சபாபதி முதலியார்: Difference between revisions
Corrected typo errors; |
No edit summary |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 40: | Line 40: | ||
* பெரியபுராணம் (1870) | * பெரியபுராணம் (1870) | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0846.pdf அருணாசல சதகம்: மதுரைத்திட்டம்] | * [https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0846.pdf அருணாசல சதகம்: மதுரைத்திட்டம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|16-Aug-2023, 21:19:57 IST}} | {{Fndt|16-Aug-2023, 21:19:57 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 15:31, 12 October 2026
- சபாபதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சபாபதி (பெயர் பட்டியல்)
சபாபதி முதலியார் (காஞ்சிபுரம் சபாபதி முதலியார்) (1791-1871) தமிழ்ப் புலவர், சைவப்புலவர். சைவ நூல்களும், உரைகளும் எழுதினார். பழந்தமிழ், சைவ நூல்களைப் பதிப்பித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
சபாபதி முதலியார் காஞ்சிபுரத்தில் முத்துராமலிங்க முதலியாரின் தமையனுக்கு மகனாக 1791-ல் பிறந்தார். காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரின் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்தார். புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் இவரின் மாணவர்.
சிதம்பரம் சபாபதி பிள்ளை(இராமலிங்க சுவாமிகளின் அண்ணன்) இராமலிங்க சுவாமிகளை சபாபதி முதலியாரிடம் கல்வி கற்க அனுப்பினார். சபாபதி முதலியார் இராமலிங்க சுவாமிகளின் ஆன்மீக ஈடுபாட்டைக்கண்டு அவருக்கு உலகியல் தேவையில்லையென அவரது அண்ணனிடம் கூறித் திருப்பியனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள்
- சி.மீனாட்சிசுந்தரம்பிள்ளை
- தாண்டவராய சுவாமிகள்
- சபாபதிப்பிள்ளை
- பரசுராமப்பிள்ளை
இலக்கிய வாழ்க்கை
சபாபதி முதலியார் திருமுறையை முதன்முதலில் அச்சிட்டார். சைவசமய வினாவிளக்க விடையை இயற்றினார். தனிப்பாடல்கள் பல பாடினார். வரதுங்க ராமபாண்டியன் செய்த பிரமோத்திர காண்டத்துக்கு பொழிப்புரை இயற்றினார். திருவண்ணாமலையில் கோயில் கொண்ட அருணாச்சலேஸ்வரர் மேல் சதகம் பாடினார். சைவ எல்லப்ப நாவலரின் திருவிரிஞ்சைப் புராணத்திற்கு சபாபதி முதலியார் பொழிப்புரை வழங்கினார். சு.கிருஷ்ணசாமி முதலியார் 1861-ல் வெளியிட்ட 'பாலகாண்டம்' உரைப்பதிப்பிற்கு சபாபதி முதலியாரும், கோமளேசுவரன்பேட்டை இராசகோபாலபிள்ளையும் உதவினார் என்பர்.
இவரது சைவ சமய விளக்க வினாவிடையையும் டி.ஃபவுல்க்ஸ் (T.Foulkes) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். "The work Contains a useful Compendium of Saivism என்று ஜான் மர்டாக் தமது நூலில் கூறியுள்ளார்.
பதிப்பாளர்
சபாபதி முதலியார் பரிமேலழகரின் உரையைத்தழுவி எழுதப்பட்ட திருக்குறளை 1856-ல் பதிப்பித்தார். திருவாசகத்தை 1871-ல் பதிப்பித்தார். திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியை 1837-ல் திருவேங்கடாசல முதலியாரது சரஸ்வதி அச்சுக்கூடத்தில் பரிசோதித்து அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். பல நூல்கள் இவரது மேற்பார்வையில் அச்சிட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
மறைவு
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் 1871-ல் காலமானார்.
நினைவு
தமிழக அரசு சென்னை கொண்டித் தோப்பில் உள்ள ஒரு தெருவிற்கு 'காஞ்சிபுரம் சபாபதி முதலியார் தெரு'என்று பெயர் இட்டது.
நூல்பட்டியல்
- சைவசமய வினாவிளக்க விடை (1879)
- திருக்கழுக்குன்ற சிலேடை வெண்பா
- அருணாச்சல சதகம்
- திருக்குறள் உரை
- திருஞானசம்பந்த சுவாமிகள் தாலாட்டு
- திருக்குழந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்
- நீதிநெறி விளக்க உரை
- பிரமோத்தரக் காண்டப் பொழிப்புரை
பதிப்பித்தவை
- திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி (1837)
- பரமராசிய மாலை (1836)
- திருஞானசம்பந்த சுவாமிகள் திருமுறை (1864)
- தேவாரத் திருப்பதிகத் திருமுறை (1866)
- சுந்தரமூர்த்தி பதிகம்
- திருநாவுக்கரசர் பதிகம் (1867)
- பெரியபுராணம் (1870)
உசாத்துணை
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Aug-2023, 21:19:57 IST