under review

எஸ். சங்கரநாராயணன்: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added)
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(15 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:Writer Sankarnarayanan.jpg|thumb|எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன்]]
[[File:Writer Sankarnarayanan.jpg|thumb|எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன்]]
எஸ். சங்கரநாராயணன் (எஸ். ஷங்கரநாராயணன்) (ஜூலை 28, 1959) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதை-வசன ஆசிரியர். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.
[[File:Sankara Narayanan 1.jpg|thumb|எஸ். சங்கரநாராயணன்]]
 
எஸ். சங்கரநாராயணன் (எஸ். ஷங்கரநாராயணன்; ஞானவள்ளல்; பிரம்மன்) (பிறப்பு: ஜூலை 28, 1959) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதை-வசன ஆசிரியர். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எஸ்.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959-ல் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் பயின்ற இவர், உயர் கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
எஸ்.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959-ல் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் பயின்ற இவர், உயர் கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
கல்லூரியை முடித்ததும் தொலைத்தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்தார். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். மணமானவர்.
தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். மணமானவர். இரு மகன்கள். வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
== இலக்கிய வாழ்க்கை ==
சங்கர நாராயணன், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த நூலகத்தில் வெகுஜன இலக்கியம், தீவிர இலக்கியம், உலக இலக்கியம் என பல நூல்களை வாசித்துத் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். [[தி.ஜானகிராமன்]], [[லா.ச. ராமாமிர்தம்|லா.ச.ராமாமிர்தம்]], சாமர்செட் மாம், ஹெமிங்வே, ஜாக் லண்டன், ஓ.ஹென்றி போன்றோரின் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. முதல் படைப்பு கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது வெளியானது. தொடர்ந்து வெகு ஜன இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள் எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரில் மற்றொரு எழுத்தாளரும் எழுதிக் கொண்டிருந்ததால், இவர், ‘ஷங்கரநாராயணன்’ என்ற பெயரில் எழுதினார். தற்போது ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரிலேயே எழுதி வருகிறார்.
===== சிறுகதை =====
[[ஆனந்த விகடன்]], [[சாவி]], [[தினமணி கதிர்]], [[கணையாழி]] தொடங்கித் தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை சங்கரநாராயணன் எழுதியிருக்கிறார். பொதுத் தலைப்பு ஒன்றை மையமாக வைத்துப் பல சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். ‘இருவர் எழுதிய கவிதை’ என்ற தொகுப்பு ஏழெட்டு மாதங்களே ஆன மழலைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு. முதுமையின் பிரச்னைகளைப் பேசும் கதைகளின் தொகுப்பு, ‘இரண்டாயிரம் காலத்துப் பயிர்’. இரவின் பின்னணி கொண்ட கதைகளின் தொகுப்பு ‘காலம் விரித்த குடை.’ ‘நாணல் பைத்தியம்’ பைத்தியங்களின் உலகைப் பேசுகிறது. எழுத்தாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ‘விரல் நர்த்தனம்’. ‘ஓ ஹென்றி’ பாணியில் சுவாரஸ்யமான முடிச்சுகள் கொண்ட கதைகளின் தொகுப்பு “நன்றி ஓ ஹென்றி”.
===== நாவல் =====
’நந்தவனத்துப் பறவைகள்’ என்பது சங்கரநாராயணனின் முதல் நாவல். இதனை [[ஔவை நடராசன்]] வெளியிட்டார். இந்த நூல் சங்கரநாராயணன் படித்த கல்லூரியில், முதுகலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. ‘[[இலக்கிய வீதி]]’ அமைப்பு சங்கரநாராயணனைத் தொடர்ந்து ஊக்குவித்தது.
===== மொழிபெயர்ப்பு =====
சங்கரநாராயணன், மொழிபெயர்ப்புகளுக்கும் முக்கியப் பங்களித்துள்ளார். வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ‘கனவுச் சந்தை’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார். ‘ரிச்சர்ட் பாஷ்’, ‘ஜான் அப்ஜய்’, ‘தாமஸ் மன்’, ‘ஜாக் லிண்டன்’, ‘சிங்லாண்ட் வைஸ்’ போன்றோரது சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. உலகச் சிறுகதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துப் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
===== பிற பங்களிப்புகள் =====
சங்கரநாராயணனின் இரண்டு சிறுகதைகளைக் காட்சித் தொடராக்கி, தனது ‘கதை நேரம்’ தொடரில் வெளியிட்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. சென்னைத் தொலைக்காட்சியிலும் சங்கரநாராயணனின் சிறுகதைகள் நாடகமாக வெளியாகின. சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு, குறும்படங்களுக்கு வசனம் எழுதினார். திரைப்பட விவாதங்களிலும் பங்கெடுத்துள்ளார்.  


{{Being created}}
சங்கரநாராயணனின் சிறுகதைகள் பலவும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பல படைப்புகள் பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதை நூல்கள் என்று 95-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார், சங்கரநாராயணன்.
[[File:Iruvatchi.jpg|thumb|இருவாட்சி இலக்கியத் துறைமுகம் : ஆண்டு மலர்]]
== இதழியல் வாழ்க்கை ==
சங்கரநாராயணன் ‘நிஜம் என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார். சென்னை புத்தக்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும்  ‘இருவாட்சி’ பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறார்.
== விருதுகள் ==
* திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு - ’தொட்ட அலை; தொடராத அலை' - நாவலுக்காக.
* அக்னி அட்சர விருது - ‘நேற்று இன்றல்ல.. நாளை’ - நாவலுக்காக.
* [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை]] வழங்கிய சிறந்த நூலுக்கான விருது - ’நீர்வலை' நாவலுக்காக.
* லில்லி தேவசிகாமணி விருது
* அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
* [[இலக்கியச் சிந்தனை]] விருது
* இலக்கிய வீதியின் அன்னம் விருது
* பாரத ஸ்டேட் வங்கி விருது
* [[கவிதை உறவு]] இலக்கியப் பரிசு
* தமிழக அரசின் 2018-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது
* [[கம்பன் புதிய பார்வை|கம்பன்]] கழக விருது
== இலக்கிய இடம் ==
பரந்துபட்ட கதைக்களங்களில் சுவாரஸ்யமான பல படைப்புகளைத் தந்தவர் எஸ். சங்கரநாராயணன். பல்வேறு உத்திகளை, பரிசோதனை முயற்சிகளை தன் படைப்புகளில் கையாண்டவர். கவிதை நடை கைவரப்பெற்றவர். சொல்லாடல்களில் இயல்பான நகைச்சுவையை முன் வைப்பவர். பாசாங்கற்ற, எளிமையான மொழியில் அமைந்தவை இவரது படைப்புகள். “ஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார்.” என்று [[வெங்கட் சாமிநாதன்]] குறிப்பிடுகிறார்.
[[File:Arumuka thatha.jpg|thumb|ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம்]]
== நூல்கள் ==
===== சிறுகதைத் தொகுப்புகள் =====
* ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம்
* நந்தவனத்துப் பறவைகள்
* பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்
* நரஸ்துதி காலம்
* காமதகனம்
* நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்
* அஃறிணை
* சராசரி இந்தியன்
* மனக்குப்பை
* தானும் அதுவாகப் பாவித்து
* கைத்தலம் பற்ற
* பிரபஞ்ச பூதங்கள்
* ஒரு துண்டு ஆகாயம்
* வித்யாசாகரின் ரசிகை
* புதுவெள்ளம்
* இல்லாததாய் இருக்கிறது
* நன்றி ஓ ஹென்றி
* நதிநீராடல்
* இறந்த காலத்தின் சாம்பல்
* யானைகளின் கானகம்
* பெருவெளிக் காற்று
* புகைப்படப் பிரதிகள்
* அரூபவித்து
* உயிரைச் சேமித்து வைக்கிறேன்
* கதைப் பெருங்கொத்துக்கள்
* படகுத்துறை
* ஆயிரங் காலத்துப் பயிர்
* இரண்டாயிரம் காலத்துப் பயிர்
* பெப்ருவரி-30
* யானைச் சவாரி
* லேப்டாப் குழந்தைகள்
* ஆகாயப் பந்தல்
* கடிகாரத்தை முந்துகிறேன்
* கனவு தேசத்து அகதிகள்
* வசீகரப் பொய்கள்
* பெண்கொற்றக்குடை
* சுனாமி
* காலம் விரித்த குடை
* நாணல் பைத்தியம்
* இருவர் எழுதிய கவிதை
* மௌனம் டாட் காம்
* எஸ். சங்கரநாராயணன் சிறுகதைகள் தொகுதி 1
* எஸ். சங்கரநாராயணன் சிறுகதைகள் தொகுதி 2
===== நாவல்கள் =====
* கிளிக்கூட்டம்
* மானுட சங்கமம்
* காலத்துளி
* கனவுகள் உறங்கட்டும்
* மற்றவர்கள்
* கிரண மழை
* கடல் காற்று
* நேற்று இன்றல்ல நாளை
* தொட்ட அலை தொடாத அலை
* முத்தயுத்தம்
* திசை ஒன்பது திசை பத்து
* கண்ணெறி தூரம்
* நீர்வலை
* நந்தவனத்துப் பறவைகள்
* வசீகரப் பொய்கள்
* இருவர் எழுதிய கவிதை
===== குறு நாவல்கள் =====
* பூமிக்குத் தலை சுற்றுகிறது
* விநாடியுகம்
* எஸ். சங்கரநாராயணன் குறுநாவல்கள் தொகுதி 1
* எஸ். சங்கரநாராயணன் குறுநாவல்கள் தொகுதி 2
===== கவிதை நூல்கள் =====
* கூறாதது கூறல் (கவிதை பம்பரம்)
* ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்)
* ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)
* திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்)
* கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி)
* தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்)
* நகுதற் பொருட்டு
* பூனையின் பாற்கடல்
* அகவெளிப் பறவை
===== தொகுப்பு நூல்கள் =====
* 1997-ன் சிறந்த கதைகள்
* 1998-ன் சிறந்த கதைகள்
* 1999-ன் சிறந்த கதைகள்
* இல்லாததாய் இருக்கிறது
* மாமழை போற்றுதும்
* பரிவாரம்
* ஜுகல்பந்தி
* அமிர்தம்
* வேலைசூழுலகு
* தருணம்
===== கட்டுரை நூல்கள் =====
* ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்
* உலகெனும் வகுப்பறை
===== மொழிபெயர்ப்பு நூல்கள் =====
* கனவுச் சந்தை - உலகச் சிறுகதைகள் தொகுதி-1
* வேற்றூர் வானம்-  உலகச் சிறுகதைகள் தொகுதி=2
* மேற்கு சாளரம் - உலகச் சிறுகதைகள் தொகுதி-3
* அயல்வெளி - உலகச் சிறுகதைகள் தொகுதி-4
* விடியல் முகம் - மூலம்: முல்க் ராஜ் ஆனந்தின் சாகித்ய அகாதமி பரிசு நாவல்
* முன்னணியின் பின்னணிகள் -சாமர்செட் மாமின் உலகப்புகழ் பெற்ற நாவல்
* பார்வை தொலைத்தவர்கள் - யோசே சரமாகோவின் நோபல் பரிசு 1994 பெற்ற போர்த்துக்கீசிய நாவல்
* பெரியவர் மற்றும் கடல் - எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் - தி ஓல்ட்மேன் அன் தி சீ
== உசாத்துணை ==
* [https://gnanakomali.blogspot.com/ எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் வலைத்தளம்: ஞானக்கோமாளி]
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11701 எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன்: தென்றல் இதழ் கட்டுரை]
* [https://www.youtube.com/watch?v=IyTsu9sXWys&ab_channel=MadhimugamTV எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன் நேர்காணல்: மதிமுகம் தொலைக்காட்சி]
* [https://www.commonfolks.in/books/s-sankaranarayanan எஸ். சங்கரநாராயணன் நூல்கள்]
* [https://solvanam.com/author/ssankara/ எஸ்.ஷங்கரநாராயணன் கதைகள்: சொல்வனம்]
* [https://www.sirukathaigal.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/ எஸ்.ஷங்கரநாராயணன் சிறுகதைகள்]
* [https://kavithai.com/poem/es-ssngkrnaaraaynnnnn-irnnttu-kvitaikll எஸ். சங்கரநாராயணன் கவிதைகள்]
* [https://kuvikam.tumblr.com/post/126729635582/%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B3-s%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B8-%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9 எஸ். சங்கடநாராயணன்: சிறுகதை விமர்சனம்: குவிகம் இணைய இதழ்]
* [https://bookday.in/speaking-book-vamsam-short-story-in-nandri-o-hendri-by-writer-s-sankaranarayanan-readed-by-sakthiyabhanu-jayarajan/ வம்சம் சிறுகதை: ஒலி வடிவம்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]

Latest revision as of 07:25, 24 February 2024

எழுத்தாளர் எஸ். சங்கரநாராயணன்
எஸ். சங்கரநாராயணன்

எஸ். சங்கரநாராயணன் (எஸ். ஷங்கரநாராயணன்; ஞானவள்ளல்; பிரம்மன்) (பிறப்பு: ஜூலை 28, 1959) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திரைக்கதை-வசன ஆசிரியர். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

எஸ்.சங்கரநாராயணன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜூலை 28,1959-ல் பிறந்தார். தொடக்கக்கல்வியை உள்ளூரில் பயின்ற இவர், உயர் கல்வி பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றினார். அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். மணமானவர். இரு மகன்கள். வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

இலக்கிய வாழ்க்கை

சங்கர நாராயணன், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்த நூலகத்தில் வெகுஜன இலக்கியம், தீவிர இலக்கியம், உலக இலக்கியம் என பல நூல்களை வாசித்துத் தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், சாமர்செட் மாம், ஹெமிங்வே, ஜாக் லண்டன், ஓ.ஹென்றி போன்றோரின் படைப்புகள் இவரை மிகவும் கவர்ந்தன. முதல் படைப்பு கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது வெளியானது. தொடர்ந்து வெகு ஜன இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள் எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரில் மற்றொரு எழுத்தாளரும் எழுதிக் கொண்டிருந்ததால், இவர், ‘ஷங்கரநாராயணன்’ என்ற பெயரில் எழுதினார். தற்போது ‘சங்கரநாராயணன்’ என்ற பெயரிலேயே எழுதி வருகிறார்.

சிறுகதை

ஆனந்த விகடன், சாவி, தினமணி கதிர், கணையாழி தொடங்கித் தமிழின் முன்னணி இதழ்கள் பலவற்றில் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை சங்கரநாராயணன் எழுதியிருக்கிறார். பொதுத் தலைப்பு ஒன்றை மையமாக வைத்துப் பல சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். ‘இருவர் எழுதிய கவிதை’ என்ற தொகுப்பு ஏழெட்டு மாதங்களே ஆன மழலைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு. முதுமையின் பிரச்னைகளைப் பேசும் கதைகளின் தொகுப்பு, ‘இரண்டாயிரம் காலத்துப் பயிர்’. இரவின் பின்னணி கொண்ட கதைகளின் தொகுப்பு ‘காலம் விரித்த குடை.’ ‘நாணல் பைத்தியம்’ பைத்தியங்களின் உலகைப் பேசுகிறது. எழுத்தாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ‘விரல் நர்த்தனம்’. ‘ஓ ஹென்றி’ பாணியில் சுவாரஸ்யமான முடிச்சுகள் கொண்ட கதைகளின் தொகுப்பு “நன்றி ஓ ஹென்றி”.

நாவல்

’நந்தவனத்துப் பறவைகள்’ என்பது சங்கரநாராயணனின் முதல் நாவல். இதனை ஔவை நடராசன் வெளியிட்டார். இந்த நூல் சங்கரநாராயணன் படித்த கல்லூரியில், முதுகலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டது. ‘இலக்கிய வீதி’ அமைப்பு சங்கரநாராயணனைத் தொடர்ந்து ஊக்குவித்தது.

மொழிபெயர்ப்பு

சங்கரநாராயணன், மொழிபெயர்ப்புகளுக்கும் முக்கியப் பங்களித்துள்ளார். வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ‘கனவுச் சந்தை’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார். ‘ரிச்சர்ட் பாஷ்’, ‘ஜான் அப்ஜய்’, ‘தாமஸ் மன்’, ‘ஜாக் லிண்டன்’, ‘சிங்லாண்ட் வைஸ்’ போன்றோரது சிறுகதைகள் அடங்கியது இத்தொகுப்பு. உலகச் சிறுகதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துப் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.

பிற பங்களிப்புகள்

சங்கரநாராயணனின் இரண்டு சிறுகதைகளைக் காட்சித் தொடராக்கி, தனது ‘கதை நேரம்’ தொடரில் வெளியிட்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. சென்னைத் தொலைக்காட்சியிலும் சங்கரநாராயணனின் சிறுகதைகள் நாடகமாக வெளியாகின. சில தொலைக்காட்சித் தொடர்களுக்கு, குறும்படங்களுக்கு வசனம் எழுதினார். திரைப்பட விவாதங்களிலும் பங்கெடுத்துள்ளார்.

சங்கரநாராயணனின் சிறுகதைகள் பலவும் ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது பல படைப்புகள் பல்கலைக் கழகங்களிலும், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள், குறுநாவல்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதை நூல்கள் என்று 95-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார், சங்கரநாராயணன்.

இருவாட்சி இலக்கியத் துறைமுகம் : ஆண்டு மலர்

இதழியல் வாழ்க்கை

சங்கரநாராயணன் ‘நிஜம் என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார். சென்னை புத்தக்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் ‘இருவாட்சி’ பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறார்.

விருதுகள்

  • திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு - ’தொட்ட அலை; தொடராத அலை' - நாவலுக்காக.
  • அக்னி அட்சர விருது - ‘நேற்று இன்றல்ல.. நாளை’ - நாவலுக்காக.
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நூலுக்கான விருது - ’நீர்வலை' நாவலுக்காக.
  • லில்லி தேவசிகாமணி விருது
  • அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
  • இலக்கியச் சிந்தனை விருது
  • இலக்கிய வீதியின் அன்னம் விருது
  • பாரத ஸ்டேட் வங்கி விருது
  • கவிதை உறவு இலக்கியப் பரிசு
  • தமிழக அரசின் 2018-ம் ஆண்டுக்கான ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ விருது
  • கம்பன் கழக விருது

இலக்கிய இடம்

பரந்துபட்ட கதைக்களங்களில் சுவாரஸ்யமான பல படைப்புகளைத் தந்தவர் எஸ். சங்கரநாராயணன். பல்வேறு உத்திகளை, பரிசோதனை முயற்சிகளை தன் படைப்புகளில் கையாண்டவர். கவிதை நடை கைவரப்பெற்றவர். சொல்லாடல்களில் இயல்பான நகைச்சுவையை முன் வைப்பவர். பாசாங்கற்ற, எளிமையான மொழியில் அமைந்தவை இவரது படைப்புகள். “ஷங்கர நாராயணன் நிறைய தமிழில் எழுதுவது மட்டுமல்ல; நிறைய ஆங்கிலம்வழி உலகளாவிய எழுத்துகளை ஒருவரால் முயன்று பெறும் அளவுக்கு அறிவார். தமிழ் எழுத்துகளையும் அயல்மொழி எழுத்துகளையும் நிறைய தொகுத்தும் கொடுத்திருக்கிறார்.” என்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிடுகிறார்.

ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • ஆறுமுகத் தாத்தாவின் ஏழாவது முகம்
  • நந்தவனத்துப் பறவைகள்
  • பிரசவ அறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்
  • நரஸ்துதி காலம்
  • காமதகனம்
  • நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்
  • அஃறிணை
  • சராசரி இந்தியன்
  • மனக்குப்பை
  • தானும் அதுவாகப் பாவித்து
  • கைத்தலம் பற்ற
  • பிரபஞ்ச பூதங்கள்
  • ஒரு துண்டு ஆகாயம்
  • வித்யாசாகரின் ரசிகை
  • புதுவெள்ளம்
  • இல்லாததாய் இருக்கிறது
  • நன்றி ஓ ஹென்றி
  • நதிநீராடல்
  • இறந்த காலத்தின் சாம்பல்
  • யானைகளின் கானகம்
  • பெருவெளிக் காற்று
  • புகைப்படப் பிரதிகள்
  • அரூபவித்து
  • உயிரைச் சேமித்து வைக்கிறேன்
  • கதைப் பெருங்கொத்துக்கள்
  • படகுத்துறை
  • ஆயிரங் காலத்துப் பயிர்
  • இரண்டாயிரம் காலத்துப் பயிர்
  • பெப்ருவரி-30
  • யானைச் சவாரி
  • லேப்டாப் குழந்தைகள்
  • ஆகாயப் பந்தல்
  • கடிகாரத்தை முந்துகிறேன்
  • கனவு தேசத்து அகதிகள்
  • வசீகரப் பொய்கள்
  • பெண்கொற்றக்குடை
  • சுனாமி
  • காலம் விரித்த குடை
  • நாணல் பைத்தியம்
  • இருவர் எழுதிய கவிதை
  • மௌனம் டாட் காம்
  • எஸ். சங்கரநாராயணன் சிறுகதைகள் தொகுதி 1
  • எஸ். சங்கரநாராயணன் சிறுகதைகள் தொகுதி 2
நாவல்கள்
  • கிளிக்கூட்டம்
  • மானுட சங்கமம்
  • காலத்துளி
  • கனவுகள் உறங்கட்டும்
  • மற்றவர்கள்
  • கிரண மழை
  • கடல் காற்று
  • நேற்று இன்றல்ல நாளை
  • தொட்ட அலை தொடாத அலை
  • முத்தயுத்தம்
  • திசை ஒன்பது திசை பத்து
  • கண்ணெறி தூரம்
  • நீர்வலை
  • நந்தவனத்துப் பறவைகள்
  • வசீகரப் பொய்கள்
  • இருவர் எழுதிய கவிதை
குறு நாவல்கள்
  • பூமிக்குத் தலை சுற்றுகிறது
  • விநாடியுகம்
  • எஸ். சங்கரநாராயணன் குறுநாவல்கள் தொகுதி 1
  • எஸ். சங்கரநாராயணன் குறுநாவல்கள் தொகுதி 2
கவிதை நூல்கள்
  • கூறாதது கூறல் (கவிதை பம்பரம்)
  • ஞானக்கோமாளி (கவிதாப் பிரசங்கம்)
  • ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)
  • திறந்திடு சீஸேம் (கவிதாவதாரம்)
  • கடவுளின் காலடிச் சத்தம் (கவிதை சந்நிதி)
  • தவளைக்கச்சேரி (கவிதைத் தூறல்)
  • நகுதற் பொருட்டு
  • பூனையின் பாற்கடல்
  • அகவெளிப் பறவை
தொகுப்பு நூல்கள்
  • 1997-ன் சிறந்த கதைகள்
  • 1998-ன் சிறந்த கதைகள்
  • 1999-ன் சிறந்த கதைகள்
  • இல்லாததாய் இருக்கிறது
  • மாமழை போற்றுதும்
  • பரிவாரம்
  • ஜுகல்பந்தி
  • அமிர்தம்
  • வேலைசூழுலகு
  • தருணம்
கட்டுரை நூல்கள்
  • ஒரு கொடி ஒரு கோட்டை ஒரு கொத்தளம்
  • உலகெனும் வகுப்பறை
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • கனவுச் சந்தை - உலகச் சிறுகதைகள் தொகுதி-1
  • வேற்றூர் வானம்- உலகச் சிறுகதைகள் தொகுதி=2
  • மேற்கு சாளரம் - உலகச் சிறுகதைகள் தொகுதி-3
  • அயல்வெளி - உலகச் சிறுகதைகள் தொகுதி-4
  • விடியல் முகம் - மூலம்: முல்க் ராஜ் ஆனந்தின் சாகித்ய அகாதமி பரிசு நாவல்
  • முன்னணியின் பின்னணிகள் -சாமர்செட் மாமின் உலகப்புகழ் பெற்ற நாவல்
  • பார்வை தொலைத்தவர்கள் - யோசே சரமாகோவின் நோபல் பரிசு 1994 பெற்ற போர்த்துக்கீசிய நாவல்
  • பெரியவர் மற்றும் கடல் - எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் - தி ஓல்ட்மேன் அன் தி சீ

உசாத்துணை


✅Finalised Page