under review

கடவுள் மாமுனிவர்‌: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 23: Line 23:


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|23-Apr-2025, 18:23:07 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:55, 21 December 2025

கடவுள் மாமுனிவர் (கடவுண்மாமுனிவர்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாதவூரர் புராணம் பாடினார். இவர் பொ.யு. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம் பாடினார். கச்சியப்ப முனிவருக்கு நண்பர். சந்தானச்சாரியார் பரம்பரையில் வந்தவர். மாமுனிவர் என்பது இவர் பெருமையை விளக்கச் சொல்லப்பட்டிருக்கலாம் என்றும், கடவுள் என்ற முன்னொட்டு எவ்வாறு வந்தது என்ற விவரமும் தெரியவில்லை என்பது தமிழறிஞர்கள் கருதினர்.

தொன்மம்

ஒருமுறை இவர் வயிற்று வலியினால் வருந்தியபோது கச்சியப்பர் இவரைப் பார்த்துத் திருவாதவூரடிகள் வரலாற்றினை ஒரு புராணமாகப் பாடினால் வயிற்றுவலி நீங்கும் என்று சொன்னார். இவரும் அவ்வாறே திருவாதவூரர் புராணத்தைப் பாடி முடிக்க இவருக்கு வயிற்றுவலி நீங்கிற்று என்பர்.

இலக்கிய வாழ்க்கை

கடவுள் மாமுனிவர் திருவாதவூரர் புராணம் பாடினார். இந்நூல் 544 செய்யுட்களைக் கொண்டது. இதன் ஆறாவது சருக்கத்தைச் சைமன் காசிச் செட்டி பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார். திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.

விவாதம்

"பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது. பொ.யு. 13-ம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது. எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14-ம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15-ம் நூற்றாண்டு என ஆகிறது." என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • திருவாதவூரர் புராணம்
  • காஞ்சிப்புராணம் இரண்டாம் காண்டம்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:23:07 IST