிறார்களோ அப்படி மொத்தப்பொருளும் மாறுபடுகிறது. உதாரணமாக, சங்கரர் சகுணபிரம்மம் பற்றிய ந ச கார்யே பிரதிபத்தி அபிசந்தி (4.3.14) என்ற சூத்திரத்தை பொருள்கொள்ளும்போது அதை மறுப்புக்குரியதாக பாதராயணர் சொல்வதாக பொருள்கொள்கிறார். ஆனால் பலர் அவ்வாறன்றி சகுணபிரம்மத்தையும் பாதராயணர் முன்வைப்பதாக சொல்லியுள்ளனர். சங்கரர் ஆத்மாவின் அளவு பற்றி பிரம்மசூத்திரம் சொல்வனவற்றை அது மறுப்புக்குரியதாக சொல்கிறது என்று எடுத்துக்கொள்கையில், ராமானுஜர் அது பிரம்மசூத்திரத்தின் தரப்பே என கொள்கிறார். | ||
| Line 145: | Line 145: | ||
*[https://www.wisdomlib.org/hinduism/book/brahma-sutras-nimbarka/d/doc376139.html Brahma Sutras (Nimbarka commentary)] | *[https://www.wisdomlib.org/hinduism/book/brahma-sutras-nimbarka/d/doc376139.html Brahma Sutras (Nimbarka commentary)] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|28-Mar-2025, 09:33:30 IST}} | |||
[[Category:இந்திய தத்துவ நூல்]] | [[Category:இந்திய தத்துவ நூல்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 01:04, 29 March 2025
பிரம்ம சூத்திரம் (பொ.ம் 5-ம் நூற்றாண்டு) (ப்ரஹ்மசூத்ரம், ப்ருஹ்மஸூத்ரம், பிரம்மசூத்ரம்) இந்திய தத்துவ நூல். இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான உத்தர மீமாம்சத்தின் முதன்மையான தத்துவ நூல். பாதராயணர் இதன் ஆசிரியர். உத்தரமீமாம்சை பின்னர் வேதாந்தம் என பெயர் பெற்றது. வேதாந்தத்தின் பிற்கால ஆசிரியர்களால் விரிவாக உரை எழுதப்பட்ட நூல் இது. வேதாந்தத்தின் மையக் கொள்கையான பிரம்மம் என்னும் கருத்துருவை வகுத்துரைப்பதனால் பிரம்ம சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. வேதாந்த சூத்திரம் என்றும் பாதராயண சூத்திரம் என்றும் கூறப்படுவதுண்டு.
காலம்
பிரம்மசூத்திரத்தின் காலம் பற்றிய பலவகையான விவாதங்கள் உள்ளன. பிரம்மசூத்ரம் சாங்கிய தரிசனம் முதல் சமணம் வரையிலான பல தரப்புகளை மறுப்பதனால் அது பொமு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளார் சிலர் சொல்கிறார்கள்.
பகவத்கீதையில் பிரம்மசூத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகவே பகவத்கீதையின் காலகட்டத்திற்கு முந்தையது பிரம்மசூத்திரம் என்று வகுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆறுதரிசனங்களுக்கும் உரிய முதன்மை இலக்கண நூல்கள் உருவான பொமு 3-ம் நூற்றாண்டு முதல் பொமு 5-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இந்நூலை ஆய்வாளர் மதிப்பிடுகிறார்கள்.
இந்நூல் பொமு 5-ம் நூற்றாண்டு வாக்கில் உருவாகி தொடர்ச்சியாக விரிவாக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கலாம் என்றும் பொயு 4-5-ம் நூற்றாண்டில், குப்தர் காலகட்டத்தில் இந்நூலின் இன்றைய வடிவம் முழுமையடைந்திருக்கலாம் என்றும் பொதுவாக ஊகிக்கப்படுகிறது.
நூல்வடிவம்
சங்கரர் உரையின் உரையின் அடிப்படையில் பிரம்மசூத்திரத்தில் 555 ஒற்றைவரிச் சூத்திரங்கள் உள்ளன. ராமானுஜர், மத்வர் முதலியோர் சில இடங்களில் இரண்டு சூத்திரங்களை ஒற்றைவரியாகச் சொல்வதனால் எண்ணிக்கை மாறுபாடு பல நூல்களில் உள்ளது.
இவை நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் உள்ள சூத்திரங்களின் பேசுபொருளை அடிப்படையாகக் கொண்டு அவை அதிகரணங்களாக பகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 192 அதிகரணங்கள் உள்ளன.
இந்நூலில் முதல் நான்கு சூத்ரங்களும் நான்கு அத்தியாயங்களின் பேசுபொருளைச் சொல்பவை என்றும் ஆகவே அவை மட்டும் நான்கு சூத்திர அமைப்பு என்னும் பொருளில் சதுர் சூத்ரி என அழைக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு சூத்திரமும் ஓர் அதிகரணமாக அமைந்துள்ளது.
சூத்திரம் என்றால் சுருக்கமான வரையறை என்று பொருள். ஓரிரு சொற்களில் கருத்தை வகுத்துரைக்கும் வடிவில் இந்நூல் அமைந்துள்ளது.
பெயர்கள்
இந்நூல் துறவை இறுதி வழியாகச் சொல்வதனால் பிக்ஷு சூத்திரம் என்றும், உடலுக்குள் உள்ள ஆத்மாவை பேசுபொருளாகக் கொண்டமையால் சாரீரக சூத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. பாதராயண சூத்ரம் என்றும், வேதாந்த சூத்ரம் என்றும் பிற பெயர்கள் உண்டு.
ஆசிரியர்
பிரம்மசூத்திரங்களை எழுதியவர் பாதராயணர் என்று கூறப்படுகிறார். பாதராயணர் என்பது வியாசரேதான் என்று ஒரு தொன்மநம்பிக்கை உண்டு.
பிரம்மசூத்திரத்திலேயே பாதரி என்னும் குருமரபு சொல்லப்பட்டுள்ளது. ஆகவே பாதராயணர் என்பது ஒரு குருமரபுக்குப் பொதுவான பெயராக இருக்கலாம்.
தத்துவ வரலாற்று இடம்
பிரம்மசூத்திரம் பிரஸ்தானத்ரயி (மூன்று தத்துவ இயக்கங்கள்) என்று வேதாந்த மரபு சொல்லும் நூல்தொகைகளில் இரண்டாவது வருவது. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகிய நூல்களே மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. பிரம்ம சூத்திரம் அவற்றில் நியாயப் பிரஸ்தானத்தின் முதன்மைநூலாகக் கருதப்படுகிறது.
இந்திய தத்துவ வரலாற்றில் வேதங்கள் தொன்மையான மூலநூல்கள். அவை சுருதி, சப்தப்பிரமாணம் என கருதப்படுகின்றன. ஆரண்யகங்களும் அவற்றின் தொடர்ச்சியான உபநிடதங்களும் வேதங்களின் பிரம்மம் எனும் தத்துவத்தை வளர்த்தெடுத்தன. அவை உருவாக்கிய பார்வை வேதாந்தம் என அழைக்கப்படுகிறது. வேதங்களில் உள்ள சடங்கு சார்ந்த அணுகுமுறையை பிராமணங்கள் வளர்த்தெடுத்தன. அது பூர்வ மீமாம்சம் என அடையாளப்படுத்தப்பட்டது. ஆகவே பிரம்ம தத்துவம் அல்லது வேதாந்தம் உத்தர மீமாம்சம் என அடையாளப்படுத்தப்பட்டது.
பலவகையான தொடர் விவாதங்கள் வழியாக இந்து தத்துவ மரபில் ஆறு தரிசனங்கள் திரண்டு வந்தன. சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம் உத்தர மீமாம்சம் என அவை ஆறு. ஜைமினி தன்னுடைய மீமாம்ஸா சூத்திரங்கள் வழியாக பூர்வ மீமாம்ஸையை வரையறை செய்தார். பிற நான்கு தரிசனங்களுக்கும் அவ்வாறே வரையறை நூல்கள் அமைந்தன.
அதேபோல உபநிடதங்களால் பல கோணங்களில் விவாதிக்கப்பட்ட பிரம்ம தத்துவத்தை தொகுத்து பாதராயணர் பிரம்மசூத்திரத்தை எழுதினார். இந்நூல் உத்தரமீமாம்சம் அல்லது வேதாந்தத்தின் முதன்மை வரையறை நூலாக ஆகியது. இந்நூலை ஒட்டியே அடுத்தகட்ட வேதாந்த நூல்கள் உருவாயின. அவற்றில் முதன்மையானதான பகவத்கீதையும் இதை தன் முதல்நூலாகக் குறிப்பிடுகிறது.
உள்ளடக்கம்
பிரம்மசூத்திரம் ஒரு விவாதநூல். அதன் தொடக்க அத்தியாயங்களில் பருப்பொருளை முதன்மைபொருளாக (பிரதானம்) முன்வைக்கும் தரப்புகளுக்கான விரிவான மறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாங்கிய தரிசனம் மறுக்கப்படுகிறது என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பாதராயணர் ஆஸ்மரத்யர், ஔதோலோமி போன்ற பல முன்னோடிகளை தன் நூலில் குறிப்பிடுகிறார். வேறெங்கும் அவர்களைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ஜைமினி பல இடங்களில் இணையாசிரியராக ஏற்புநோக்குடன் குறிப்பிடப்படுகிறார். பிரகதாரண்யகம், சாந்தோக்யம், ஐதரேயம் உள்ளிட்ட பல உபநிடதங்கள் மேற்கோள் காட்டவோ, குறிப்புணர்த்தப்படவோ செய்கின்றன. இதில் சுட்டப்படும் பல உபநிடதங்கள் மறைந்துவிட்டன என்றும் பால் டைஷன் (Paul Jakob Deussen) குறிப்பிடுகிறார்.
பாதராயணர் உபநிடதத்திலுள்ள சத்யகாம ஜாபாலன் போன்ற கதைகளை மேற்கோள் காட்டுகிறார். சைத்ரரதன் போன்ற அக்கால வரலாற்றுச் செய்தியையும் சுட்டுகிறார். மதுவித்தை போன்ற அன்றிருந்த உபாசனா முறைகளை குறிப்பிடுகிறார். வெவ்வேறு கருத்துக்கள் உபநிடதங்களில் எங்கெல்லாம் உள்ளன என உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பிரம்மம் என்னும் கருத்தை நிறுவுவதே பாதராயணரின் நோக்கம். இப்பிரபஞ்சத்தின் முழுமுதல் காரணமும், பிரபஞ்சத்தை தாங்குவதுமாகவும் இருப்பது பிரம்மமே என வாதிட்டு சாங்கியர் சொல்வதுபோல அது பருப்பொருள் அல்ல என்று நிறுவுகிறார். பிரம்மமே ஜீவாத்மா என்றும், ஜீவாத்மா ஓர் உடலில் உறைவதனால் அந்த உடலின் எல்லைக்குட்பட்டு அது உருவகிக்கப்படுகிறது என்றும் வழிபாட்டுக்காகவே அது பல அடையாளங்களைப் பெறுகிறது என்றும் நிறுவுகிறார்.
பிரம்மசூத்திரம் உபநிடதங்களுக்கான விளக்கம் (வியாக்கியானம்) என்ற நிலையிலும் பயிலப்படுகிறது. உபநிடதக் கருத்துக்களை தொகுத்து சமநிலையிணைப்பு (சமன்வயம்) செய்து முன்வைக்கிறது.
நூல் அமைப்பு
பிரம்மசூத்திரம் நான்கு பகுதிகளாக (அத்தியாயம்) பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு துணைப்பகுதிகளாக (பாதங்கள்) பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாதத்திலும் உள்ள சூத்திரங்களின் பேசுபொருளை அடிப்படையாகக் கொண்டு சிறு கருத்துக்களாக (அதிகரணம்) பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 192 அதிகரணங்கள் உள்ளன.
இவற்றில் மொத்தமாக 555 சூத்திரங்கள் இருக்கின்றன.
இந்நூலின் நான்கு அத்தியாயங்கள் பின்வருமாறு
சமன்வய அத்தியாயம்
இது வெவ்வேறு உபநிடதக்கருத்துக்களை ஒருங்கிணைத்து, ஒன்றோடொன்று தொடுத்து முன்வைக்கிறது. ஜைமினியின் பூர்வமீமாம்ஸைக் கருத்துக்களையும் தேவையானபோது இணைத்துக்கொள்கிறது. அதன் அடிப்படையில் சாங்கியம் முதலிய பொருண்மையை முதற்பொருளாகச் சொல்லும் தரப்புகளை மறுக்கிறது. உபநிடதங்கள் அனைத்துமே பிரம்மத்திலிருந்து உருவாயின என்றும், ஆத்மாவே பிரம்மம் என்றும் கூறுகின்றன என வகுத்துரைக்கிறது.
விரோத அத்தியாயம்
இப்பகுதி வேதாந்தத்தின் மூலநூல்களுக்குள் எப்படி முரண்பாடு இல்லை என்பதையும் வேதாந்தம் எப்படி பிறதரிசனங்களுடன் முரண்படுகிறது என்பதையும் பேசுகிறது. வேதாந்தம் பிரம்மம் , ஜீவாத்மா மற்றும் பிரம்மம், தெய்வவழிபாடு பற்றிச்சொல்லும் கருத்துக்களில் மேலோட்டமாக தெரியும் முரண்பாடு உண்மையில் எப்படி ஒருமைகொண்டுள்ளது என விவாதிக்கிறது. சாங்கியம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், சமணம் மற்றும் பௌத்த மரபுகள் இங்கே மறுக்கப்படுகின்றன.
சாதனா அத்தியாயம்
இப்பகுதியில் எப்படி ஒரு வேதாந்தி தான் அறிந்த வேதாந்த மெய்ஞானத்தை நடைமுறையில் உணர்வது, எப்படி அதை தன் மெய்மையாக ஆக்கிக்கொண்டு வீடுபேறடைவது என்பதைப் பேசுகிறது
ஃபல அத்தியாயம்
இப்பகுதியில் பிரம்மஞானம் அடைவதன் பயன் என்ன என்பது பேசப்படுகிறது. ஜீவன்முக்தி, விதேகமுக்தி, கிரம முக்தி என்னும் வீடுபேறின் வகைகளைப் பற்றியும், அன்றாடச்செயல்பாடுகளைப் பற்றியும் பேசுகிறது.
சில முதன்மை வரிகள்
பிரம்மசூத்திரத்தில் உள்ள சில வரிகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதுண்டு. பிரம்மசூத்திரத்தின் சொல்லியல்புக்குச் சில உதாரணங்கள்.
- எதிலிருந்து தோன்றுகிறதோ அது (ஜன்மாதி அஸ்ய யத: ) அனைத்தும் எதிலிருந்து தோன்றுகிறதோ அதுவே பிரம்மம் (அத்தியாயம் 1 பாதம் 1-2)
- ஆனால் அது ஒருமையாலானது (தத்து சமன்வயாத்) (அத் 1 பாதம் 1-4)
- தன்னை நிலைநிறுத்தியவனுக்கு வீடுபேறு சொல்லப்பட்டுள்ளது (தன்னிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத்) (அத் 1 பாதம் 1-7)
- அசைவன அசைவற்றனவற்றை உண்பது (அத்தா சராசரக்ரஹணாத்). பிரம்மம் அசைவன அசைவற்றவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டது (அத் 1 பாதம் 2-9)
- இல்லையென்றாக வாய்ப்பற்றமையால் பிற ஏதும் அல்ல அது (அனவஸ்திதேர் அசம்பவாச்ச நே இதர). (அத் 1 பாதம் 2 -17)
- விண் மண் முதலியவற்றை ஏந்தியுள்ளது, தன்னுடையது எனும் சிறப்பித்தல் கொண்டது (த்யூ பூ ஆதி ஆயதனம் ஸ்வ சப்தாத்) அனைத்தும் பிரம்மத்துக்கு சொந்தமானது என சுருதிகள் சொல்கின்றன. (அத் 1 பாதம் 2-17)
- வீடுபேறடைந்தவர்களால் அடையப்படுகிறது எனப்படுகிறது (முக்தோபஸ்ரூப்ய வ்யபதேசாத்). வீடுபேறு அடைபவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள் என்று சொல்லப்படுகிறது என்பதனால் அது அறுதியானது. (அத் 1 பாதம் 2-3)
- அறிதல் ஒன்றே என்பது வேறுவேறில்லை என்பதில் இருந்தே. ( பிரதிக்ஞா அஹானி அவியதிரேகாத்.) பிரபஞ்சம், ஆத்மா எல்லாம் வேறுவேறில்லை என்ற உண்மையில் இருந்தே ஒன்றை அறிந்தால் எல்லாம் அறியப்படும் என்னும் கொள்கைக்குச் செல்லமுடியும். ஞானம் பிளவற்றது. (அத் 2, பாதம் 3-6)
- முதல் இருப்பான (சத்) அதற்கு தொடக்கம் இல்லை, ஏனென்றால் அனுபவத்தின் தர்க்கத்துக்கு அது கட்டுப்படவில்லை. (அசம்பவஸ்து ஸத: அனுபபத்தே:) ஓர் அனுபவமாக பிரம்மம் இருக்குமென்றால்தான் அதற்கு தொடக்கமும் முடிவும் இருக்கும் (அத் 2, பாதம் 3-9)
- உடலுடனிருப்பதனால் அவ்வாறு ஆகிறது (தேஹயோஹாத் வா ச அபி:) ஆத்மா உடலுடன் இணைந்திருப்பதனால் உடலுக்குரிய செயல் - விளைவு என்னும் இருமையில் சிக்கிக்கொள்கிறது (அத் 3 பாதம் 2- 6)
- ஆகையால் முடிவின்மையுடன் இணைகிறது என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது (அதோ அனந்தேன ததா ஹி லிங்கம்) ஆத்மா முடிவின்மையாகிய பிரம்மத்துடன் இணைகிறது என முன்னூல்கள் சொல்கின்றன. (அத் 3 பாதம் 2-26)
பிரம்மசூத்திர உவமைகள்
பிரம்மசூத்திரம் பல உவமைகளை முன்வைக்கிறது. அவை பிற்காலத்தில் உவமை ஆதாரங்கள் (உபமானப் பிரமாணம்) ஆக பயன்படுத்தப்பட்டன. சில உதாரணங்கள்:
- தச்சன் இருநிலையில் இருப்பது போல. (யதா ச தட்சா உபயதா:) தச்சன் பொருளைப் படைப்பவனாகவும் படைக்காத சாமானியனாகவும் இருக்கிறான். படைக்கையிலேயே அவன் தச்சன். அதுபோல புலன்களுடன் இணைந்து உலகை உருவாக்கிக்கொள்ளும் ஆத்மா அவ்வாறல்லாத நிலையிலும் இருக்கிறது. (அத் 2 பாதம் 3-40)
- ஒளிக்கிரணங்கள் தடைபட்டால் உருவத்தை அடைவதுபோல பிரம்மம் உருவம்கொள்கிறது (பிரகாசவத் ச அவையர்த்யாத்: ). உடலில் தடைபட்ட பிரம்மமே ஆத்மா ( அத் 3 பாதம் 2-15)
- பாம்பும் அதன் வளையங்களும் வேறுவேறாகத் தோன்றுவதுபோல பிரம்மமும் பிரபஞ்சமும் வேறுவேறாகத் தோன்றுகின்றன (உபய வியபதேசாத் து அஹிகுண்டலவத்:). பிரம்மமும் ஆத்மாவும் இரண்டாகத் தெரிவதும் ஆகும் (அத் 3 பாதம் 2-27)
- ஒளிக்கதிரால் அதைச்சூழ்ந்துள்ள ஒளிமண்டலம் ஒளிகொள்வதுபோல பிரம்மம் ஆத்மாவை ஒளிரவைக்கிறது (பிரகாச ஆச்ரவத் வா தேஜஸ்வாத்:) (அத் 3 பாதம் 2-28)
உரைகள்
பிரம்மசூத்திரத்திற்கு ஏராளமான உரைகள் எழுதப்பட்டுள்ளன. சங்கரர், ராமானுஜர், மத்வர், நிம்பார்க்கர், வல்லபர் ஆகியோரின் உரைகளே முதன்மையாகக் கருதப்படுகின்றன.
- வேதாந்த பாரிஜாத சௌரபம். நிம்பார்க்கர் எழுதியது. குமார மார்க்கம், துவைதாத்வைதம் (பொயு 7)
- வேதாந்த கௌஸ்துபம். ஸ்ரீனிவாசாச்சாரியார் . துவைதாத்வைதம் (பொயு 7)
- சங்கரபாஷ்யம். ஆதிசங்கரர் எழுதியது. அத்வைதம். (பொயு 9)
- பாஸ்கர பாஷ்யம். பாஸ்கராச்சாரியர் எழுதியது. பேதாபேதம். (பொயு 9)
- வேதாந்த பாஷ்யம் யாதவப்பிரகாசர் எழுதியது. பேதாபேத மரபு (பொயு 11)
- ஸ்ரீபாஷ்யம். ராமானுஜர் எழுதியது. விசிஷ்டாத்வைதம் (பொயு 11)
- மத்வ பாஷ்யம். துவைத நோக்கில் உருவாக்கப்பட்டது. (பொயு 13)
- சித்தாந்த தீபிகை. ஸ்ரீகந்த சிவாச்சாரியார் எழுதியது. சிவாத்வைத மரபு (பொயு 13)
- ஸ்ரீகர பாஷ்யம். ஸ்ரீபதி பண்டிதர் வீரசைவ மரபு. விசேஷாத்வைதம் (பொயு 14)
- அனுபாஷ்யம். வல்லபர் எழுதியது. சுத்தாத்வைதம். புஷ்டிமார்க்கம் (பொயு 16)
- சுக பாஷ்யம். சுகர் எழுதியது. பேதவாதம். (பொயு 16 )
- விக்ஞானாம்ருத பாஷ்யம். விக்ஞான பிக்ஷு எழுதியது. ஆத்ம பிரம்மைக்ய பேதவாதம். (பொயு 17)
- பிரம்மசூத்ர காரிகா பாஷ்யம். பலதேவ வித்யாபூஷணர் எழுதியது. கௌடிய மாத்வ மரபு (பொயு 18)
இந்த உரைகள் முக்கியமானவையாகக் குறிப்பிடப்படுகின்றன
ஏராளமான உரைகளின் பெயர்கள் மற்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்வ மரபினரான நாராயண பண்டிதாச்சாரியர் அவருடைய மத்வ வியஜ அபாவ பிரகாசிகா என்னும் நூலில் 36 நூல்களின் பட்டியலைக் குறிப்பிடுகிறார். அவை இன்று கிடைப்பதில்லை. நவீனகாலகட்டத்தில் ஏராளமான உரைகள் எழுதப்பட்டுள்ளன.
வாசிப்பு வேறுபாடுகள்
பிரம்மசூத்திரம் வேதாந்தத்தின் மூலநூலகக் கருதப்படுகிறது. ஆகவே பிறகு வந்த வேதாந்த துணைப்பிரிவுகள் அனைத்துக்குமே அதுதான் முதல்நூல். இதனால் அதிலுள்ள சூத்திரங்களை தங்கள் தேவைக்கேற்ப பொருள்கொண்டு உரைகளை எழுதியுள்ளனர். இவ்வாறு பொருள்கொள்வதில் கீழ்க்கண்ட முறைகளால் உரைவேறுபாடுகள் தோன்றின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
- சூத்திரங்களிலுள்ள இணைப்புச் சொற்களை பொருள்கொள்வது. ஒரே சொல்லையே 'எனவே' என்றும், 'அவ்வாறன்றி' என்றும் பொருள்கொண்டு உரை எழுதியுள்ளனர். உதாரணமாக சூத்திரம் 2.3.15-ல், அந்தரா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது, இது ’ஏனென்றால்’ என்றும் ‘அவ்வாறன்றி’ என்றும் பொருள்கொள்ளப்படுவதுண்டு. சங்கரர் ராமானுஜர் நிம்பார்க்கர் ஆகியோர் 'ஏனென்றால்' என பொருள்கொள்கையில் மத்வர் 'அவ்வாறன்றி' எனப் பொருள்கொள்கிறார்.
- முந்தைய சூத்திரத்துடனான இணைப்பை பொருள்கொள்வது. முந்தைய சூத்திரத்துக்கு நீட்சியாகவா அல்லது மறுப்பாகவா அடுத்த சூத்திரம் உள்ளது என்பதை எப்படி பொருள்கொள்கிறார்களோ அப்படி மொத்தப்பொருளும் மாறுபடுகிறது. உதாரணமாக, சங்கரர் சகுணபிரம்மம் பற்றிய ந ச கார்யே பிரதிபத்தி அபிசந்தி (4.3.14) என்ற சூத்திரத்தை பொருள்கொள்ளும்போது அதை மறுப்புக்குரியதாக பாதராயணர் சொல்வதாக பொருள்கொள்கிறார். ஆனால் பலர் அவ்வாறன்றி சகுணபிரம்மத்தையும் பாதராயணர் முன்வைப்பதாக சொல்லியுள்ளனர். சங்கரர் ஆத்மாவின் அளவு பற்றி பிரம்மசூத்திரம் சொல்வனவற்றை அது மறுப்புக்குரியதாக சொல்கிறது என்று எடுத்துக்கொள்கையில், ராமானுஜர் அது பிரம்மசூத்திரத்தின் தரப்பே என கொள்கிறார்.
மொழியாக்கங்கள்
பிரம்ம சூத்திரத்தின் ஏட்டுவடிவில் இருந்து கீழ்க்கண்ட இரு மொழியாக்கங்கள் ஜெர்மன் மொழியிலும் ஆங்கிலத்திலும் செய்யப்பட்டன. அதன்பின்னரே சம்ஸ்மிருதம் தவிர்த்த இந்திய மொழிகளில் பிரம்மசூத்திரம் மொழியாக்கம் செய்யப்பட்டது. அவை சம்ஸ்கிருத மூலத்துடன் ஆங்கில மொழியாக்கத்தையும் ஒப்பிட்டு செய்யப்பட்டவை.
- பால் டைஷன் ( Paul Deussen ) ஜெர்மன் மொழி. 1883, 1881
- ஜார்ஜ் திபாட் (George Thibaut ) ஆங்கிலம். 1890, 1896
தமிழ் பிரம்மசூத்திர நூல்கள்
- பிரம்மசூத்திரம் உரை- சுஜாதா- ராஜகோபாலன்
- பிரம்மசூத்திரம் பரமானந்தம்
- ஆத்மஞானம் பிரம்மசூத்திரம்
- https://brahmasutram.blogspot.com/
- பிரம்மசூத்திரம் சங்கரபாஷ்யம்
உசாத்துணை
- இந்திய தத்துவம் ஹிரியண்ணா இணையநூலகம்
- இந்திய மெய்யியல் ஹிரியண்ணா
- The System Of The Vedanta (1912) Dr.paul Deussen
- Brahma Mimamsa Bhashya srikanta
- பிரம்மசூத்திரம் உரையாடல்
- The Brahmasutras and Their Principal Commentaries A Critical Exposition (In Three Volumes)
- Das System des Vedânta. Nach den Brahma-Sûtra's des Bâdarâyana und dem Commentare des Çankara über dieselben als ein Compendium der Dogmatik des Brahmanismus vom Standpunkte des Çankara aus (1883)
- Die Sûtra's des Vedânta oder die Çariraka-Mimansa des Badarayana nebst einem vollständigen Kommentare des Çankara. Aus dem Sanskrit übersetzt (1887)
- Vol. 34, The Vedanta-Sutras, vol. 1 of 3, with the commentary of Sankaracharya, part 1 of 2. Adhyâya I–II (Pâda I–II). (1890)
- ol. 38, The Vedanta-Sutras, vol. 2 of 3, with the commentary of Sankaracharya, part 1 of 2. Adhyâya II (Pâda III–IV)–IV. (1896)
- Brahma Sutra Bhasya Of Shankaracharya Translated by Swami Gambhirananda
- The Brahmasutras And Their Principal Commentaries
- Brahma Sutras (Nimbarka commentary)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 09:33:30 IST