கௌதம நீலாம்பரன்: Difference between revisions
(Corrected Internal link name அகிலன் to அகிலன் (எழுத்தாளர்);) |
(Corrected Internal link name கலைமகள் to கலைமகள் (இதழ்);) |
||
Line 12: | Line 12: | ||
கௌதம நீலாம்பரன் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[நா. பார்த்தசாரதி|நா.பா]], [[மு. வரதராசன்|மு.வ]]., [[அகிலன் (எழுத்தாளர்)]], [[சாண்டில்யன்]], [[விக்ரமன்|விக்கிரமன்]], [[ஜெகசிற்பியன்]], ஜாவர் சீதாராமன், [[மீ.ப.சோமு]] போன்றோரது எழுத்துக்களை முன்மாதிரியாகக் கொண்டவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டார். | கௌதம நீலாம்பரன் [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[நா. பார்த்தசாரதி|நா.பா]], [[மு. வரதராசன்|மு.வ]]., [[அகிலன் (எழுத்தாளர்)]], [[சாண்டில்யன்]], [[விக்ரமன்|விக்கிரமன்]], [[ஜெகசிற்பியன்]], ஜாவர் சீதாராமன், [[மீ.ப.சோமு]] போன்றோரது எழுத்துக்களை முன்மாதிரியாகக் கொண்டவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டார். | ||
கௌதம நீலாம்பரனின் முதல் சிறுகதை, 'புத்தரின் புன்னகை’, 1970-ல், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப் பதிப்பில் வெளியானது. அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையான இவரது இரண்டாவது சிறுகதை 'கீதவெள்ளம்’ [[கலைமகள்]] இதழில் வெளியானது. நாளடைவில் சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளும் எழுத ஆரம்பித்தார். | கௌதம நீலாம்பரனின் முதல் சிறுகதை, 'புத்தரின் புன்னகை’, 1970-ல், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப் பதிப்பில் வெளியானது. அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையான இவரது இரண்டாவது சிறுகதை 'கீதவெள்ளம்’ [[கலைமகள் (இதழ்)]] இதழில் வெளியானது. நாளடைவில் சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளும் எழுத ஆரம்பித்தார். | ||
’முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் 'புத்தர் பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தீபம், கணையாழி, கல்கி, கலைமகள், [[அமுதசுரபி]], [[குமுதம்]], ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது. ஞானபூமி, முத்தாரம், முல்லைச் சரம், கலாவல்லி, தினமணி கதிர், [[தினத்தந்தி]], தினமலர் வார மலர், சிறுவர் மலர் எனத் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. மலேசிய நாட்டின் வானம்பாடி இதழிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. | ’முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் 'புத்தர் பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தீபம், கணையாழி, கல்கி, கலைமகள், [[அமுதசுரபி]], [[குமுதம்]], ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது. ஞானபூமி, முத்தாரம், முல்லைச் சரம், கலாவல்லி, தினமணி கதிர், [[தினத்தந்தி]], தினமலர் வார மலர், சிறுவர் மலர் எனத் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. மலேசிய நாட்டின் வானம்பாடி இதழிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. |
Revision as of 20:34, 24 September 2024
கௌதம நீலாம்பரன் (இயற்பெயர் கைலாசநாதன்; ஜூன் 14, 1948 -செப்டம்பர் 14, 2015) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், நாடக ஆசிரியர் என தமிழ் இலக்கியப் பரப்பில் பல களங்களில் செயல்பட்டவர். பொது வாசிப்புக்குரிய நாவல்கள் பலவற்றை எழுதியவர். வரலாற்று நாவல்களை அதிகம் எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
கௌதம நீலாம்பரன், ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் என்ற கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். அவ்வூரில் பள்ளிக் கல்வி பயின்றார். நாடக ஆர்வத்தால் வீட்டிலிருந்து வெளியேறி, நவாப் ராஜமாணிக்க நாடகக் குழுவில் இணைந்தார். அங்கு சில வேடங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
கௌதம நீலாம்பரன், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், 1965-ல், சென்னைக்கு வந்தார். நடிக்க வாய்ப்புகள் அமையாததால் ஹோட்டல் சப்ளையர், பழங்கள் விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று பல தொழில்களை மேற்கொண்டார். நண்பர்களின் அறைகளில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார். பின்னர் இதழாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
கௌதம நீலாம்பரனின் மனைவி பெயர் அகிலா. மகன் விஜய சங்கர் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கௌதம நீலாம்பரன் கல்கி, நா.பா, மு.வ., அகிலன் (எழுத்தாளர்), சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப.சோமு போன்றோரது எழுத்துக்களை முன்மாதிரியாகக் கொண்டவர். தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின் சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டார்.
கௌதம நீலாம்பரனின் முதல் சிறுகதை, 'புத்தரின் புன்னகை’, 1970-ல், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப் பதிப்பில் வெளியானது. அக்பர் - தான்சேன் பற்றிய சரித்திரக் கதையான இவரது இரண்டாவது சிறுகதை 'கீதவெள்ளம்’ கலைமகள் (இதழ்) இதழில் வெளியானது. நாளடைவில் சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளும் எழுத ஆரம்பித்தார்.
’முத்தாரம்' வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் 'புத்தர் பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தீபம், கணையாழி, கல்கி, கலைமகள், அமுதசுரபி, குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது. ஞானபூமி, முத்தாரம், முல்லைச் சரம், கலாவல்லி, தினமணி கதிர், தினத்தந்தி, தினமலர் வார மலர், சிறுவர் மலர் எனத் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளன. மலேசிய நாட்டின் வானம்பாடி இதழிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என 65-க்கும் மேற்பட்ட நூல்களை கௌதம நீலாம்பரன் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக "சரித்திரமும் சமூகமும்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
இதழியல் வாழ்க்கை
நா.பார்த்தசாரதி கௌதம நீலாம்பரனை 'தீபம்’ இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். கௌதம நீலாம்பரன், சுமார் பத்தாண்டு காலம் தீபத்தில் பணிபுரிந்தார். தீபத்திற்குப் பின், கி.வா.ஜகந்நாதனின் பரிந்துரையின் பேரில் இதயம் பேசுகிறது இதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதயம் பேசுகிறது, ஞானபூமி இதழ்களைத் தொடர்ந்து ஆனந்தவிகடன், குங்குமம், முத்தாரம், குங்குமச் சிமிழ் என பல இதழ்களில் பணியாற்றினார்.
வானொலி மற்றும் தொலைக் காட்சிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் துறையில் பணிபுரிந்தார்.
அமைப்புப் பணிகள்
கௌதம நீலாம்பரன் இல.கணேசன் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றினார்.
மறைவு
கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015-ல் மாரடைப்பால் காலமானார்.
விருதுகள்
- புத்தர் பிரான் நூலுக்கு, தினத்தந்தி ஆதித்தனார் அறக்கட்டளையின் நினைவுப் பரிசு ரூபாய் ஒரு லட்சம் கிடைத்தது.
- சேலம் தமிழ்ச்சங்கம் வழங்கிய 'தமிழ் வாகைச் செம்மல்’ விருது
- கவிதை உறவு அமைப்பு வழங்கிய 'தமிழ் மாமணி’ விருது
- அமுதசுரபி இதழ் - ஸ்ரீராம் அறக்கட்டளை இணைந்து வழங்கிய 'பாரதி’ விருது
- இலக்கிய வீதி இனியவன் வழங்கிய 'அன்னம்’ விருது
- தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த பேராசிரியர் கல்கி இலக்கிய விருது
- தமிழ் எழுத்தாளர் சங்கம் அளித்த 'பாரதி பணிச்செல்வர்’ விருது
- மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளை வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது
- சைதாப்பேட்டை மகாத்மா நூலகம் வழங்கிய சக்தி கிருஷ்ணசாமி விருது
- திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ’கதைக்கலைச் செம்மல்’ விருது
- தென்னிந்திய பௌத்த சங்கம் வழங்கிய 'சித்தார்த்தா’ விருது
- லில்லி தெய்வசிகாமணி விருது
இலக்கிய இடம்
தமிழின் வெகுஜன இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தவர் கௌதம நீலாம்பரன். ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் கௌதம நீலாம்பரனும் ஒரு குறிப்பிடத்தகுந்த வரலாற்று நாவல் எழுத்தாளர்.
நூல்கள்
வரலாற்று நாவல்கள்
- சுதந்திர வேங்கை
- சோழவேங்கை
- மோகினிக் கோட்டை
- கோச்சடையான்
- ரணதீரன்
- வெற்றி மகுடம்
- ரஜபுதன இளவரசி
- பல்லவன் தந்த அரியணை
- வெற்றித் திலகம்
- பல்லவ மோகினி
- மாசிடோனிய மாவீரன்
- கலிங்கமோகினி
- பாண்டியன் உலா
- அதியமான் கோட்டை
- புலிப் பாண்டியன்
- பூமரப் பாவை
- வேங்கை விஜயம்
- நிலா முற்றம்
- வீரத்தளபதி மருதநாயகம்
- சேது பந்தனம்
- விஜய நந்தினி
- சாணக்கியரின் காதல்
- சித்திரப் புன்னகை
- சிம்மக்கோட்டை மன்னன்
- பொன்னிபுனல் பூம்பாவை
- சரித்திரம் போற்றும் சம்பவங்கள்
- மாடத்து நிலவு
- கௌதம நீலாம்பரன் சரித்திர நாவல்கள்
சமூக நாவல்கள்
- காவியமாய் ஒரு காதல்
- பகவதி குடில்
- அன்பின் அலைவரிசை
- ஆகாய ஓவியம்
- நினைவுகளை மீட்டிய கீதம்
- ஒரு ஓவியம் காதலாகிறது
- ஜென்ம சக்கரம்
- சித்திரப் புன்னகை
- வரம் கேட்கும் தேவதை
- ராஜாளி நாயக்கர்
- கீறல்கள்
- புன்னகையில் புவனா
- கலா என்றொரு நிலா
- உதய பூமி
சிறுகதைத் தொகுப்பு
- சரித்திரமும் சமூகமும்
கவிதை நூல்கள்
- இதயமின்னல்
- அம்பரம்
நாடகங்கள்
- சேரன் தந்த பரிசு
- மானுட தரிசனம்
- கௌதம நீலாம்பரன் நாடகங்கள்
கட்டுரை நூல்கள்
- இதயநதி (சுய வரலாறு)
- புத்தர்பிரான்
- அருள் மலர்கள்
- ஞானயுத்தம்
- நலம் தரும் நற்சிந்தனைகள்
- இதய நதி
- அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்
- தத்வமஸி
- அபிராமி அந்தாதி - உரை
- சிவநெறிச் சீலர்கள்
- அருள் மலர்கள்
- ஞானத் தேனீ
- ஞான விசாரணை
- சில ஜன்னல்கள்
சிறார் நூல்கள்
- மாயப் பூக்கள்
- தமிழக ஹாரிபாட்டர் கதைகள்
- மந்திரப் புதையல்
- ராஜ பொக்கிஷம்
- மந்திர யுத்தம்
- நந்தினியின் கனவு
- மாயத் தீவு
- மாயாஜாலக் கதைகள்
- நெருப்பு மண்டபம்
- தங்க இளவரசி
- மாயக் கோட்டை
- வேங்கை வேட்டை
- கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம் (இரண்டு பாகங்கள்)
உசாத்துணை
- கௌதம நீலாம்பரன் இணையதளம்
- கௌதம நீலாம்பரன் நேர்காணல்
- நினைவின் நதிக்கரையில் : கௌதமநீலாம்பரன் வாழ்க்கைக் குறிப்புகள்
- எழுத்தாளனின் வாழ்க்கை:ஜெயமோகன் தளம்
- தென்றல் இதழ் கட்டுரை
- கௌதம நீலாம்பரன் : தினமலர் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:57 IST