திருவாவடுதுறை ஆதீனம்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 2: | Line 2: | ||
திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம். இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சமயம் ஆகியவற்றை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்ற தமிழறிஞர்களை உருவாக்கிய ஆதீனம். | திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம். இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சமயம் ஆகியவற்றை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்ற தமிழறிஞர்களை உருவாக்கிய ஆதீனம். | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
திருவாவடுதுறை காவிரி ஆற்றின் தென்கரையில் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலங்களுள் ஒன்று. இது | திருவாவடுதுறை காவிரி ஆற்றின் தென்கரையில் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலங்களுள் ஒன்று. இது கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற நமச்சிவாய தேசிக மூர்த்தியால் பொ.யு 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. | ||
கைலாயப்பரம்பரையில் வந்த ஆதீனமாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக எழுபத்தி ஐந்து கோவில்கள் உள்ளன. | |||
== குருமகா சந்நிதானம் == | == குருமகா சந்நிதானம் == | ||
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமசிவாயமூர்த்திகள். | திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமசிவாயமூர்த்திகள். | ||
| Line 47: | Line 46: | ||
* [[கச்சியப்ப முனிவர்]] | * [[கச்சியப்ப முனிவர்]] | ||
* [[சிவஞான முனிவர்|மாதவச் சிவஞான முனிவர்]] | * [[சிவஞான முனிவர்|மாதவச் சிவஞான முனிவர்]] | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.bdu.ac.in/facilities/suvadi/thiruvaduthurai/index.php திருவாவடுதுறை ஆதீனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்] | * [https://www.bdu.ac.in/facilities/suvadi/thiruvaduthurai/index.php திருவாவடுதுறை ஆதீனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்] | ||
| Line 53: | Line 51: | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6l0py#book1/3 திருவாடுதுறை ஆதீன வரலாறு: tamildigitallibrary] | * [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU6l0py#book1/3 திருவாடுதுறை ஆதீன வரலாறு: tamildigitallibrary] | ||
{{First review completed}} | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 11:05, 1 September 2023
திருவாவடுதுறை ஆதீனம் (துறைசை ஆதீனம்)(திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்) (பொ.யு. 14-ஆம் நூற்றாண்டு) சைவ மடம். தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம். இந்தியாவின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று. தமிழ் மொழி, கலாச்சாரம், சைவ சமயம் ஆகியவற்றை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா போன்ற தமிழறிஞர்களை உருவாக்கிய ஆதீனம்.
வரலாறு
திருவாவடுதுறை காவிரி ஆற்றின் தென்கரையில் தேவாரம் பாடப்பட்ட சிவஸ்தலங்களுள் ஒன்று. இது கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற நமச்சிவாய தேசிக மூர்த்தியால் பொ.யு 14-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
கைலாயப்பரம்பரையில் வந்த ஆதீனமாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக எழுபத்தி ஐந்து கோவில்கள் உள்ளன.
குருமகா சந்நிதானம்
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குருமகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த நமசிவாயமூர்த்திகள்.
- ஸ்ரீலஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் (ஆதின நிறுவனர், குரு முதல்வர்)
- ஸ்ரீலஸ்ரீ மறைஞான தேசிகர்
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர்
- ஸ்ரீலஸ்ரீ உருத்திரகோடி தேசிகர்
- ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்
- ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்
- ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்(1622-1625)
- ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் (1625-1658)
- ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க தேசிகர்(1658-1678)
- ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்(1678-1700)
- ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்(1700-1730)
- ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் (1730-1770)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1770-1789
- ஸ்ரீலஸ்ரீ வேளூர் சுப்பிரமணிய தேசிகர் (1789-1845)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1845-1869)
- ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் (1869- 1888)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (ஜனவரி 1,1888 - ஏப்ரல் 15, 1920)
- ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (ஏப்ரல் 15, 1920- பெப்ருவரி 5,1922)
- ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் (பெப்ருவரி 5,1922 - 1937)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (1937 - ஏப்ரல் 13, 1951)
- ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் (ஏப்ரல் 13, 1951 - செப்டம்பர் 23, 1967)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் (செப்டம்பர் 23, 1967 - ஏப்ரல் 04, 1983)
- ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் ( ஏப்ரல் 04, 1983- நவம்பர் 23,2012)
- ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் (நவம்பர் 23,2012 - தற்பொழுது வரை)
தமிழ் இலக்கியப்பங்களிப்பு
திருவாவடுதுறை ஆதீனம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டு, மறுபதிப்பும் செய்துள்ளது. திருக்குறளை முதன்முதலில் அடி, சீர் அமைத்து வெளியிட்டது. திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், இலக்கணம், நாடகம், புராணம் எனப் பலதுறை சார்ந்த அரிய பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும், புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கிளைமடங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாவடுதுறை ஆதீன அறிஞர்கள்
- ஆறுமுக நாவலர்
- மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- உ.வே.சாமிநாதையர்
- புலவர் கீரன்
- ச.தண்டபாணி தேசிகர்
- ஆதி. முருகவேள்
- சு. குஞ்சிதபாதம்
- த.ச.மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- வீழி சிவாக்கிர யோகிகள்
- கச்சியப்ப முனிவர்
- மாதவச் சிவஞான முனிவர்
உசாத்துணை
- திருவாவடுதுறை ஆதீனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- Thiruvavaduthurai Math | A renowned seat of Tamil language and culture: The Hindu
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.