கொல்லன் அழிசி: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 26: | Line 26: | ||
*[https://nallakurunthokai.blogspot.com/2016/02/145.html குறுந்தொகை - 145:Nallakurunthokai] | *[https://nallakurunthokai.blogspot.com/2016/02/145.html குறுந்தொகை - 145:Nallakurunthokai] | ||
*[https://nallakurunthokai.blogspot.com/2016/08/240.html குறுந்தொகை - 240:Nallakurunthokai] | *[https://nallakurunthokai.blogspot.com/2016/08/240.html குறுந்தொகை - 240:Nallakurunthokai] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|01-Jan-2026, 09:24:45 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 16:07, 1 January 2026
கொல்லன் அழிசி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கொல்லன் அழிசி சங்க காலப் புலவர்களில் ஒருவர். இரும்பு உருக்கி வேலை செய்யும் கொல்லத் தொழில் செய்தமையால் தம் பெயருக்கு முன்னால் தொழிலை குறிக்கும் 'கொல்லன்' என்று முன்னோட்டாகப் பெற்றார். 'அழிசி' என்னும் இயற்பெயர் கொண்டவர். சில ஏடுகளில் 'அழுசி' என்றும் பாட வேறுபாட்டுடன் இவரது பெயர் காணப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
கொல்லன் அழிசி பாடிய நான்கு பாடல்கள் குறுந்தொகையில் 26, 138, 145 மற்றும் 240-ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 26, 138, 145-ம் பாடல்கள் குறிஞ்சித் திணையில் அமைந்தவை. 240-ம் பாடல் முல்லைத் திணையில் அமைந்துள்ளது. 26-ம் பாடல் தலைமகளின் வேறுபாடு கண்டு நற்றாயும் செவிலித்தாயும் காட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்கையில் தலைவனின் செயலால் விளைந்த தலைவியின் நிலையை நினைத்துப் பார்க்கும் தோழி கூற்றாக உள்ளது. 138-ம் பாடல் இரவுநேரத்தில் வரும் தலைவனிடத்து தலைவியின் நிலையை விளக்கும் தோழி கூற்றாகவும் 145 மற்றும் 240-ம் பாடல்கள் தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவியின் கூற்றாகவும் அமைந்துள்ளன.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மலை நிலத்தில் வளரும் வேங்கை மரங்கள் கருத்த அடிப்பாகம் கொண்டவை. ஏராளமான பூக்களுடன் பூத்து குலுங்கும். அவற்றின் கிளைகளில் மயில்கள் நின்றிருக்கும். அம்மரத்தில் குரங்கு குட்டிகள் தாவித்தாவி ஆடும். மயில்கள் கிளையில் நின்றிருக்கும் காட்சி பூப்பறிக்கும் மகளிரை ஒத்திருக்கும்.
- தமது காதலரைப் பிரிந்து, அவருக்காக காத்திருக்கும் இளமகளிர் நொச்சி பூ மண்ணில் விழும் சத்தத்தையும் கேட்கும் உக்கிரமான மன எழுச்சியுடன் இருப்பர். வீட்டு முற்றத்தில் பொதுவாக ஏழிலை பாலை மரத்தை வளர்க்கும் வழக்கம் இருந்துள்ளது.
- ஊரார் உறங்குகையிலும் தமது காதலரை பிரிந்த மகளிர் தாம் மட்டும் உறங்காது விழித்திருந்து துயருறும் இயல்புடையவர்.
- முல்லை நிலத்தில் குளிர்காலத்தில் அவரைக் கொடிகள் நன்கு விளைந்திருக்கும். பல வகை காட்டு மலர்கள் பூத்திருக்கும். முல்லை பூ பூக்க தொடங்கி விட்டிருக்கும். அருகில் உள்ள மலைகள் பசுமையாக காட்சி அளிக்கும். இக்காட்சிகள் தம் காதலரை பிரிந்திருக்கும் மகளிருக்கு துயரத்தை அளிப்பதாக அமைகிறது. காட்டுப் பூக்களின் மலர்வு கிளி வாய்க்கும் முல்லைப்பூ பூனையின் பற்களுக்கும் ஒப்பிடப்பட்டது.
பாடல் நடை
குறுந்தொகை - 138
- திணை: குறிஞ்சி
- கூற்று: குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்
- குறுந்தொகை - 26:Nallakurunthokai
- குறுந்தொகை - 138:Nallakurunthokai
- குறுந்தொகை - 145:Nallakurunthokai
- குறுந்தொகை - 240:Nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2026, 09:24:45 IST