மாதீர்த்தன்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 27: | Line 27: | ||
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | *[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisai362.pdf பேயனார் முதலிய புலவர்கள்: புலவர் கா.கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 19:58, 21 September 2024
மாதீர்த்தன் (மாதீரத்தன்) சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மாதீர்த்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மாதிரம் என்பதற்கு திசைகள் என்பது பொருள்.
இலக்கிய வாழ்க்கை
மாதீர்த்தன் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் 113-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவி வரும் இடத்தை தலைவனுக்குக் கூறும் விதமாக தோழி கூற்றாக மருதத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- ஊருக்கு அருகே பொய்கை உள்ளது. அதற்கு அடுத்து ஒரு சிறிய காட்டாறு. அதற்கு அடுத்து பொழில் உள்ளது. அப்பொழிலும், ஆற்றிலும், பொய்கையிலும் மீன் தேடி உண்ணும் பறவைகளைத் தவிர யாரும் இல்லை. கூந்தலுக்கு எருமண் கொணர வேண்டி அங்கு செல்லும் வழக்கம் தனக்கும் தலைவிக்கும் உள்ளதாக தோழி தலைவனிடம் குறிப்புணர்த்தினாள்.
- பெண்களின் கூந்தல் எண்ணைப் பிசுக்கைப் போக்க எருமண் பயன்படுத்தப்பட்ட செய்தி உள்ளது.
பாடல் நடை
- குறுந்தொகை: 113
(திணை: மருதம்) (தோழி கூற்று)
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறு கான் யாறே
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
உசாத்துணை
✅Finalised Page